Daily Current Affairs
Here we have updated 22nd February 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழகச் செய்தி
- விமானங்கள் புறப்படுவதில் ஏற்படும் தாமதங்களை குறைக்க “விமான நிலைய ஒருங்கிணைந்த முடிவு (ஏ-சிடிஎம்)” என்னும் புதிய மென் பொருள் சென்னை விமான நிலையத்தில் அறிமுகம்.
- ஏற்கனவே இந்த மென்பொருள் மும்பை விமான நிலையத்தில் மட்டும் செயல்பாட்டில் உள்ளது.
- A-CDM – Airport Collaborative Decision Making
- பிப்ரவரி 22-26 வரை சென்னை-ராயப்பேட்டை சத்தியம் பி.வி.ஆர் திரையரங்கில் பதினோறாவது சர்வதேச குறும்பட விழா நடைபெற உள்ளது.
- தமிழக காவல் துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணியாற்றிய 544 காவலர்களுக்கு “தமிழக முதலவர் காவல் பதக்கம்” வழங்கப்படுகிறது.
- சென்னை மாநகராட்சி பகுதிகளில் “நிர்பயா நிதித் திட்டதின்” கீழ் நிகழ் நிதியாண்டில் 8,308 மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- நிர்பயா நிதித் திட்டம் – 2013
- மத்தி அரசின் “ஸ்வயம்”என்ற இணையதளம் மூலம் இலவசமாக வழங்கப்படும் கல்விச்சேவையை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அண்ணா பல்கலைக் கழகம் கல்வியியல் பல்லூடக ஆய்வு மையம் இயக்குநர் அருள்செல்வம் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
- இத்திட்டத்தின் மூலம் பயனையடை விரும்புவோர் www.swayam.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து உயர் கல்வி பெறலாம்.
- ஸ்வயம் தொடங்கிய நாள் – 9 ஜூலை 2017
- SWAYAM – Study Webs of Active-Learning for Young Aspiring Minds
- களக்காடு முண்டந்துறையில் சுற்றுச்சூழல் பூங்காவுடன், உயிர் பன்மை அருகாட்சியம் மற்றும் பாதுகாப்பு மையம் அமைப்பதற்கு தமிழக அரசு உத்தரவு.
- களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பம் (முதல் புலிகள் காப்பகம்) அமைக்கப்பட்ட ஆண்டு – 1976
- இங்கு 14 ஆறுகள் தோன்றுவதால் “நதிகள் சரணாலயம்” எனவும் அழைக்கப்படுகிறது.
தேசிய செய்தி
- நாட்டில் இணைவழி பணப் பரிவர்த்தனைகக்கு மிக விருப்பத்துக்குரிய தேர்வாக யுபிஐ உருவெடுத்து வருகிறது. விரைவில் ரொக்கப் பயன்பாட்டை எண்மப் பரிவர்த்தனை விஞ்சும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- பிரதமர் மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் முன்னிலையில் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்கிகாந்த தாஸ், சிங்கப்பூர் நிதி ஆணைய மேலாண் இயக்குநர் ரவி மேனன் ஆகியாேர் காணொலி வாயிலாக இந்த இணைப்பை தொடங்கி வைத்தனர்.
- இந்தியாவின் யூபிஐ சிங்கப்பூரின் எண்மப் பரிவத்தனை தளமான “பேநேவ்” இடையே எல்லை கடந்து இணைப்பு வசதி தொடக்கம்.
- UPI – Unified Payments Interface (11 April 2016)
- தலைமை – National Payments Corporation of India – 2008
- UPIஐ ஏற்றுக்கொண்ட முதல் நாடு – நேபாளம்
- .சிங்கப்பூரின் எண்மப் பரிவத்தனை தளமான “பேநேவ்” இணைப்பில் முதற்கட்டமாக இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ ஆகியவை பங்கெடுத்துள்ளன.
- இந்தியப் பயனாளர் நாளொன்றுக்கு ரூ.60,000 வரையில் (சிங்கப்பூர் டாலர் மதிப்பில் 1,000) பணம் அனுப்ப முடியும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
- வடகிழக்கு மண்டலத்தின் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததன் மூலம் வடகிழக்கு மண்டலம் வளர்ந்த மண்டமாக வேண்டும் என்ற வாஜ்பாயின் கனவு நனவாகியுள்ளது என குடியரசுத்தலைவர் தெரிவித்துள்ளார்
- முன்ளாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிகாலத்தில் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக வடகிழக்கு மண்டல மேம்பாட்டு அமைச்சகம் உருவகாக்கப்பட்டது.
- “பக்கே தீர்மானம்” மூலம் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அருணாசல பிரதேச மக்கள பிரதிநிதிகள் அக்கறை கொண்டுள்ளது மகிழ்சச்சி அளிக்கிறது என குடியரசுத்தலைவர் பெருமிதம்.
- அதிக விலையுள்ள மருந்துகளை இந்தியாவிலேயே தயாரித்து இறக்குமதியை குறைக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறதென மத்திய சுகாதாரம், ரசாயனம், உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு.
- “சுயச்சார்பு இந்தியா” திட்டத்தின் கீழ் மருந்துத் துறையில் 6 ஆண்டுகளில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீட்டில் இந்தியாவில் அதிக விலையுள்ள பொருள்களை தாயரிக்கும் திட்டம் 2021-ல் தொடங்கப்பட்டுள்ளது.
- பிப்ரவரி 21-ல் ஹைதரபாத்தில் “கண் நலனுக்கு ஒருகிணைந்த மக்கள்” என்ற தலைப்பில் 3 நாள் நிகழ்வு நடைபெற்றது.
- இந்நிகழ்வில் உலகம் முழுவதிலும் உள்ள பார்வை நோய்களைக் கொண்ட 220 கோடி பேரில் 30% தென்கிழக்கு ஆசியப் பகுதியில் உள்ளவர் என அறிவிப்பு.
- 2019-ல் இந்தப் பிராந்தியத்தில் 8.76 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கபட்டிருந்தனர். அவற்றில் 3.6 கோடி சர்க்கரை நோய் சார்ந்த கண் நோய் நோய்களாலும், 96லட்சம் பேர் சர்க்கரை நோய் சார்ந்த பார்வை இழப்பாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
- இந்தியாவின் வளர்ச்சிப் பணிக்களுக்கு 25 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்க விருப்பம் என ஆசிய வளர்ச்சி வங்கித் தலைவர் மஸட் சு அசகாவா தெரிவித்துள்ளார்.
- ஆசிய வளர்ச்சி வங்கி – 1966
- தலைமையகம் – மணிலா, பிலிப்பைன்ஸ்
- ரூ.100 லட்சம் கோடியில் செயல்படுத்த உள்ள “கதி சக்தி திட்டத்திற்கு” தேவையான ஒப்புதல் அனைத்தையும் ஏடிபி வழங்கும் என அறிவிப்பு
- மேலும் இந்தியாவுடன் 5 ஆண்டுகளுக்கான “கூட்டுறவு ஒப்பந்தத்தைக் கையொப்பம் இடும் பணியை ஏடிபி இறுதி செய்ய இருக்கிறது.
- பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்கு புலம் பெயர்ந்து அந்நாடுகளின் குடியுரிமை பெற்றோருக்கு சொந்தமான சொத்துகள் மூலம் ரூ.3,408 கோடி வருவாயை மத்திய அரசு ஈட்டியுள்ளது.
- சீனாவுடன் 1962-ல் போர், பாகிஸ்தானுடன் 1965-ல் உருவாகிய பின் இந்தியாவிலிலுள்ள மக்கள் சீனா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடம் பெயர்ந்த அங்கேயே குடியுரிமை பெற்றனர்.
- இந்தியாவில் உள்ள சொத்துக்களை குத்தகைக்கு விட்டு பணமாக்கும் நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.
- சொத்துக்கள் பட்டியில் உத்திரபிரதேசம், மேற்கு வங்கம், தில்லி ஆகியன இடம் பிடித்துள்ளன.
- எக்ஸ்டிஜ் மொத்த உள்நாட்டு பருவநிலை மாற்ற பாதிப்பு அபாயம் (கிராஸ்டொமெஸடிக் கிளைமேட் ரிஸ்க்) என்ற ஆய்வறிக்கையில் 2050-ம் ஆண்டு வாக்கில் அதிக அளவில் பாதிக்க வாய்ப்புள்ள மாநிலங்கள் பட்டியலில் முதல் 50 இடங்களில் இந்தியாவின் தமிழகம் உடப்பட 9 மாநிலங்கள் இடம் பிடித்துள்ளன.
- பீகார் – 22வது இடம்
- உத்திரபிரதேசம் – 25வது இடம்
- அஸ்ஸாம் – 28வது இடம்
- ராஜஸ்தான் – 32வது இடம்
- தமிழ்நாடு – 36வது இடம்
- மகாராஷ்டிரா – 38வது இடம்
- குஜராத் – 44வது இடம்
- பஞ்சாப் – 48வது இடம்
- கேரளம் – 50வது இடம்
உலகச் செய்தி
- அணு ஆயுதக் கையிருப்பை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள “நியூஸ்டார்ட்” ஒப்பந்த அமலாக்கத்தில் பங்கேற்பதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ரஷ்யா அறிவிப்பு
- 2010 இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
- 2011-ல் முடிவுக்கு வந்த ஒப்பந்தம் 2021 ஜோபைடன் அதிபரானது மேலும் 5 ஆண்டுக்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
விளையாட்டுச் செய்தி
- தெலுங்கானவில் நடைபெற்ற 41வது சப் ஜூனியர் பால் பாட்மின்டன் போட்டியில் தமிழகம், ஆடவர், மகளிர் இருபால் இரட்டையர், கலப்பு இரட்டையர் என அனைத்து பிரிவுகளிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
- மகளிர் பிரிவில் மட்டும் தமிழகம் தொடர்ந்து 6வது முறையாக சாம்பிய் பட்டம் வென்றுள்ளது.
- இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு அறிவிப்பு.
- எகிப்தில் நடைபெறும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10மீ ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் ருத் ராங்க்ஷ் பாட்டில் தங்கம் வென்றார்.
- இவருக்கு இது 2வது தங்கப்பதக்கம்.
- மகளிர் தனிநபர் 10மீ ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் திலோத்தமா வெண்கலம் வென்றுள்ளார்.