Daily Current Affairs
Here we have updated 22nd December 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.
தமிழக செய்தி
- தமிழக அரசின் சார்பில் 2021-ம் ஆண்டிற்கான 38பேருக்கு தமிழ்செம்மல் விருதும், 10 பேருக்கு மொழிபெயர்ப்பாளர் விருதும் வழங்கப்பட்டது.
- 2021-ம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் 51பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- மேலும் எட்டு பேரின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டள்ளது.
- இலக்கிய விருது – முனைவர் பால சுந்தரம் (கனடா)
- இலக்கண விருது – முனைவர் மனோன்மணி தேவி (மலேசியா)
- மொழியியல் விருது – முனைவர் ஆரோக்கிய ராஜ் (கொரியா)
- 2021-ம் ஆண்டிற்காகன மொழிபெயர்ப்பு விருதிற்கு “குழந்தை எழுத்தாளார் செ.சுகுமாரன்” தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- இவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தினை பூர்விகமாக கொண்டவர்.
- 2022-ம் ஆண்டிற்கான தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் விருதினை தங்கமலர் மதி என்ற பெண் காவலர் பெற்றுள்ளார்.
- கே.விஜயகுமார் “வீரப்பன்; சேசிங் தி பிரிகண்ட்” என்ற நூலினை எழுதியுள்ளார்.
- கே.விஜயகுமார் – 2004 அக்டோபர் 18-ல் சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்றவர்.
தேசிய செய்தி
- அமெரிக்கா, சீனா மீண்டும் கொரனா பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் தடுப்பூசி, முககவசம் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
- உலகளவில் சாராசரி கொரனா பாதிப்பு – 5.9லட்சம்
- இந்தியாவில் சாராசரி கொரனா பாதிப்பு – 158 என குறைந்துள்ளது.
- இந்தியாவில் 3 நபருக்கு புதிய ஒமக்ரான் BF7 கொரனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.
- அசுதோஷ் மாங்கே என்ற சிறுவன் மத்திய பிரதேசம், கட்னி மாவட்டதில் தூய்மை இந்தியா திட்ட தூதராக நியமிக்கப்பட்டுள்ளான்.
- இந்தியாவின் முதல் பசுமை எஃகு பிராண்டான “கல்யாணி ஃபெரெஸ்டா” புதுதில்லியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- திரிபுரா மாநிலத்தின் அகர்தலா அருகில் உள்ள உனகோடி சுற்றுலாத் தலம் “யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடங்கள் உத்தேசப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
உலகச் செய்தி
- ட்விட்டர் தலைமை பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் விலகல்.
- ஆப்கானிஸ்தானில் பெண்கள் பல்கலைக்கழகங்களில் பயில தடை விதிக்கப்பட்டுள்ளது.
- நேபாளத்தின் பிரதமரான ஷேர் பகதூர் தியூபா நேபாளி காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு செய்தி
- ஜசிசி சர்வதேச பெண்கள் டி20 தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு்ள்ளது.
- பேட்டிங் வரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 3வது இடத்திலும், ஷபாலி வர்மா 6வது இடத்தையைும், ஜெமிமா 10வது இடத்தையும் பிடித்துள்ளார்.
- ஆல்ரவுண்டர், பந்து வீச்சாளர் வரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா 3வது இடத்தை பிடித்துள்ளார்.
- உலக பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் தரவரிசை பட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி இணை 5வது இடத்தை பிடித்துள்ளனர்.
- 2023-ம் ஆண்டிற்கான உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி இந்தியாவின் புதுதில்லியில் மார்ச் 15-31 வரை நடைபெற உள்ளது.
முக்கிய தினம்
- தேசிய கணித தினம் (டிசம் 22).
- 2012 தேசிய கணித ஆண்டாகவும், டிசம்பர் 22-யை கணித தினமாகவும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.