Daily Current Affairs
Here we have updated 22-23th January 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழக செய்தி
- இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியல்லாத பணியாளர்களுக்கு தொகுப்பூதிய உயர்வுக்கான உத்தரவு-னை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார்.
- “நம்ம ஊர் பள்ளி” திட்டதிற்காக தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களுது ஒரு மாத ஊதியத்தை நன்கொடையாக வழங்கினர்.
- அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- தொடங்கப்பட்ட நாள் – 19.01.2023.
- ஜனவரி 21-ல் ஒடிசா மாநிலத்துடன் விளையாட்டு மேம்பாட்டு பணிகள் தொடர்பாக தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
- இளம் திறமையாளர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், விளையாட்டு விஞ்ஞானிகள் ஆகியோரின் திறமைகளை பரிமாறிக் கொள்ளவும், இரு மாநிலங்களுக்கு இடையில் விளையாட்டு உட்கட்டமைப்புகளை பகிர்ந்து கொள்ளவும், மேம்படுத்தவும் இந்த ஒப்பந்தம் வழி செய்திடும்.
- சென்னையில் ஆமைகளை பாதுகாப்பதற்கு தனித்துவமான மையத்தை எற்படுத்த தமிழக அரசு உத்தரவு.
- தமிழ்நாட்டில் 5வகையான ஆமைகள் இனங்கள் உள்ளன. இவற்றில் ஆலிவ் ரிட்லி வகை ஆமை இனங்கள் குறிப்பிடத்தக்கவை. இந்த வகை ஆமைகளை காக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
- 1974-ல் ஆமை குஞ்சு பொறிப்பகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய செய்தி
- ஜனவரி 26-ல் மூக்கு வழியாக செலுத்தும் இந்தியாவின் முதலாவது கரோனா தடுப்பு மருந்து “இன்கோவேக் (iNCOVACC)” அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.
- ஜனவரி 26-ல் தில்லியில் நடைபெறவுள்ள 74வது குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்திர பிரதேசம் உள்ளிட்ட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்க உள்ளது.
- கருப்பொருள் ; பெண் சக்தி
- ஜனவரி 23-ல் 11 சிறார்களுக்கு “ராஷ்டிரீய பால் புரஸ்கார்” விருதினை குடியரசுத்தலைவர் வழங்குகிறார்.
- கலை, கலாச்சாரம், வீர தீர செயல், புதுமை, சமூக சேவை, கல்வி மற்றும் விளையாட்டு உள்ளிட்ட 6 பிரிவுகளில் சிறந்து விளங்கிய 5 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறார்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
- தில்லியில் அனைத்து இந்திய காவல்துறை டிஜிபிக்கள், ஐஜிக்கள் மாநாடு 3 நாட்கள் நடைபெற்றது.
- மத்திய பிரதேசம், போபாலில் “இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா (IISF) – 2022” நடைபெறுகிறது.
- இதில் கலந்து கொண்டு சி.எஸ்.ஐ.ஆர் தலைமை இயக்குநர் என்.கலைச்செல்வி இந்தியா 2047-ல் அறவியில், தொழில் நுட்பத் துறையில் முன்மாதிரியாக திகழும் என தெரிவித்துள்ளார்
- அரசமைப்புச் சட்டத்தின் 50வது பிரிவின்படி நிர்வாகத் தலையீடு இல்லாமல் நீதித்தறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது.
- அரசமைப்பு சட்டத்தில் 99வது திருத்தத்தை மேற்கொண்டு தேசிய நீதிபதிகள் ஆணையத்தினை மத்திய அரசு அமைத்துள்ளது.
- ஒடிசா மாநிலத்தில் மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த “மிஷன் சக்தி” திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- டெல்லி குடியரசு தின விழா அணி வகுப்பில் கடற்கரை அணிக்கு திஷா அம்ரித் என்ற பெண் விமானி தலைமை தாங்க உள்ளார்.
- ரயில்வே மூலமாக நடப்பு நிதியாண்டில் ரூ.2.3லட்சம் கோடி வருவாய ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தினம்
- பராக்கிரம் திவாஸ்
Jan 14 Current Affairs | Jan 15-16 Current Affairs