Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 22 & 23rd March 2023

Daily Current Affairs

Here we have updated 22 & 23rd March 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழகச் செய்தி

  • சிறந்த அங்கக வேளாண் விவசாயிக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • இவ்விருதானது குடியரசு தினத்தற்கு வழங்கப்படுகிறது.
    • விருதுக்காக ரூ.5 லட்சம் பரிசுத் தொகை அளிகப்படுகிறது
  • தூத்துக்குடி மாவட்டத்தின் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் பனை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட உள்ளது.
  • ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (பிஎம் மித்ரா) திட்டத்தின் கீழ் ஏழு இடங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.
    • இதற்காக தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • இது இந்தியாவின் முதல் பிஎம் மித்ரா பூங்கா ஆகும்.
    • ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் சிப்காட் மூலம் உருவாக்கப்படுகிறது.
  • சிவகங்கை மாவட்டத்தின் சானாவயல் கிராமத்தில் மதுரையை மீட்ட முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

தேசிய செய்தி

  • மார்ச் 20-ல் வெளியிட்டப்பட்டுள்ள “இந்திய காடுகளின் அறிக்கை-2023”-ல் டெல்லி, சென்னை, ஹைதரபாத் மற்றும் மும்பை உள்ளிட்ட ஏழு முக்கிய நகரங்களில் காடுகளின் பரப்பு அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நேபாளம் பிரத் நகரில் இந்தியா-நேபாளம் இலக்கியத் திருவிழா நடைபெற உள்ளது.
    • நேபாளத்தின் பிரத்நகர் பெருநகர நகரமும், இந்தியாவின் மீரட்டின் கிராந்திதாரா இலக்கிய அகாடமியும் இணைந்து நடத்துகிறது.
  • மார்ச் 22-ல் சர்வதேச தொலைத் தொடர்பு சங்கத்தின் (ஐடியு) பகுதி அலுவலகம் மற்றும் புத்தாக்க மையத்தை தில்லியில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
    • நாடு முழுவதும் விரைவில் 100 இடங்களில் 5ஜி ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன
    • “கால் பிஃபோர் யுடிக்” என்ற கைப்பேசி செயலியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
    • ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு செயல்படம் சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் பகுதி அலுலகத்தை இந்தியாவில் அமைக்க 2022 மார்ச்சில் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
  • சீன நாட்டின் எல்லையில் பசுமை ஹைட்ரஜன் எரிசக்தி ஆலையை அமைக்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.
  • எப்ரல் 1 முதல் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா 603 நாட்கள் கொண்டாட கேரள அரசு முடிவு செய்துள்ளது.
    • வைக்கம் போராட்டம் 1924 மார்ச் 30 முதல் 1925-ம் ஆண்டு நவம்.23 வரை  603 நாள்கள் தொடர்ந்து நடந்து வெற்றிகரமாக முடிந்தது.
  • மார்ச 22-ல் தில்லியில் குடியரசுத்தலைவர் பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷண் விருதுகளை வழங்கியுள்ளார்.
    • பத்மஸ்ரீ விருது பெறுவோர்கள்
      1. ஜி.வேலுச்சாமி – சித்த மருத்தவர், தமிழகம்
      2. மாசி சடையன், வடிவேல் – பாம்பு பிடிக்கும் பழங்குடியினர்
      3. குப்பையா கலயாணசுந்தரம் – பரத நாட்டிய குரு, திருவிடைமருதூர்
      4. டாக்டர் நளினி பார்த்தசாரதி – புதுச்சேரி
    • பத்ம விபூஷண் விருது பெறுபவர்
      • எஸ்.எம். கிருஷ்ணா – கர்நாடாகா முன்னாள் முதல்வர்
    • பத்ம பூஷண் விருது பெறுபவர்
      • தொழிலதிபர் கே.எம்.பிர்லா

உலகச் செய்தி

  • பங்களாதேஷின் காக்ஸ் பஜாரில் அந்நாட்டின்  முதல் நீர்மூழ்கி கப்பல் தளமான “பிஎன்எஸ் ஷேக் ஹசீனா” திறந்து வைக்கப்பட்டுள்ளது.
    • பங்களாதேசின் நீர்மூழ்கி கப்பல் தளத்தை நிர்மானிக்கும் ஒப்பந்தம் சீனா-வுடன் கையெழுத்தானது.
  • இந்திய வம்சாவளி நடிகை மிண்டி கேலிங்க்கு அமெரிக்காவின் மதிப்புமிகக் கலைப் பதக்கத்தை ஜோபைடன் வழங்கினார்.
    • 2021-ம் ஆண்டுக்கான இந்தப்பதக்கம் மிண்டி கேலிங்கு வழங்கப்பட்டுள்ளது.
  • உலக மக்கள் தொகையில் 26% பேர் பாதுகாப்பற்ற நீரைப் பருகி வருவதாகவும், 46% பேர் அடிப்படை சுகாதர வசதிகளின்றி இருப்பதாகவும் ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும்  கலாச்சார அமைப்பு (யுனஸ்கோ) வெளியிட்டட “உலக நீர் மேம்பாட்டு அறிக்கை 2023”-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ல் “உலக தண்ணீர் தினம்” கடைபிடிக்கப்படுகிறது.
    • மார்ச் 22-ல் ஐ.நா.சபை சார்பில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நீர் குறித்தான மாநாடு அமெரிக்காவின் நியூயார்க்கில் தொடங்கியது

விளையாட்டுச் செய்தி

  • மத்தியபிரதேசத்தில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் ஆடவர் தனிநபர் ஏர் பிஸ்டலின் இறுதி சுற்றில் இந்தியாவின் சரப் ஜோத் சிங் தங்கம் வென்றார்
    • மேலும் இந்தியரான வருண்தோமருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

முக்கிய தினம்

  • உலக நீர் தினம் (மார்ச் 22).

 

Mar 19-20 Current Affairs  |  Mar 21 Current Affairs 

Leave a Comment