Daily Current Affairs
Here we have updated 22-23rd October 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
சென்னை நகரம்
- உலகின் பாதுகாப்பற்ற நகரங்களின் பட்டியலில் சென்னை 208வது இடத்தினை பிடித்துள்ளது. இதன் மூலம் சென்னை நகரமானது பாதுகாப்பான நகராமாக கருதப்படுகிறது.
- பாதுகாப்பற்ற நகரங்கள் பட்டியலில் முதலிடம் – காரகஸ் (வெனிசுலா), இரண்டாமிடம் – பிரட்டோரியா (தென்னாப்பிரிகா), மூன்றாமிடம் – போர்ட் மோஸ்பி (பப்பு நியூ கினியா) போன்ற நாடுகள் வகிக்கின்றன.
சென்னை ஐஐடி
- கணைய புற்றுநோயை முன்கூட்டிய கண்டறிய உதவும் உயிரி குறிப்பான் (பயோ-மார்க்கர்) தொழில் நுட்பத்தினை மேம்படுத்தும் ஆராய்ச்சியை சென்னை ஐஐடியின் ஆற்றல் சார் மையம் மேற்கொண்டு வருகிறது.
- கணைய புற்றுநோய் பாதிப்பில் இந்தியா 4வது இடத்தில் இருந்து வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் 2வது இடத்திற்கு முன்னேற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ககன்யான் திட்டம்
- மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒருபகுதியான ஆளில்லா சோதனை முதற்கட்டம் வெற்றி பெற்றள்ளது.
- இஸ்ரோ ககன்யான் திட்டத்தினை 2025 செயல்படுத்த உள்ளது.
- அதற்கு முன் 3கட்டமாக சோதனை செய்ய உள்ளது.
- முதற்கட்ட சோதனையில் 17 கி.மீ உயரம் வரை ஏவப்பட்ட மாதிரி விண்கலன் ராக்கெட்டிலிருந்து பிரிந்து வங்கக்கடலில் பாராசூட் மூலம் இறக்கப்பட்டது.
- அடுத்த திட்டமாக தரையிலிருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள புவி தாழ் வட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 3 வீரர்களை அனுப்பி மீண்டும் பூமிக்கு திரும்ப அழைத்து வர இஸ்ரோ முடிவு செய்துள்ளது.
உத்பவ் திட்டம் (Utbhav Scheme)
- பண்டைய கால இந்தியாவின் ராணுவ கலைகளை மீட்டுருவாக்கம் செய்யும் திட்டமான உத்பவ் திட்டதினை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
- இந்திய ராணுவமானது இந்திய ஐக்கிய சேவை நிறுவனத்துடன் (USI) இணந்து இத்திட்டத்தினை உருவாக்கியுள்ளது.
ஆதித்யா எல்-1
- ஆதித்யா எல்-1 விண்கலமானது ஜனவரி மாத முதல் வாரத்தில் செயல்படத் தொடங்கும் திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி அறிவித்துள்ளார்.
சந்திராயன் 1
- நிலவில் நீர் இருப்பதை கண்டறிவதற்காக சந்திராயன்-1 விண்ணில் (அக்டோபர்-22) ஏவப்பட்ட தினம்.
நூல் வெளியீடு
- ஓவியர் மணியம் நூற்றாண்டை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற விழாவில் மணியம் 100-சரித்திரம் படைத்த சித்திரங்கள் என்ற நூலினை நடிகர் சிவக்குமார் வெளியிடப்பட்டள்ளார்.
- சேர, சோழ, பாண்டியர், கால சிற்பங்களை ஓவியங்களாக கொண்டு வந்ததவர்
என்எல்சி இந்தியா கீரின் எனர்ஜி நிறுவனம்
- பழுப்பு நிலக்கரி நிறுவமான என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனமானது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை அதிகரிக்க துணைநிறுவனம் ஒன்றினை தொடங்கியுள்ளது.
- இத்துணை நிறுவனமான என்எல்சி இந்தியா கீரின் எனர்ஜி நிறுவனம் 20230-ஆம் ஆண்டுக்குள் 6 ஜிகாவாட் திறனுள்ள பசுமை மின்திட்டங்களை நிறுவ உள்ளதாக மத்திய நிலக்கரி அமைச்சர் தெரிவித்துள்ளது.
பாரா ஆசிய விளையாட்டு போட்டி
- ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கவேலு (தமிழ்நாடு) வெள்ளி வென்றுள்ளார்
ஆசிய ஜுனியர் பாண்மின்டன் போட்டி-சீனா
- 15வயதிற்கு உட்பட்ட ஆடவர் பிரிவில் போர்னில் ஆகாஷ் சாங்மாய் (இந்தியா) தங்கம் வென்றுள்ளார்.
- 17வயதிற்குட்பட்ட மகளிர் பிரிவில் தன்வி சர்மா (இந்தியா) வெள்ளி வென்றுள்ளார்.
ஜப்பான் ஆடவர் டென்னிஸ் போட்டி-டோக்கியோ
- ஆடவர் ஒற்றையர் பிரிவில் பென் ஷெல்டன் (அமெரிக்கா) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
- இரட்டையர் பிரிவல் ரிங்கி ஹஜிகிடா/மேகஸ் பர்செல் கூட்டணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
ஜியாங்ஷி ஓபன் டென்னிஸ் போட்டி-சீனா
- மகளிர் டென்னிஸ் போட்டியில் கேத்திரினா சினியாகோவா (செக்குடியரசு) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
பாபி சார்ல்டன்
- இங்கிலாந்து கால்பந்து வீரரான பாபி சார்ல்டன்(86) காலமானர்.
சர்வதேச திணறல் விழிப்புணர்வு தினம் (International Stuttering Awareness Day) – Oct 22
மோல் தினம் (Mole Day) – Oct 23
- 1 மோல் = 6.022 x 023