Daily Current Affairs
Here we have updated 22nd August 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
முதலீட்டாளர்கள் மாநாடு
- தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் தொடங்கியது
புவனேஸ்வரி குழு
- பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை விசாரிக்க புவனேஸ்வரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
லதா மங்கேஷ்கர் விருது
- மத்திய பிரதேசத்தின் லதா மங்கேஷ்கர் விருதானது தமிழகத்தை சேர்ந்த பாடகி கே.எஸ்.சித்ராவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் இசையமைப்பாளர் உத்தம் சிங்கிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பணிக்குழு
- சுரேஷ் படா மத் (Suresh Bada Math) தலைமையில் மருத்துவ மாணவர்களின் மனநலம் நல்வாழ்வுக்கான தேசிய பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆர்த்தி சரின்
- ஆர்த்தி சரின் (Arti Sarin) தலைமையில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 பேர் கொண்ட தேசிய பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
- இக்கமிட்டியை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
சார்ஜிங் நிலையங்கள்
- அதிக பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் கர்நாடாகாவில் உள்ளது.
போலியோ தொற்று
- தற்போது மேகாலயாவில் தடுப்பூசியால் போலியோ தொற்று ஏற்பட்டுள்ளது.
- 2014-ல் உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை போலியோ இல்லாத நாடாக அறிவித்துள்ளது.
- குழந்தைகளுக்கு போலியோ வராமல் தடுக்க ORV (Oral Polio Vaccine) தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
அரசியலமைப்பு அருங்காட்சியகம்
- இந்தியாவின் முதல் அரசியலமைப்பு அருங்காட்சியகம் ஹரியானா மாநிலத்தில் அமைக்கப்பட உள்ளது.
புதுதில்லி
- முதல் கொள்கை வகுப்பாளர்கள் மன்றம் புதுதில்லியில் தொடங்கப்பட்டுள்ளது.
பர்வதனேனி ஹரிஷ்
- ஐக்கிய நாடுகள் சபையின் (UN) இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக பர்வதனேனி ஹரிஷ் (Parvathaneni Harish) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜெய்ஷா
- ஜசிசியின் புதிய தலைவராக ஜெய்ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
எம்.சுரேஷ்
- இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) இடைக்காலத் தலைவராக எம்.சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
- AAI – Airports Authority of India – 01.04.1995
சிறந்த விமான நிலையம்
- 2024-ஆம் ஆண்டிற்கான சிறந்த விமான நிலையமாக ஹைதரபாத்தின் ராஜீவ்காந்தி விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மகளிர் டி20 உலகக் கோப்பை
- வங்கதேசத்தில் நடைபெற இருந்த ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாரா ஒலிம்பிக் 2024
- பாரா ஒலிம்பிக் போட்டியானது பாரிஸ் நடைபெற உள்ளது.
- இந்தியா சார்பில் சுமித் ஆண்டில், பாக்யஸ்ரீ ஜாதவ் இந்திய கொடியை ஏந்த உள்ளனர்.
- சத்ய பிரகாஷ் சங்வா் செஃப் டி மிஷனாக (வீரர்கள் குழு தலைவர்) நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் தொடக்கத்தில் பி.வி.சிந்து, சரத் கமல் இருவரும் தேசிய கொடியினை ஏந்தி சென்றனர்.
- பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் முடிவில் ஸ்ரீஜேஷ், மனுபார்க்கர் இருவரும் தேசிய கொடியினை ஏந்தி சென்றனர்.
முக்கிய தினம்
சென்னை தினம் (Madras Day) – ஆகஸ்ட் 22