Daily Current Affairs
Here we have updated 22nd December 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
மக்களைத் தேடி மருத்துவம்
- 1.67 கோடி பேர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றுள்ளதாக தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- மக்களைத் தேடி மருத்துவம் – 05.08.2021 (கிருஷ்ணகிரி)
- அனைவருக்கும் தரமான கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
அலுவல் மொழி
- சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டுமென மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ரவிகுமார் வலியுறுத்தியுள்ளார்.
- விதி 348(2) – குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் இந்தி அல்லது வேறு மொழியை உயர்நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக பயன்படுத்தலாம்.
- இதனை செயல்படுத்தும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது.
கூடுதல் பொறுப்பு
- முன்னாள் அமைச்சர் பொன்முடி வகித்த உயர் கல்வித்துறை பொறுப்பானது அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
- ராஜகண்ணப்பன் தற்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
சென்னை சர்வதேச திரைப்பட விழா
- சென்னையில் 14.12.2023-ல் தொடங்கிய 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நிறைவு பெற்றுள்ளது.
- சிறந்த படம் – அயோத்தி
- சிறந்த குறும்படம் – லாஸ்ட் ஹார்ட் (பகவத் – இயக்குநர்)
- சிறந்த நடிகை – ப்ரீத்தி அஸ்ரானி
- சிறந்த நடிகர் – வடிவேல் (மாமன்னன்)
- சிறந்த ஒலிப்பதிவாளர் – சுரேன் (மாமன்னன்)
- சிறந்த ஒளிப்பதிவாளர் – கலைச்செல்வன் சிவாஜி (போர்தொழில் பட ஒளிப்பதிவாளர்)
- சிறப்பு ஜூரி விருது – இயக்குநர் வெற்றிமாறன்
புரிந்துணர்வு ஒப்பந்தம்
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு (TNSTC) 552 பேருந்துகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டது.
- ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
- தமிழகத்தில் 18,447 அசோக் லேண்ட் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அழகான விமான நிலையம்
- கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையமானது உலகின் மிக அழகான விமான நிலையங்களுள் ஒன்றாக தேர்வாகியுள்ளது.
- மேலும் யுனெஸ்கோவின் 2023 பிரிக்ஸ் வெர்சாய்ஸில் சிறப்பு பரிசையும் வென்றுள்ளது.
- இவ்விமான நிலையமானது பெங்களூருவில் (கர்நாடகம்) அமைந்துள்ளது.
- கர்நாடாகவின் முதல் சூரிய சக்தி விமான நிலையம் ஆகும்.
புதிய ரயில் சேவை
- டிசம்பர் 24-ல் கோவை-பொள்ளாச்சி இடையேயான புதிய முன்பதிவில்லா விரைவு ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
- இந்த ரயில் சேவையை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைக்க உள்ளார்
மசோதா நிறைவேற்றம்
- இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் ஆகியோரது நியமனம், பணி நிபந்தனைகளை ஒழுங்குபடுத்தும் மசோதா மாநிலங்களைவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமனம் குறித்து 1991-ல் சட்டம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பத்திரிக்கை பதிவு மசோதா
- பத்திரிக்கை மற்றும் பருவ இதழ்கள் பதிவுக்கான நடைமுறையை எளிமைப்படுத்தும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
- ஆங்கிலேயர்களால் இயற்றப்பட்ட பத்திரிக்கை மற்றும் பதிவுச் சட்டம் 1867-க்கு பதிலாக இம்மசோதோ கொண்டு வரப்பட்டது.
வாட்ஸ்அப் சேனல்
- உத்திரபிரதேச கால்துறையானது அனைத்து மாவட்டங்களுக்கு வாட்ஸ்அப் சேனல்களை அறிமுகம் செய்துள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
- இந்திய கடலோர காவல்படைக்கு புதிதாக 6 ரோந்து படகுகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
- இதற்காக மும்பை மசாகான் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தமான்றை மேற்கொண்டுள்ளது.
Paat-Mitro மொபைல் செயலி
- சணல் பற்றி விவரங்களையும் அதற்காக அரசு செயல்படுத்தும் திட்டங்களையும் அறிவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- மத்திய ஜவுளித்துறை அமைச்சகமானது இச்செயலியை தொடங்கியுள்ளது.
விமான சேவை
- நாட்டில் 15 விமான நிலையங்களில் 164 விமானங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா மக்களவையில் தெரிவித்துள்ளார்.
- தில்லி விமான நிலையத்தில் 64 விமானங்களும், பெங்களூருவில் 27 விமானங்களும், மும்பையில் 24 விமானங்களும், சென்னையில் 20 விமானங்களும் அடங்கியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
- 01.04.1995-ல் இந்திய விமான நிலையங்கள் ஆணையமானது (AAI) அமைக்கப்பட்டுள்ளது.
- AAI – Airports Authority of India
- தலைமையகம் – ராஜீவ் காந்தி பவன்,
சஃப்தர்ஜங் விமான நிலையம், புது தில்லி
லீஃப் எரிக்சன் லூனார் விருது
- சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்காக 2023 எரிக்சன் லூனார் விருதானது இஸ்ரோவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
- ஐஸ்லாந்தின் ஆய்வு அருங்காட்சியகமானது இவ்விருதினை வழங்கியுள்ளது.
உலகளாவிய கொலை அறிக்கை 2023
- இந்தியாவில் நடைபெறும் 5 கொலைகளில் ஒரு கொலை தண்ணீருக்காக நடைபெறுவதாக UNODC-ன் உலகளாவிய கொலை அறிக்கை 2023-ல் தெரிய வந்துள்ளது.
- UNODC – United Nations Office on Drugs and Crime – 1997
மிக நீண்ட இரவு
- இந்த ஆண்டின் மிக நீண்ட இரவாக 21.12.23-ன் இரவு திகழ்ந்துள்ளது.
- பூமியின் சாய்ந்த பகுதியில் வெயில்படாதபோது மிக நீண்ட இரவு உருவாகியது.
புதிய சேவை திட்டம்
- மூத்த குடிமக்களுக்கு சேவை அளிக்கும் விதமாக இன்ஸ்பையர் என்னும் புதிய திட்டத்தினை பந்தன் வங்கி அறிமுகம் செய்துள்ளது.
சென்னை செஸ் சாம்பியன்ஷிப்
- சென்னை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் டி.குகேஷ் (தமிழ்நாடு) சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
- தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சார்பில் சென்னை செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது.
சாக்ஷி மாலிக் – விலகல்
- இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- சாக்ஷி மாலிக் மல்யுத்தத்திலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
தேசிய கணித தினம் (National Mathematics Day) – Dec 22
- இராமானுஜம் எண் – 1729
December 20 Current Affairs | December 21 Current Affairs