Daily Current Affairs
Here we have updated 22nd February 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை
- தமிழகத்தில் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, அரசியலில் பெண்களின் நிலையை மேம்படுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கையை வெளியிட்டுள்ளார்.
- இக்கொள்கையானது தொலைநோக்கு பார்வையுடன், சமூக நீதி, சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
- தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கையானது 10 வருடங்கள் அமலில் இருக்கும்.
மானியம் வழங்கல்
- வேலைவாய்ப்பில் சமூக நீதியை ஊக்குவிக்கும் புதிய நிறுவனங்களுக்கு 10% மானியத்தினை வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணைய மசோதா
- தமிழகத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க தமிழக சட்டப்பேரவையில் மசோதாவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- நெடுஞ்சாலைகளின் கட்டுமானம், மேம்பாடு மற்றும் மேலாண்மை பற்றி ஆலோசனைகளை வழங்க உருவாக்கப்பட உள்ளது.
- இவ்வாணையத்தில் ஒரு தலைவர், 3 பகுதி நேர உறுப்பினர்கள், 3 முழு நேர உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளன.
- இவர்கள் 62 வயது வரை பணிபுரியலாம்.
பல்கலைக்கழக பதிவாளர் ஓய்வு மசோதா
- பல்கலைக்கழக பதிவாளர் ஓய்வு வயதினை 60-தாக உயர்த்தும் பல்கலைக்கழக பதிவாளர் ஓய்வு மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
செவாலியர் விருது
- பிரெஞ்சு அரசானது சசிதரூர்-க்கு செவாலியர் விருது வழங்கியுள்ளது.
கர்நாடகம்
- கர்நாடாகாவில் மக்களுக்கு கண் சிகிச்சை சேவை வழங்க ஆஷா கிரணா (Asha Kirana) எனும் திட்டத்தினை கர்நாடாக முதல்வர சித்தராமையா தொடங்கி வைத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- கிருஹ லட்சுமி – குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை
- சக்தி திட்டம் – மகளிருக்கு இலவச பேருந்து
- யுவநிதி திட்டம் – வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.3,000, பட்டதாரிகளுக்கு ரூ.1,500 உதவித்தொகை
- கிருஹஜோதி திட்டம் – 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்
- அன்னபாக்யா – 5 கிலோ அரிசி + 5கிலோ அரிசிக்கான பணம்
மூத்த குடிமக்கள் பராமரிப்பில் சீரமைப்பு அறிக்கை
- நிதி ஆயோக் வெளியிட்டுள்ள மூத்த குடிமக்கள் பராமரிப்பில் சீரமைப்பு அறிக்கையில் 2050-ல் இந்திய மக்கள் தொகையில் 19.5% பேர் மூத்தோர்களாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தற்போது 10% பேர் மூத்தோர்களாக உள்ளன.
மிலன் பயிற்சி
- 12வது மிலன் எனும் கூட்டு கடற்பயிற்சியானது விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.
- இப்பயிற்சியில் 50 நாடுகள் பங்கேற்கின்றன.
ரயில்வே சுரங்கப்பாதை
- டி50 என்னும் நாட்டின் நீளமான ரயில்வே சுரங்கப்பாதை ஜம்மு-காஷ்மீரில் தொடங்கப்பட்டுள்ளது.
- பனிஹால் – காரி – சம்பர் – சங்கல் வழித்தடத்தில் 12.77 கிமீ அளவில் அமைக்கப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேசம்
- உத்திரப்பிரதேசத்தின் சாடப்பூரில் 50வது ஆண்டு கஜுராஹோ நடன விழா நடத்தப்பட்டுள்ளது.
முதல் மின்சார ரயில் சேவை
- ஜம்மு காஷ்மீரின் முதலாவது மின்சார ரயில் சேவையானது ஸ்ரீநகர் மற்றும் சங்கல்தான் இடையே துவங்கப்பட்டுள்ளது.
இமயமலை கூடை
- உத்திரகாண்ட் மாநிலமானது இமயமலை கூடை எனும் திட்டத்தினை கொண்டு வந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- நாட்டின் முதல் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை – உத்திரகாண்ட்
- பொதுசிவில் சட்ட மசோதவை நிறைவேற்ற உள்ள மாநிலம் – உத்திரகாண்ட்
ரைசினா உரையாடல்
- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன் இணைந்து புவிசார் அரசியல் மற்றும் புவி பொருளாதாரம் குறித்த இந்தியாவின் முதன்மை மாநாடான ரைசினா உரையாடல் புதுதில்லியில் நடைபெறுகிறது.
- இம் மாநாட்டில் கீரிஸ் நாட்டின் பிரதமரான கிடிரியகோஸ் மட்சோடாகிஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.
சோதனை வெற்றி
- திருநெல்வேலி, மகேந்திரகிரியில் ககன்யான் திட்டத்திற்கான சிஇ 20 கிரையோஜெனிக் என்ஜின் இறுதிகட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளது.
- ககன்யான் திட்டம் – 400 கி.மீ. தொலைவில் புவிதாழ் வட்டப்பாதைக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டமாகும்.
விமான கண்காட்சி
- சிங்கப்பூரில் ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சியானது நடைபெற்றது.
கிளாசிக்கல் செஸ் போட்டி
- இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 வயதான அஷ்வத் கெளசிக் (சிங்கப்பூர்) 37 வயதான கிராண்ட் மாஸ்டரான ஜாசெக் ஸ்டோபோ-வை (போலந்து) தோற்கடித்து சாதனை புரிந்துள்ளார்.
- கிரான்ட் மாஸ்டரை மிக இள வயதில் வென்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார்
ஃபாலி நாரிமன்
- இந்திய நீதித்துறையின் பீஷ்ம பிதாமகனான ஃபாலி நாரிமன் காலமானார்.
- இந்தியாவின் சட்ட நிபுணரும், மூத்த வழக்கறிஞரும் ஆவார்
- பதம் பூஷண் – 1991, பத்மவிபூஷண் (2007)
உலக சிந்தனை தினம் (World Thinking Day) – Feb 22
உலக சாரணர் தினம் (World Scout Day) – Feb 22
- கருப்பொருள்: Our World, Our Thriving Futrue.
February 20 Current Affairs | February 21 Current Affairs