Daily Current Affairs
Here we have updated 22nd January 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பள்ளிச் சாரம்
- அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களை ஒருங்கிணைந்து பள்ளி வளர்ச்சிக்கு உதவ பள்ளிச் சாரம் என்னும் புதிய வலைப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
மாநில சின்னம்
- திரிபுரா மாநிலம் தனக்காக புதிய மாநில சின்னத்தினை உருவாக்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- தலைநகரம் – அகர்தலா
- மாநிலம் உருவாக்கப்பட்ட நாள் – 21.01.1972
- மக்கள்தொகை – 36,73,917 (2011 கணக்கெடுப்பு)
- பாலின விகிதம் – 960
- மக்கள் தொகை அடர்த்தி – 350
தமிழ்நாடு சின்னம்
- உருவாக்கப்பட்ட ஆண்டு – 1949
- உருவாக்கியவர் – கிருஷ்ணாராவ்
- இச்சின்னத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரத்தினை பரிந்துரை செய்தவர் – டி.கே.சிதம்பரனார்
- “சத்தியமேவ ஜெயதே” என்ற வார்த்தைக்கு பதிலாக “வாய்மையே வெல்லும்” என்ற வார்த்தையை மாற்றியவர் – அண்ணா
கருவுறுதல் விகிதம்
- இந்தியாவில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது.
இதற்கான காரணங்கள்
- அதிகரிக்கும் மலட்டுத்தன்மை விகிதங்கள்
- பெண்களுக்கு அதிகாரமளித்தல்
- இடப்பெயர்வு
ஆந்திரப்பிரதேசம்
- தேசிய வணிக வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் ஆந்திரப்பிரதேசத்தின் ராஜமுந்திரி பகுதியில் அமைந்துள்ளது.
விமான டாக்ஸி
- சரளா ஏவியேசன் இந்தியாவின் முதல் விமான டாக்ஸிக்கான முன்மாதிரியை வெளியிட்டுள்ளது.
கடற்படை பயிற்சி
- இந்தியா உள்பட பல நாடுகள் கலந்த கொள்ளும் லா பெருஸ் (La Perouse) கடற்படை பயிற்சியை பிரான்ஸ் நடத்துகிறது.
- இதில் இந்தியாவிற்காக INS Mumbai கப்பல் கலந்து கொள்கிறது.
உலக பொருளாதார மன்றம் 2025
- சுவிட்சர்லாந்தின் டாவோஸில் உலக பொருளாதார மன்றம் (WEF) 2025 ஆண்டு கூட்டமானது நடைபெற உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- WEF – World Economic Forum -1971
நைஜீரியா
- பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பின் 9வது கூட்டாளி நாடாக நைஜீரியா இணைந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- BRICS – 2009
- B – பிரேசில்
- R – ரஷ்யா
- I – இந்தியா
- C – சீனா
- S – தென்னாப்பரிக்கா
இக்கூட்டமைப்பின் உறுப்பினர்கள்
- பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பரிக்கா, எகிப்து, ஈரான், எத்தியோப்பியா, UAE, இந்தோனேசியா
அமெரிக்கா விலகல்
- தற்போது உலக சுகாதார அமைப்பில் (WHO) இருந்து அமெரிக்கா விலகி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- WHO – 7.4.1948
- இதன் தலைமையகம் – ஜெனிவா, சுவிட்சர்லாந்து
வைஷ்ணவி சர்மா
- U19 மகளிருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வீராங்கனையான வைஷ்ணவி சர்மா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.
- ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீராங்கனை ஆவார்.
- இவர் மேலும் 5 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழத்தியுள்ளார்.