Daily Current Affairs
Here we have updated 22nd June 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
விருது பெயர் மாற்றம்
- மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கு கல்வி பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற விருதிற்கு ஹெலன் கெல்லர் விருது என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோ மானியம்
- 1000 பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படவுள்ளதாக தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது
மணிக்குமார்
- தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக மணிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- பிரதமர், சபாநாயகர், உள்துறை அமைச்சர், எதிர்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய குழு தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பெயரினை பரிந்துரைக்கிறது.
- தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்.
- பதவிக்காலம் – 3 ஆண்டுகள் (அ) 70 வயது
இடைக்கால சபாநாயகர் (Pro Tem Speaker)
- பர்த்ருஹரி மஹ்தாப் 18வது லோக்சபாவின் இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இவர் குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இடைக்கால சபாநாயகர் – விதி 95 (1)
தொடர்புடைய செய்திகள்
- இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட MPகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
- மேலும் சபாநாயகர் தேர்தலை நடத்தி வைக்கிறார்.
- சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்ப்ட்ட பின் இவர் பதவி ரத்தாகிவிடும்.
ஒரு நபர் ஆணையம்
- கள்ளக்குறிச்சி விஷச்சாரய சம்பவம் பற்றி விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
- இந்த விஷச்சாரயத்தில் மெத்தனால் கலந்துள்ளது.
- மெத்தனால் – CH3OH
தொடர்புடைய செய்திகள்
- குஜாராத், பீகார் மாநிலங்களில் விதி 47-ன் பூரண மது விலக்கு கடைபிடிக்கப்படுகிறது.
ராணுவ துணைத் தலைவர்
- ராஜா சுப்ரமணி இந்திய ராணுவ துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- இந்திய ராணுவ தலைவராக உபேந்திரா திவேதி நியமிக்கப்பட்டுள்ளார்.
சுயசரிதை
- பில்கேட்ஸ் தன் இளமைகால வாழ்க்கையை Source Code: My Beginnings என்ற நூலில் எழுதியுள்ளார்.
ஃபிலிமோன் யாங்
- ஐ.நா.பொதுச் சபையின் 79வது அமர்வின் தலைவராக கேமரூன் நாட்டின் முன்னாள் பிரதமரான ஃபிலிமோன் யாங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உலக மழைக்காடுகள் தினம் (World Rainforest Day) – ஜூன் 22
- கருப்பொருள்: Empowering the world in Defense of Our Rainforests