Daily Current Affairs
Here we have updated 22nd November 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
கீரின் ஆப்பிள் விருது
- சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) கீரின் ஆப்பிள் விருதனை பெற உள்ளது.
- லண்டனில் கார்பன் குறைப்பு பிரிவின் கீழ் இவ்விருதானது வழங்கப்படுகிறது.
- CMRL – Chennai Metro Rail Limited
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்திற்கு உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான முறைப்படுத்தம் திட்டத்தில் குடியரசுத்தலைவரின் சிறந்த செயல் திறன் விருதானது கிடைத்துள்ளது.
ஸ்ரீவைகுண்டம் அணை
- சர்வதேச நீர்பாசனம் மற்றும் வடிகால் ஆணையம் சார்பில் உலக பாரம்பரிய நீர்ப்பாசன கட்டமைப்புக்கான சர்வதேச விருதானது தூத்துக்குடியிலுள்ள ஸ்ரீவைகுண்டம் அணைக்கு வழங்கப்பட்டள்ளது.
- இந்த அணையானது 150 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டுள்ளது.
சமுதாய புற்றுநோய் பரிசோதனை திட்டம்
- தமிழகத்திலுள்ள 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் கண்டறிய சமுதாய புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- தமிழக சுகாதாரத்துறை சார்பில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- முதற்கட்டமாக ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஈரோடு, கன்னியாகுமாரி மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தி சோதனை செய்யப்பபடஉள்ளது.
வாரியம் அமைப்பு
- ஆற்றங்கரைகளை மீட்டெடுக்க தமிழக அரசு வாரியமொன்றை அமைக்க உள்ளது.
- அடையாறு ஆற்றை மீட்டெடுப்பதை நோக்கமாக கொண்டு துவங்கப்படுகிறது.
- இதற்காக சென்னை நதிகள் உருமாற்ற நிறுவனமானது துவக்கப்பட உள்ளது.
டோனி மைக்கேல்
- இந்திய கடலோரக் காவல் படையின் கிழக்கு பிராந்திய புதிய தளபதியாக டோனி மைக்கேல் பொறுப்பேற்றுள்ளார்.
எஸ்.எஸ்.பத்ரிநாத்
- சங்கர நேத்ராலயா குழுமத்தின் நிறுவனரும், பிரபல கண் மருத்துவ நிபுணருமான டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் காலமானார்.
- பத்மஸ்ரீ, பத்மபூஷண், டாக்டர் பி.சி.ராய் விருதுகளை பெற்றுள்ளார்.
234×77 திட்டம்
- அனைத்து பள்ளிகளிலும் உட்கட்டமைப்பை மேம்படுத்த 234×77 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சவுரவ் கங்கூலி
- உலகளாவிய வர்த்தக மாநாட்டின் மேற்குவங்க மாநில விளம்பர தூதராக சவுரவங் கங்கூலியை மேற்கு வங்க மாநில அரசு நியமனம் செய்துள்ளது.
இந்திய சர்வதேச திரைப்பட திருவிழா
- கோவாவில் நடைபெறும் 54வது இந்திய சர்வதேச திரைப்பட திருவிழாவில் இந்தி திரைப்பட நடிகை மாதுரி தீட்சித்-திற்கு விருதானது வழங்கப்பட்டுள்ளது.
- இவருக்கு பாரதிய சினிமாவின் பங்களிப்புக்கான சிறப்பு அங்கீகார விருதானது வழங்கப்பட்டுள்ளது.
சக்கரங்களில் திறன்
- கிராமப்புற வீட்டு வாசலில் டிஜிட்டல் திறன் பயிற்சியைக் கொண்டு வருவதற்தாக மத்திய அரசு சார்பில் சக்கரங்களில் திறன்கள் திட்டமானது தொடங்கப்பட உள்ளது.
உத்திரப்பிரதேசம்
- உள்நாட்டு மீன்பிடிப்பில் சிறந்த மாநிலமாக உத்திரப்பிரதேசம் தேர்வாகியுள்ளது.
- இதற்கான முதல் பரிசானது உலகளாவிய மீன்பிடி மாநாடு 2023-ல் வழங்கபட உள்ளது.
மலிங்யாங்-1
- வட கொரியாவால் ஏவப்பட்ட ராணுவ உளவு செயற்கைகோளான மலிங்யாங்-1 வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.
- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இதற்கு தடை விதித்துள்ளது.
U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி – 2024
- இலங்கையில் நடைபெறவிருந்த U-19 ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 2024-ஆனது தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- சமீபத்தில் ஐசிசி இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு தடை விதித்ததன் எதிரொலியாக இம்மாற்றமானது ஏற்படுத்தப்பட்டது.
உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் – தோஹா
- பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 26வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
- சவுரவ் கோத்தாரி 2வது இடத்தை பிடித்துள்ளார்.
November 19 Current Affairs | November 20 Current Affairs