Daily Current Affairs
Here we have updated 23rd February 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழகச் செய்தி
- அரசு போட்டித் தேர்வுகளுக்கென்று அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி சார்பில் “நோக்கம்” செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- பயிற்சியின் தன்மையை விரிவுபடுத்தும் நோக்கில் “எய்ம் டிஎன்” என்ற யூடியுப் சேனல் தொடங்கப்பட்டு அதில் காணொலிகள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
- கோயில்களில் நடத்தப்படும் திருமண திட்ட செலவுத் தொகை ரூ.20,000லிருந்து ரூ.50,000-ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. மேலும் திருமாங்கல்யத்திற்குவழங்கப்பட்ட தங்கம் 2 கிராமிலிருந்து 4 கிராமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 283 ஏழை எளிய தம்பதிகளுக்கு கோயில் மூலம் இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட உள்ளது
- பாளையங்கோட்டையில் வ.உ.சி மைதானத்தில் நடைபெற உள்ள ஆறாவது பொருநை நெல்லை புத்தக திருவிழாவின் அதிகாரப்பூர்வ இலச்சினையை நெல்லை மாவட்ட ஆட்சியாளர் கா.ப. கார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். மேலும் “புத்தக பாலம்” எனும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
- பிப்ரவரி 25-27 வரை ஆறாவது பொருநை நெல்லை புத்தக திருவிழா நடைபெற உள்ளது.
- இலச்சினையாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் வாழம் இருவாச்சி பறவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- இலச்சினைக்கு “ஆதினி” என பெயர் இடப்பட்டுள்ளது.
- மார்ச் 8-ல் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தினையொட்டி மகளிருக்கான பிரத்யேக கொள்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார்
- பெண் கல்வி இடைநிற்றலைக் குறைப்பதும், ஒவ்வொரு ஆண்டும் குறைந்த பட்சம் ஆயிரம் ஆராய்ச்சியார்களை உருவாக்குவதும் போன்றவை மகளிர் கொள்கையி்ன் முக்கிய நோக்கமாகும்.
- மாநில மகளிருக்கான கொள்கை வரைவு 2021-ம் ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்டது.
- “வாழ்ந்து காட்டு பெண்ணே” என்ற திட்டம் மூலம் மகளிர் வங்கி தொடங்கப்பட்டு பெண்களுக்கான தேவையான கடனுதவி வழங்கப்படுகிறது.
- இந்தியாவில் கலாசார மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
- இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 12-ம் பகுதியில் காலாச்சாரத்தின் ஒரு பகுதியாக நடராஜர் சின்னம் இடம் பெற்றுள்ளது.
தேசிய செய்தி
- தேசிய தோட்டக்கலை கண்காட்சி பெங்களூரில் நடைபெற்றுள்ளது.
- ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கான குறைந்த பட்ச வயதை 6-ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளிடம் மத்திய அரசு கோரிக்கை.
- நாட்டில் 67 மருந்துகள் தரமற்றவையாக உள்ளதென மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
- அவற்றில் பெரும்பாலானவை ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை.
- பிப்ரவரி 22-ல் தில்லியில் 3நாட்கள் நடைபெறும் “உலகின் நிலையான வளரச்சி மாநாடு” தொடங்கியுள்ளது.
- இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி “சுற்றுச்சூழலை பாதுகாப்பது இந்தியாவின் கடமை” எனக் கூறியுள்ளார்.
- அரசியல் தகவல்களை ரகசியமாகக் கண்காணிக்க தனி அமைப்பு உருவாக்கியதாக தில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா மீது சிபிஐ விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
- ஊழல் தடுப்புச்சட்டம் 1988 பிரிவு 17-ன் கீழ் அனுமதியளிக்கப்பட்டள்ளது.
- கிழக்கு லடாக் எல்லையில் பிரச்சனைக்குரிய இதர பகுதிகளில் படை விலக்கலுக்கான திட்டங்கள் குறித்து இந்தியா, சீனா இடையே தூதரக ரீதியிலான 26வது சுற்றுப் பேச்சுவார்த்தை சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
- கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கடந்த 2020, மே 5-ல் இந்திய, சீன ராணுவத்தினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து இரு நாடுகளும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
- 22வது சட்ட ஆணையத்தின் பதவிக் காலத்தை 1½ ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- பிப்ரவரி 20-ல் 22வது சட்ட ஆணைய 3 ஆண்டுகள் பதவிக்காலம் முடிவடைந்தது. மேலும் இதன பதவிக்காலத்தை 2024 ஆகஸ்ட் 31வர நீடிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- தில்லி மேயர் தேர்தலில் ஆம் ஆம்மி கட்சியின் பெண் வேடபாளர் ஷெல்லி ஒபராய் 4வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
- தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் ரூ.41,500 கோடிக்கும் அதிகமான செலவில் மேற்கொள்ளப்பட்ட வரும் முக்கிய கட்டமைப்பு திட்டப் பணிகளை பிரதமர் ஆய்வு செய்தார்.
- “பிரகதி” எனப்படும் தகவல் தொடர்பு தொழில் நுட்ப அடிப்படையிலான திட்டத்தின் 41வது கூட்டம் தில்லியில் நடைபெற்றுள்ளது.
- உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான திட்டமிடலுக்கு பிரதமரின் “கதிசக்தி” என்ற இணைய பக்கத்தை பயன்படுத்த வேண்டுமென்று அமைச்சங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு பிரதமர் அறிவுரை.
- “அமர்த சரோவர்” திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 50,000 நீர்நிலைகளுக்கு புத்துயிரூட்டும் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க வட்டார அளவில் கண்காணிப்பு மேற்கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
- 2023-24ம் நிதியாண்டில் தெற்கு ரயில்வேக்கு ரூ.11314 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகச் செய்தி
- 2024 ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக இந்திய வம்சாவளி தொழில் முனைவர் விவேக் ராமசாமி(37) அறிவித்துள்ளார.
விளையாட்டுச் செய்தி
- ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் பிரதான கால்பந்து லீக் போட்டியான சாம்பியன்ஸ் லீக்கில் ரியல் மாட்ரிட் அணி 5-2 என்ற கோல் கணக்கில் லிவர்பல் அணியை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்துள்ளது.
- மகளிர் பிரிவில் மட்டும் தமிழகம் தொடர்ந்து 6வது முறையாக சாம்பிய் பட்டம் வென்றுள்ளது.