Daily Current Affairs
Here we have updated 23-24thth November 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பாத்திமா பீவி (Fatima Beavi)
- தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி (96) காலமானார்.
- இவர் உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி ஆவார்.
- 1927-ல் கேரளாவில் பத்தனம்திட்டாவில் பிறந்தவர்
- 1983-ல் கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர்.
- 1989-ல் முதல் உச்சநீதிமன்ற நீதியாக நியமிக்கபட்டுள்ளார்.
- 1997-2001 வரை தமிழக ஆளுநராக பதவி வகித்துள்ளார்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில்
- நவம்பரில் தமிழக மக்களின் குறைகளைத் தீர்க்க உங்களைத் தேடி உங்கள் ஊரில் எனும் திட்டமானது தொடங்கப்பட உள்ளது.
- இத்திட்டமானது கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் அடுத்த கட்டமாக கருதப்படுகிறது.
சிட்டிஸ் திட்டம்
- சென்னை மாநகராட்சியில் 11 பள்ளிகள் சிட்டிஸ் திட்டதின் கீழ் நவீன வசதிகளுடன் மேம்படுத்த ரூ. 36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பிரான்ஸ் மேம்பாட்டு முகமை நிதியுதவியுடன் 12 முக்கிய நகரங்களில் மேம்பாட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- சென்னை மாநகராட்சியில் 28 பள்ளிகள் மேம்படுத்தப்பட்ட நிலையில் மேலும் 11 பள்ளிகள் மேம்படுத்தப்பட உள்ளன.
நீதிபதிகள் பதவியேற்பு
- சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாக அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி விவேக்குமார் சிங் மற்றும் தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுதிர் குமார் ஆகியோருக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
நீதிபதி நியமனம்
- மும்பை நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக சோமசேகர் சுந்தரேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நுழைவு இசைவு (விசா)
- பிரிட்டனில் நுழைவு இசைவு பெறும் நாடுகளின் பட்டியிலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
- இரண்டாம் இடம் – நைஜீரியா, மூன்றாம் இடம் – ஜிம்பாப்வே போன்ற நாடுகள் பிடித்துள்ளன.
- கல்வி உதவித் தொகையுடன் கூடிய உயர்கல்வி நுழைவு இசைவு பெறுபவர்களில் இந்தியர்கள் 27% பங்கு வகிக்கின்றன.
- சுற்றுலா நுழைவு இசைவு பெறுவர்களில் இந்தியா (27%), சீனா (19%) துர்கிஷ் (6%) போன்ற நாடுகள் உள்ளன.
- தன்னைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களை பிரிட்டனுக்கு அழைத்து வரும் நாட்டினர் எண்ணிக்கையில் இந்தியா (43,445 நுழைவு இசைவு) இரண்டாம் இடம் பிடித்துள்ளன. நைஜிரியா (60,506 நுழைவு இசைவு) முதலிடம் பிடித்துள்ளன.
சட்ட விரோத குடியேற்றம்
- அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களில் பட்டியிலில் இந்தியா (7.25 இலட்சம் பேர்) மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
- இப்புள்ளி விவரங்களானது 2021-ம் ஆண்டு அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதில் மெக்ஸிக்கோ (41 லட்சம் பேர்) எல் சால்வடார் (8லட்சம் பேர்) போன்ற நாடுகள் முதலிரு இடம் பிடித்துள்ளன.
சேவை அறிமுகம்
- பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கவும், பயன்பாட்டை பாதுகாப்பனதாக மாற்றவும் ஒரு மாத விழிப்புணர்வு பிரச்சாரத்தை வாட்ஸ் ஆப்-பின் மெட்டா நிறுவனம் தொடங்கி உள்ளது.
- வாட்ஸ்ஆப் செயலில் பரவும் தகவலை உறுதி செய்யும் விதமாக வாட்ஸ்ஆப் சேனலில் செக் தி ஃபேக்ட்ஸ் (Check the facts) என்ற புதிய சேவையானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
2023 சிறந்த சொல்
- hallucinate என்ற சொல்லானது 2023-ம் ஆண்டின் சிறந்த சொல்லாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- இவ்வார்த்தையானது கேம்பிரிட்ஜ் அகராதியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்ட்டுள்ளது.
ஜி-20 மாநாடு
- இந்தியா தலைமையிலான ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடானது நடைபெற்றுள்ளது.
அந்நிய நேரடி முதலீடு
- இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 24% சரிவைக் கண்டுள்ளது.
- கடந்த ஏப்ரல்-செப்டம்பர் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.2,048 கோடி டாலராக இருக்கிறது.
- 2022-2023 ஏப்ரல்-செப்டம்பர் வரையிலான நிதியாண்டில் ரூ.2,691 கோடியாக இருந்துள்ளது.
புதிய வகை தவளை இனம்
- அருணாச்சலப்பிரதேசத்தில் புதிய மியூசிக் தவளை இனமாது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- நிதிரானா நோவா டிஹிங் இனத்தை சார்ந்தது.
- நோவா டிஹிங் நதியின் பெயரானது சூட்டப்பட்டுள்ளது.
- ஆண் தவளைகள் 1.8-2.3 அங்குல நீளம் கொண்டவை.
- பெண் தவளைகள் 2.4-2.6 அங்குல நீளம் கொண்டவை.
கீர்த் வில்டர்ஸ் (Geert Wilders)
- நெதர்லாந்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சுதந்திரக் கட்சியின் கீர்த் வில்டர்ஸ் வெற்றி பெற்றுள்ளார்.
ஆசிய பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் – தாய்லாந்து
- ஆசிய பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் 9 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
- காம்பவுண்ட் ஆடவர் பிரிவில் ராகேஷ் குமார் தங்கம் வென்றுள்ளார்.
- காம்பவுண்ட் ஆடவர் ஓபன் பிரிவில் ராகேஷ் குமார் மற்றும் சூரஜ் சிங் தங்கம் வென்றுள்ளனர்.
- காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் ராகேஷ் குமார் மற்றும் ஷீத்தல் தேவி தங்கம் வென்றுள்ளனர்.
- காம்பவுண்ட் மகளிர் அணிகள் பிரிவில் ஷீத்தல் தேவி மற்றும் ஜோதி தங்கம் வென்றுள்ளனர்.
- ரீகர்வ் ஆடவர் இரட்டையர் பிரிவில் ஹர்விந்தர் சிங் மற்றும் விவேக் சிகாரா வெள்ளி வென்றுள்ளனர்.
- ரீகர்வ் ஆடவர் இரட்டையர் டபிள்யூ-1 பிரிவில் ஆதில் மற்றும் நவீன் வெள்ளி வென்றுள்ளனர்.
- ரீகர்வ் மகளிர் ஒற்றைர் பிரிவில் ஷீத்தல்தேவி வெள்ளி வென்றுள்ளார்.
- ரீகர்வ் மகளிர் ஓபன் அணிகள் பிரிவில் பூஜா மற்றும் பூஜா வெள்ளி வென்றுள்ளனர்.
தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் – சென்னை
- 79-வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் வேலவன் செந்தில்குமார் (தமிழகம்), அனாஹத் சிங் (தில்லி) ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.
ஜூலியஸ் பேர் மகளிர் ஸ்பீடு செஸ் சாம்பியன்ஷிப் – சென்னை
- டி.ஹரிகா (இந்திய கிராண்ட் மாஸ்டர்) 2வது இடம் பிடித்துள்ளார்.
- ஹுயிஃபானி (சீனா) முதல் இடம் பிடித்துள்ளார்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு
- திருநங்கை கிரிக்கெட்டரான டேனியல் மெக்கே (கனடா) கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார்.
- உலகின் முதல் திருநங்கை கிரிக்கெட்டராக திகழ்ந்தவர்.
- பருவமைந்த பிறகு பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள் ஆடவர், மகளிர் அணியில் சேர்க்கப்படமாட்டார்கள் என்ற ஐசிசி அறிவிப்பினை அறிவித்துள்ளதே இதன் காரணமாகும்.
நல்லெண்ண தூதர்
- கேரள மாநில மகளிர் கிரிக்கெட் போட்டிக்கான நல்லெண்ண தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- கேரள கிரிக்கெட் சங்கமானது இவரை நியமித்துள்ளது.
தடை விதிப்பு
- ஊழல் தடுப்பு விதிகளை மீறியதற்காக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கிரிக்கெட் வீரர் மார்லன் சாமுவேல்ஸ்-க்கு அனைத்து வடிவ போட்டிகளிலும் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
- இத்தடையானது 6 ஆண்டுகளுக்கு விதிக்கப்பட்டள்ளது.
November-21 Current Affairs | November-22 Current Affairs