Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 23rd and 24th March 2025

Daily Current Affairs

Here we have updated 23rd and 24th March 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

பாலின விகிதம்

  • தமிழ்நாட்டில் கடந்த 4ஆண்டுகளில் பாலின விகிதம் 931லிருந்து 941ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஆண்டுகள் பாலினவிகிதம்
2020-21878
2021-22931
2022-23938
2023-24941

ஞானபீட விருது

Vetri Study Center Current Affairs - Vinod Kumar Shukla

  • இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருதானது (59வது விருது) சத்திஸ்கரைச் சேர்ந்த வினோத் குமார் சுக்லா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
  • 58வது ஞான பீட விருதானது குல்சார், ராமபத்ராச்சார்யா ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

  • ஞானபீட விருது (Jnanpith Award ) என்பது இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருதாகும். இவ்விருது, பாரதிய ஞானபீடம் என்ற பண்பாட்டு இலக்கியக் கழகத்தால் வழங்கப்படுகிறது.
  • இது 1961இல் சாகு சாந்தி பிரசாத் ஜெயின் குடும்பத்தினரால் நிறுவப்பட்டது.
  • 1965இல் முதன் முதலாக மலையாள எழுத்தாளர் ஜீ. சங்கர குருப்பிற்கு ‘முதல் சத்தியம்‘ என்ற புதினத்திற்காக வழங்கப்பட்டது.
  • இவ்விருதினை முதல் பெண் எழுத்தாளர் ஆஷா பூர்ணாதேவி.
  • 1975இல் சித்திரப்பாவை புதினத்திற்காக அகிலனும், 2002இல் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக ஜெயகாந்தனும் இவ்விருதைப் பெற்றுள்ளனர்.

தஞ்சை மாநகராட்சி

  • தஞ்சை மாநகராட்சியானது பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பயனாளிகளின் வீட்டிற்கே சென்று வழங்க உள்ளது.
  • தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை வீடுகளுக்கே தபால் மூலம் அனுப்பி வைக்க உள்ளது.
  • இதன் மூலம் தமிழ்நாட்டில் இச்சேவை அறிமுகம் செய்ய உள்ள நகராட்சியாக தஞ்சை நகராட்சி மாற உள்ளது.

மக்பூல் ஃபிதா ஹுசைன்

Vetri Study Center Current Affairs - Maqbool Fida Husain

  • இந்திய ஓவியரானமக்பூல் ஃபிதா ஹுசைன் வரைந்த ஓவியம் ஒன்று அமெரிக்காவில் 118கோடிக்கு ஏலம் போனது.
  • இவர் இந்தியாவின் பிக்காசோ என அழைக்கப்படுகிறார்.

பி.டி. பருத்தி

  • இந்தியாவில் பயிரிட பி.டி. பருத்தி (Bt Cotton) அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் பயிரிட அனுமதிக்கப்பட்ட முதல் மரபணு மாற்றப்பட்ட முதல் வயல் பயிர் பிடி பருத்தி ஆகும்.
  • மேலும் GM கடுகு பயிட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • Bt என்பதற்கு பாசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் என்று பொருள்.
  • பி.டி. பருத்தி என்பது மரபணு மாற்றப்பட்ட பருத்தி வகை ஆகும். இது பூச்சிகளை எதிர்த்து பூச்சிக்கொல்லிகளை உருவாக்கிக் கொள்கிறது.
  • 2002-ல் மான்சாண்டோ மற்றும் மஹ்கோ ஆகியோரின் கூட்டு ஒப்பந்தத்தின்படி பி.டி. கலப்பின பருத்தி இரகங்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பிடி சீன எஃப்1 கார்பந்தயம் – 2வது சுற்று

  • முதலிடம் – ஆஸ்கரி பியாட்ரி
  • 2வது இடம் – லாண்டோ நோரீஸ்

கிருஷ்ணா லால் சத்தா

  • அண்மையில் பிரபல தோட்டக்கலை விஞ்ஞானியான கிருஷ்ணா லால் சத்தா காலமானார்.
  • 2022-ல் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது

முக்கிய தினம்

உலக வானிலை தினம் (World Meteorological Day) – மார்ச் 23

  • கருப்பொருள்: Closing the early warning gap together.

தியாகிகள் தினம் (Sahit Diwas) – மார்ச் 23

  • 1931 மார்ச் 23-ல் பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட தினத்தினை நினைவுகூறும் விதமாக தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

தேசிய காசநோய் தினம் (World Tuberculosis Day) – மார்ச் 24

Vetri Study Center Current Affairs - World Tuberculosis Day

  • கருப்பொருள்: Yes! We can end TB: Commit, Invest, Deliver

Related Links

Leave a Comment