Daily Current Affairs
Here we have updated 23rd December 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
சாஸ்த்ரா-ராமானுஜன் விருது
- கும்பகோணம் சீனிவாச ராமானுஜன் மையத்தில் 19வது சீனிவாச ராமானுஜன் சர்வதேச கணிதவியல் மாநாடு நடைபெற்றுள்ளது.
- அமெரிக்க கலிபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழகப் பேராசியர்களான யுன் கிங்டாங்க்கு சாஸ்த்ரா-ராமானுஜன் விருது 2022-யும், ருயிக்சி யாங் ஜாங்க்கு சாஸ்த்ரா-ராமானுஜன் விருது 2023-யும் வழங்கப்பட்டுள்ளது.
- ராமானுஜன் பிறந்த நாள் – டிசம்பர் 22
குளிர்கால நாடகப் பட்டறை
- 6-10 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு குளிர்கால நாடகப் பட்டறை திட்டத்தினை தொடங்க உள்ளது.
- இத்திட்டத்தின் மூலம் நாடக கலை, குறியீட்டு முறை, ரோபாட்டிக்ஸ் ஆகியவற்றை பயிற்றுவிக்க தொடங்கப்பட உள்ளது.
தமிழகம் இரண்டாம் இடம்
- சிறு, குறு, நடுத்தர தொழில் மூலமான வேலைகளுக்கான பட்டியிலை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- 1வது இடம் – மகாராஷ்டிரா
- 2வது இடம் – தமிழகம்
- 3வது இடம் – புதுச்சேரி
இலச்சினை அறிமுகம்
- 2024 ஜனவரி 19-31 வரை 6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது.
- இப்போட்டிக்கான இலச்சினையாக வீரமங்கை வேலுநாச்சியார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
இடைநிற்றல் விகிதம்
- தேசிய அளவில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்து இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கையானது 21%மாக உள்ளது.
- கடந்த 5 ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளது.
- 2020-21 கல்வி ஆண்டில் இடைநிற்றல் விகிதம் 20.6%மாக குறைந்துள்ளது.
- 2018-19 கல்வி ஆண்டில் இடைநிற்றல் விகிதம் 28.4%மாக இருந்துள்ளது.
- 1வது இடம் – அசாம் (49.9%)
- 2வது இடம் – பீகார் (42.1%)
- 3வது இடம் – மேகாலயம் (33.5%)
- தமிழகத்தில் இடைநிற்றல் 9%மாக உள்ளது.
- இடைநிற்றலே இல்லாத மாநிலமாக மணிப்பூர் மாநிலம் உள்ளது.
குடியரசு தின விழா
- வரும் 2024-ஆம் ஆண்டின் குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
- குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளும் 6வது பிரான்ஸ் தலைவர் மேக்ரான் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டம்
- மத்திய அரசு கொண்டு வந்துள்ள பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டம் என்னும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள் திட்டத்தில் தமிழகம், பீகார், தில்லி, கேரளம், ஒடிசா மாநிலங்கள் சேரவில்லை என தெரியவந்துள்ளது
கண்ட அழகி விருது 2023 (Continental International title – 2023)
- சர்வதேச கண்ட அழகியாக ஆஸ்தா ராவல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எண்ணெய் கழிவுகள்
- எண்ணூரில் தற்போது வரை 405.7 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டதாக தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியம் (TNPCB) தெரிவித்துள்ளது.
- TNPCB (Tamil Nadu Pollution Control Board) – 1982
- தலைமையகம் – சென்னை
தடை நீக்கம்
- கர்நாடகத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையானது நீக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
- 2022-ஆம் ஆண்டு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டிருந்தது.
கடவுச்சீட்டு சேவை
- நாட்டில் 527 இடங்களில் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) சேவை வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
- 2014-ல் இந்தியாவில் 77 கடவுச்சீட்டு சேவை மையங்கள் இருந்ததுள்ளது.
- இந்திய தொழிலாளர் கூட்டமைப்பு (CII) சார்பில் நடைபெற்ற இளம் இந்தியர்களின் 2 நாள் தேசிய மாநாட்டில் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
- இணையதள பயன்பாடானது 2014-ல் 30 கோடியாக இருந்து தற்போது 90 கோடியாக உயர்ந்துள்ளது.
ஆயுஷ்மான் பாரத் எண்ம இயக்கம்
- நாட்டில் 50 கோடி பேரிடம் ஆயஷ்மான் பாரத் சுகாதார கணக்கு எண் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
- மத்திய அரசின் காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
- நாட்டு மக்கள் அனைவருக்கும் எண்ம மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் பொருட்டு ஆயுஷ்மான் பாரத் எண்ம இயக்கம்
ஷேக் மிஷால்
- குவைத் நாட்டின் 17வது அரசராக (எமிர்) ஷேக் மிஷால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விருது திருப்பி அளிப்பு
- இந்திய மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா தன்னுடைய பத்மஸ்ரீ விருதினை திருப்பி அளித்துள்ளார்.
டீன் எல்கர்
- சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக டீன் எல்கர் (தென்னாப்பிரிக்கா) தெரிவித்துள்ளார்.
- தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டனான இவர் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்குபின் ஓய்வு பெற உள்ளார்.
தேசிய விவசாயிகள் தினம் (National Farmers Day) – Dec 23
- இந்தியாவின் முன்னாள் பிரதமரான சரண்சிங் (5வது இந்திய பிரதமர்) பிறந்த நாளை முன்னிட்டு தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
- 1979-1980 வரை பிரதமாக இருந்துள்ளார்.
- சரண்சிங் பிறந்த தினமாது 2001ஆம் ஆண்டு முதல் விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
December 21 Current Affairs | December 22 Current Affairs