Daily Current Affairs
Here we have updated 23rd January 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
இறுதி வாக்காளர் பட்டியல்
- தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை – 6,18,90,348
- பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை – 3,14,85,724
- ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை – 3,03,96,330
- மூன்றாம் பாலின வாக்காளர்களின் எண்ணிக்கை – 8,294
- மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் எண்ணிக்கை – 4,32,805
- அதிகபட்ச வாக்காளர்களை கொண்ட தொகுதி – சோழிங்கநல்லூர் (6.60 லட்சம்)
- குறைந்தபட்ச வாக்காளர்களை கொண்ட தொகுதி – கீழவேளூர் (1.72 லட்சம்)
தொடர்புடைய செய்திகள்
- தேர்தல் ஆணைய விதிகள் – பகுதி – XV, விதி – 324 to 329
- தலைமை தேர்தல் அதிகாரி – சத்தியபிரதா சாகு
ஏ.சி. காமராஜ்
- நவீன நீர்வழிச் சாலை திட்டத்தின் தலைவரான பொறியாளர் ஏ.சி. காமராஜ் காலமானார்.
- நதிகள் மற்றும் ஆறுகள் இணைப்பினால் புதிய நீர்வழிச்சாலைகள் அமைக்கலாம் என்ற நோக்கத்துடன் இந்திய நதிகள் மற்றும் ஆறுகளை இணைக்க முயற்சிகளை மேற்கொண்டவர்.
ராஜீவ் கெளபா குழு
- பட்டியல் சாதியினரின் நலன்களைப் பாதுகாப்பதற்காக ராஜீவ் கெளபா தலைமையில் குழுவானது அமைக்கப்பட்டது.
பிரதான் மந்திரி சூர்யோதயா யோஜனா
- வீடுகளில் சூரிய மேற்கூரை அமைக்க தொடங்கப்பட உள்ள திட்டமாகும்.
- இத்திட்டத்தின் படி ஒரு கோடி குடும்பங்களின் வீடுகளில் மேற்கூரை சூரிய அமைப்பு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மலேரியா இல்லா நாடு
- மலேரியா இல்லா நாடாக கபோ வெர்டே நாட்டினை உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்துள்ளது.
- WHO – World Health Organisation – 07.04.1948
- தலைமையகம் – ஜெனிவா, சுவிட்சர்லாந்து
வட கொரியா
- வட கொரியா நாடானது அணுசக்தி திறன் கொண்ட நீருக்கடியில் தாக்குதல் நடத்தும் ட்ரோனான ஹெய்ல்-5-23-ஐ சோதனை செய்துள்ளது.
கஞ்சர் (KHANJAR)
- இந்தியாவிற்கும் கிர்கிஸ்தானிற்கும் இடையே கஞ்சர் என்னும் கூட்டு சிறப்புப் படைப் பயிற்சி நடைபெற்றுள்ளது.
வாழ்நாள் சாதனையாளர் விருது
- BCCI-யின் வாழ்நாள் சாதனையாளர் விருதானது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான ரவி சாஸ்திரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
- The Board of Control for Cricket in India – 01.12.1928
பராக்ரம தினம் (Parakram Diwas) – ஜன 23
- விடுதலை போராட்ட வீரரான சுபாஸ் சந்திரபோஷின் பிறந்த தினத்தை முன்னிட்டு கொண்டாடப்படுகிறது.
January 20 Current Affairs | January 21-22 Current Affairs