Daily Current Affairs
Here we have updated 24th January 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தேசிய செய்தி
- ஜனவரி 23-ல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 127வது பிறந்த தினத்தினை முன்னிட்டு அந்தமான் நிக்கோபரை சேர்ந்த பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு “பரம்வீர் சக்ரா” விருது பெற்றவர்களின் பெயரை பிரதமர் மோடி சூட்டியுள்ளார்.
- நேதாஜியின் பிறந்த நாள் விழா “தைரிய தினம்”-ஆக கொண்டாடப்பட்டு வருகிறது.
மேஜர் சோம்நாத் சர்மா | சோம்நாத் தீவு |
சுபேதார் கரம் சிங் | கரம் சிங் தீவு |
லெப்டினென்ட் ராமா ரகோபா ராணே | ராணே தீவு |
நாயக் ஜதுநாத் சிங் | ஜதுநாத் தீவு |
ஹவிலதார் மேஜர் பிரு சிங் | பிரு தீவு |
கேப்டன் ஜிஎஸ் சலாரியா | சாலாரியா தீவு |
மேஜர் தன் சிங் தாபா | தன் சிங் தீவு |
சுபேதார் ஜோகிந்தர் சிங் | ஜோகிந்தர் தீவு |
மேஜர் ஷைதான் சிங் | ஷைதான் சிங் தீவு |
ஹவில்தார் அப்துல் ஹமீது | ஹமீது தீவு |
லெப்படினெனட் கர்னல் அர்தேஷிர் புர்ஜோர்ஜி தாரப்பூர் | தாராப்பூர் தீவு |
லேன்ஸ் நயக் ஆல்பர்ட் எக்கா | எக்கா தீவு |
மேஜர் ஹோஷியார் சிங் | ஹோஷியார் தீவு |
லெப்டினென்ட் அருண் கேத்ரபால் | கேத்ரபால் தீவு |
விமானி நிர்மல்ஜித் சிங் சேகரன் | சேகரன் தீவு |
மேஜர் ராமசாமி பரமேஸ்வரன் | ராமசாமி தீவு |
சுபேதார் பாணா சிங் | பாணா தீவு |
கேப்டன் விக்ரம் பத்ரா | பத்ரா தீவு |
லெப்டினென்ட் மனோஜ் குமார் பாண்டே | பாண்டே தீவு |
சுபேதார் மேஜர் சஞ்சய் குமார் | சஞ்சய் தீவு |
சுபேதார் மேஜர் யோகேந்திர சிங் யாதவ் | யோகேந்திரா தீவு |
- ஜனவரி 23 புதுவையில் வறுமைகோட்டுக்கு கீழ் வாழும் 21 முதல் 55 வயதுடைய குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக தலா ரூ.1000 வழங்குத் திட்டத்தினை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
- இந்திய மல்யுத்த சம்மேள தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் (பாஜக எம்.பி) மீதான் பாலியல் புகார் குறித்து விசாரிக்க மல்யுத்த சாம்பியன் மேரி கோம் தலைமையில் விசாரனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
- ஜனவரி 23-ல் இந்திய கப்பற்படையில் கல்வரி ரகத்தை சேர்ந்த 5வது நீர்மூழ்கி கப்பலான “ஐஎன்எஸ் வாகீர்” இணைந்துள்ளது.
- பிரான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மஸகான் டாக் கப்படல் கட்டும் நிறுவனம் வாகீர் நீர்மூழ்கி கப்பலை கட்டியது.
- “புராஜெக்ட் 75” திட்டத்தின் கீழ் இந்தியாவில் முழுமையாக உருவாக்கப்பட்ட ஐந்தாவது நீர்மூழ்கி கப்பல்.
- ஐஎன்எஸ் கல்வரி, ஐஎன்எஸ் கண்டேரி, ஜஎன்எஸ் கரஞ்ஜ், ஐஎன்எஸ் வேலா இதுவரை இத்திட்டதின் கீழ் கட்டப்பட்ட கப்பல்களாகும்.
- குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் பி20 இந்தியாவின் முதல் கூட்டம் நடைபெறுகிறது.
- வயது வந்தோர் கல்விக்காக தொடங்கப்பட்ட புதிய இந்திய எழுத்தறிவு திட்டம் 2026-27வரை நீடிக்கப்பட்டுள்ளது
உலகச் செய்தி
- சர்வதேச அளவில் நிறுவனங்களின் பிராண்ட் மதிப்பை ஆய்வு செய்யும் “பிராண்ட் ஃபைனான்ஸ்” அமைப்பு வெளியிட்டுள்ள “குளோபல் 500” அறிக்கையின்படி ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி அமேசான் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.
- 2வது இடம் – ஆப்பிள்
- 3வது இடம் – கூகுள்
- 4வது இடம் – மைக்ரோசாஃப்ட்
- 5வது இடம் – வால்மார்ட்
- சர்வதேச தரவரிசை பட்டியலில் டாடா நிறுவனம் 69வது இடத்தை பிடித்துள்ளது.
- இன்ஃபோசிஸ் நிறுவனம் 150-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
- ஜெர்மனியின் அனுமதி இல்லாமல் அந்த நாட்டில் வாங்கிய அதிநவீன லெப்பர்-2 பீரங்கிகளை உக்ரைனுக்கு அனுப்ப போலந்து தயாராக உள்ளது.
விளையாட்டு செய்தி
- 2022-ம் ஆண்டுக்கான ஐசிசி டி20 அணியில் 7 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளன.
- இதில் ஆடவர் பிரிவில் விராட்கோலி, சூர்ய குமார் யாதவ், ஹார்த்திக் பாண்டியா ஆகியோரும் பெண்கள் பிரிவில் ஸ்ருதி மந்தனா, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், ரேணுகா சிங் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.