Daily Current Affairs
Here we have updated 24th February 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழகச் செய்தி
- சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக வி.லட்சுமி நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- அலகாபாத் உயிர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக வழக்குரைஞர்கள் பிரசாந்த் குமார், மஞ்சீகூ சுக்கலா, அருண் குமார் சிங் தேஷ்வால் ஆகியோர் 2 ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளன.
- திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில் சேவையின் 100வது ஆண்டு தின விழா கொண்டாடப்பட்டது.
- ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 23.02.1923 திருநெல்வேலி – திருச்செந்தூர் சேவை தொடங்கப்பட்டது.
- கொத்தடிமை, குழந்தை தொழிலாளர்கள் முறை ஒழிப்பு நடவடிக்கைக்கான ஆவண புத்தகங்களை தமிழக முதல்வர் வெளியிட்டள்ளார்.
- கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் – தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சி, குழந்தை தொழிலாளர்கள் முறை அகற்றுதல் – தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சி, என்ற இரு தலைப்பில் புத்தக்கம் வெளியிடப்பட்டள்ளது
- கொத்தடிமை தொழிலாளர் முறையை 2030-ம் ஆண்டுக்குள்ளும், குழந்தை தொழிலாளர் முறைய 2025-ம் ஆண்டுக்குள்ளும் அகற்ற தமிழக அரசு உறுதி ஏற்றது.
- காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இலலம் தேடிக் கல்வி மையங்களில் நேரடி ஆய்வு நடத்தி தனியார் நிறுவனத்துக்கு பள்ளி கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.
- இந்திய அளவில் மக்கள் அமைதியாக வாழும் மாநிலங்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை தமிழ்நாடும், கேரளாவும் பெற்றுள்ளன.
- குழந்தைகளுக்கான திட்டங்களில் தமிழ்நாடு எப்போது கவனுடன் செயல்படுகிறது
- 1920-ல் சென்னை மாநராட்சியில் மதிய உணவு திட்டம் நீதிக்கட்சியின் சர்.பிட்டி தியாகராயர் கொண்டு வந்தார்.
- 1955 ல் காமராஜர் ஆட்சி காலத்தில் மதிய உணவுத்திடம் விரிவுபடுத்தப்பட்டு எட்டையபுரத்தில் தொடங்கப்பபட்டது.
- 1982-ல் எம்.ஜி.ஆர்.-ஆல் மதிய உணவுத் திட்டம் சத்துணவு திட்டமாக தரம் உயர்த்தப்பட்டது.
- சென்னை ஐஐடி-யில் ரூ242.96 கோடி மதிப்பில் செயற்கை வைர ஆய்வகம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு.
- நகை வடிவமைப்பு நிறுவனங்கள், கணனி சிப்கள், செயற்கைக்கோள்கள், 5ஜி அலைக்கற்றை என்பன உள்ளிட்ட பல்வேறு தொழில் நுட்பங்களில் செயற்கை வைரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாதுகாப்புதுறை, நகை உற்பத்தி, மருத்தவம், ஒளியியல் துறைகளிலும் பயன்படுகிறது.
- 2020-ஆம் ஆண்டில் ரூ.8,620 கோடி சந்தை மதிப்பு வைரங்கள் கொண்டிருந்தன.
- 2025-ல் 5 மடங்காவும், 2035-ல் 15 மடங்காவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
- ரசயாயன நீராவி பதிவு தொழில் நுட்பம் மற்றும் உயர் அழுத்த உயர் வெப்ப தொழில் நுட்பம் என்ற 2 தொழில் நுட்பம் மூலமாக செயற்கை வைரங்கள் உற்பத்தி செய்யப்படுகிது.
- இதில் இந்தியா ரசாயன நீராவி பதிவு தொழில் நுட்ப முறையில் செயற்கை வைரம் தயாரிப்பதில் முன்னிலை வகிக்கிறது.
- 2021-22-ல் செயற்கை வைர வர்கத்தின் இந்தியாவின் பங்களிப்பு 25.8%மாக இருந்தது.
தேசிய செய்தி
- பிப்ரவரி 23-ல் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை எளிதில் அடையாளம் காணவும், மேற்கொள் காட்டவும் அனைத்து தீர்ப்புகளுக்கு “தனிக் குறியீடு எண்” அளிக்கும் நடைமுறையை உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிமுகம் செய்து வைத்தார்.
- இந்த பணியை மேற்கொள்ள 3 உயர்நீதிமன்ற நீதிபதிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டள்ளது.
- 30,000 தீர்ப்புகளுக்கு இந்த குறியீடு வழங்கப்படும்.
- ஏற்கனேவே தில்லி, கேரள உயர்நீதிமன்றங்களில் இம்முறை செயல்பட்டு வருகிறது.
- உச்சநீதிமன்ற தீர்ப்புகளை செயற்கை நுண்ணறிவின் உட்பிரிவான “இயந்திர வழிக் கற்றல் (மெஷின் லேர்னிங்)” தொழில்நுட்பம் மூலமாக இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கபட்டு வருகின்றன.
- இதுவரை 29000 தீர்ப்புகள் ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டள்ளன.
- உச்சநீதிமன்றத்தின் 34,000 தீர்ப்புகளை வழக்குரைஞர்களும், சட்ட மாணவர்களும், பொது மக்களும் எவ்வித தடையுமின்றி பார்த்து பயன் பெறும் வகையில் “மின்னனு உச்சநீதிமன்ற தீர்ப்புகள் (இ-எஸ்சிஆர்) திட்டம்” அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- உலக வங்கியின் தலைவராக இந்திய வம்சாவளியை சார்ந்த அஜய் பங்கா (63) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- உலக வங்கிக்கு தலைமை பொறுப்பை வகிக்கும் முதல் இந்திய வம்சாவளி சீக்கியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
- 2016-ல் “பத்மஸ்ரீ” விருதினை பெற்றுள்ளார்
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியா முன்னணி நாடாக திகழ செய்வதற்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
- இதனால் அனைத்து பசுமை எரிசக்தி முதலீட்டாளர்களுக்கும் இந்தியாவில் முதலீடு செய்ய அபரிமதி வாய்ப்பு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- 2030-ம் ஆண்டுக்குள் 500ஜிகாவாட் புதைப்படிவமற்ற எரிபொருள் திறனை நாடு பெற்றுவிடும்.
- பசு சாணத்திலிருந்து (கோபர்தன் யோஜனா) 10,000 மில்லியன் கியூபிக் மீட்டர் உயிரி எரிவாயு உற்பத்தி செய்யும் திறனை பெற்றுள்ளது. கோபர்தன் திட்டத்தின் கீழ் 500 ஆலைகள் அமைக்கபட உள்ளது.
- பிப்ரவரி 24-ல் சத்திஸ்கர் மாநிலம் ராயப்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85வது மாநாடு நடைபெறுகிறது
- அக்னிவீரர்களுக்கான நுழைவுத்தேர்வு இணைய வழிக்கு மாற்றப்பட்டிருப்பதைத் தவிர, பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை” என்று ராணுவப் பணியாளர் தேர்வுத்துறைத் தலைவரும் துணை ராணுவத் தளபதியுமான என்.எஸ்.சர்னா தெரிவித்துள்ளார்.
- அக்னிபத் – 2022-ல் அறிமுகம்
- இத்திட்டத்தின கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்கள் 4 ஆண்டுகள் குறுகிய கால பணியில் அமர்த்தப்படுவர்.
- இவர்களில் தகுதியான 25%பேர் முப்படைகளிலும் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவர்.
- பிப்ரவரி 24-25ல் நடைபெறும் ஜி20 நாடுகளின் நிதித்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க நிதியமைச்சர் ஜேனட் யெல்லன் இந்தியா வருகை தந்துள்ளார்.
உலகச் செய்தி
- அமெரிக்காவில் சியாட்டில் ஜாதிய பாகுபாட்டுக்கு தடை விதித்த முதல் நகரம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
- 53 வயதுடைய ஜெர்மெனியை சார்ந்த நபர் ஸெடமெ் செல் மாற்று சிகிச்சை மூலம் எய்ட்ஸிலிருந்து விடுதலை அடைந்த உலகின் 3 நபராகிறார்.
- ரத்தப் புற்று நோயை போக்குவதற்காக ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை செய்ததன் மூலம் புற்று நோயிலிருந்து விடுதலை அடைந்துள்ளார்.
விளையாட்டுச் செய்தி
- எகிப்தில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவர் தனி நபர் 25மீ ரேப்பிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா வெண்கலப் பதக்கம் வென்றார்