Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 24th March 2023

Daily Current Affairs

Here we have updated 24th March 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழகச் செய்தி

  • மார்ச் 23-ல் இணையவழி சூதாட்டத்துக்கு தடை விதிக்க வகை செய்யும் சட்டமசோதா பேரவையில் மீண்டும் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
    • குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
    • வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பபட்டது.
    • கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி அவசரச் சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது.
  • சென்னை பேசின் பாலம் மின் உற்பத்தி நிலையத்தில் திரவ நிலையிலான எரிவாயுவை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • மின் உற்பத்திக்கு இயற்கை எரிவாயு கிடைக்காததால் “நாப்தா” என்ற திரவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • மார்ச் 23-ல் சென்னை வர்த்தக மையத்தி்ல் நடைபெற்ற தொழில்நுட்பம், தொழில்முனைவோர், திறன் மேம்பாட்டு உச்சி மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • மார்ச் 23-ல் சென்னை வர்த்தக மையத்தி்ல் நடைபெற்ற உமாஜின் தொழில்நுட்ப கருத்தரங்க மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.
    • “தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைநகரம் தமிழ்நாடு” என தெரிவித்துள்ளார்
  • தேசிய காசநோய் பரவல் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் ஒருலட்சம் பேரில் 332 பேருக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
    • காசநோய் ஒழிப்பு தினம் – மார்ச் 24
  • உத்திரப்பிரதேசம் வாரணாசியில் நடைபெறும் உலக காசேநாய் உச்சி மாநாடு 2023-ல் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
  • சென்னை மந்தைவெளி மேற்கு வட்டச்சாலைக்கு மறைந்த பாடகர் டி.எம். செளந்தரராஜன் (T.M.S) பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ள காசநோய் பாதிப்பில் 5% தமிழகத்தில் காணப்படுகிறது.
    • இந்தியாவில் அதிகபட்சமாக உத்திரபிரதேசத்தில் 20% பாதிப்பு உள்ளது.
    • 2030-ஆம் ஆண்டிற்குள் காசநோயை இந்தியாவை விட்டு விரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய செய்தி

  • செப்டம்பர் 9,10 ஆகிய நாட்களில் “ஜி20 மாநாடு” இந்தியா தலைமையில் தில்லியில் நடைபெற உள்ளது.
    • மார்ச் 24, 25-ல் “நிதி தொடர்பான கட்டமைப்பு செயற்குழுக்கூட்டம்” சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற உள்ளது.
  • மார்ச் 23ல் விவசாயிகள் பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை விரைவாக பெறும் வகையில், தேசிய பயிர்க் காப்பீடு இணையதளம் மூலம் பெறுவதற்கான “டிஜிக்ளைம்” எண்ம முறை வசதியை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார்.
    • பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா என்கிற பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
    • இத்திட்டம் முதற்கட்டமாக ராஜஸ்தான், உத்திரபிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரகண்ட், ஹரியானா ஆகிய 6 மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
    • பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா – 18.02.2016
  • தியாகிகள் தினத்தை முன்னிட்டு சுதந்திரப் போராட்ட வீரர்கள் பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோருக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
    • தியாகிகள் தினம்ஜனவரி 30
  • இந்தியாவில் பரவி வரும் எக்ஸ்பிபி1.16 என்ற உருமாறிய புதிய வகை கராேனாவால் நடப்பாண்டில் இதுவரை 349 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
  • நிகழாண்டின் மத்தியில் சந்திராயன்-3 ஆதித்தியா-எல்1 விண்கலங்கள் ஏவப்பட வாய்ப்புள்ளதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் தெரிவித்துள்ளார்.
    • நிலவில் ஆய்வு மேற்கொள்ள சந்திராயன்-3 விண்கலம் முழுமையாக தயாராகிவிட்டது.
    • இந்தியா சார்பில் முதன்முதலாக சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா-எல்1 விண்கலம் அனுப்பப்பட உள்ளது.

விளையாட்டுச் செய்தி

  • மார்ச் 23ல் மத்திய பிரதேசத்தில் நடைபெறும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவிற்கு 1வெள்ளி, 1வெண்கலம் என 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
    • இதுவரை இந்தியா 4 பதக்கங்களை வென்றுள்ளது. அதில் 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் அடங்கும்.
  • அசாமில் நடைபெற்ற 4வது ஆசிய கோகோ சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி நேபாளத்தை இன்னிங்ஸ் மற்றும் 6 புள்ளிகள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டம் வென்றது.
    • இந்திய மகளிர் அணி இன்னிங்ஸ் மற்றும் 33 புள்ளிகள் வித்தியாசத்தில் நேபாளத்தை வென்று சாம்பியன் பட்டம் வென்றது.

முக்கிய தினம்

  • காசநோய் ஒழிப்பு தினம் – மார்ச் 24
    • கருப்பொருள் : “Yes, We can end TB”
    • மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்ற பாக்டீரியாவல் காசநோய் பரவுகிறது.
    • 24.03.1882-ல் ராபர்ட் காக் இதனை உறுதி செய்து உலகிற்கு அறிவித்தார்.
    • இந்த நாளைத்தான் உலக காசநோய்  விழிப்புணர்வு நாளாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

Mar 21 Current Affairs  |  Mar 22-23 Current Affairs

Leave a Comment