Daily Current Affairs
Here we have updated 24-25th December 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
ஜவுளி நகரம்
- தமிழ்நாட்டில் ஜவுளி நகரமானது திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் அமைய உள்ளது.
- 64 ஏக்கர் பரப்பில் அமைய உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- தென்னிந்தியாவின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
- தமிழ்நாட்டின் ஜவுளி பள்ளத்தாக்கு – சேலம்
- தமிழ்நாட்டின் ஜவுளி தலைநகரம் – கரூர்
தனுஷ்கோடி நினைவு சின்னம்
- ஆழிப்பேரலையால் தாக்கபட்டு அழிந்த தனுஷ்கோடி 59வது ஆண்டாக அதன் சுவடுகளுன் இன்றும் காட்சி அளித்து கொண்டிருக்கிறது.
- தனுஷ்கோடிக்கும் இலங்கை தலைமன்னாருக்கும் இடையே கப்பல் போக்குவரத்து 1914-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- கடந்த 1964-ல் டிசம்பர் 23-ல் தனுஷ்கோடியை ஆழிப்பேரலை தாக்கியது.
எம்.எம்.ராஜேந்திரன்
- தமிழக முன்னாள் தலைமை செயலாளர், ஒடிசாவின் முன்னாள் அளுநருமான எம்.எம்.ராஜேந்திரன் காலமானார்
புதிய விமான வழித்தடங்கள்
- உடான் திட்டத்தின் கீழ் பிராந்திய விமானத்திட்டதில் 60 புதிய வழித்தடங்கள் தொடங்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- மேலும் 154 புதிய ஆர்.சி.எஸ். வழித்தடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உடான் திட்டம் – 2016
தொடர்புடைய செய்திகள்
- 01.04.1995-ல் இந்திய விமான நிலையங்கள் ஆணையமானது (AAI) அமைக்கப்பட்டுள்ளது.
வாகன உற்பத்தி துறை
- இந்தியாவில் தற்போது வாகன உற்பத்தி துறை மதிப்பானது ரூ.12.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
- 2014-ஆம் ஆண்டு ரூ.7 லட்சம் கோடியாக இருந்துள்ளது.
- இத்துறையில் 4.5 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி தேவையில்லை
- இந்தியாவில் புதிதாக ஜேஎன்1 (JN1) கரோனா வைரஸ் பரவி வருகிறது.
- இவ்வகை கரோனா வைரஸுக்கு தடுப்பூசி தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி தமிழ்க் கல்வி கழகம்
- டிசம் 24-ல் தில்லி தமிழ்க் கல்வி கழக நூற்றாண்டு விழாவானது நடைபெற்றுள்ளது.
- தில்லி தமிழ்க் கல்வி கழகமானது 1923-ல் தொடங்கப்பட்டுள்ளது.
அரிய வகை கரும்புலி
- ஒடிசாவில் 10 அரிய வகை கரும்புலிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இக் கரும்புலிகள் ஒடிசாவின் புலிகள் சரணாலயமான சிமிலிபால் தேசிய பூங்காவில் உள்ளது.
- அகவுடி என்ற நிறமி மாற்றத்தால் புலிகளின் உடலில் கருப்பு வரிகள் உருவாகின்றன.
- புவனேஸ்வர் (ஒடிசா), ராஞ்சி (ஜார்க்கண்ட்), வண்டலூர் போன்ற சரணாலயங்களில் இப்புலியினங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பறக்கும் அணில்
- 40 வருடங்களுக்கு பிறகு பறக்கும் அணிலான நம்தாபா தேசிய பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.
- இந்த அணிலிற்கு நம்தபா அணில் என பெயர் வைக்கப்பட்டிருந்து.
- அருணாச்சலபிரதேசம் – நம்தாபா தேசிய பூங்கா (1983)
ஆசிய பசுபிக் விருது 2023
- யுனஸ்கோவின் ஆசிய-பசுபிக் கலாச்சார பாரம்பரிய விருது 2023 அறிவிக்கப்பட்டது.
- சிறப்புக்கான விருது – ராம்பாக் கேட் (அமிர்தசரஸ்)
- சிறப்பு விருது – குன்னமங்கலம் பகவதி கோயில் கர்ணிகார மண்டபம் (கேரளா)
- தகுதிக்கான விருது
- எபிபானி தேவாலயம் (ஹரியானா, குருகிராம்)
- சாசூன் நூலகம் (மும்பை)
- பிகானர் ஹவுஸ் (புதுதில்லி)
- நிலையான மேம்பாட்டு சிறப்பு அங்கீகாரம் – சிகாமி சென் (காத்மாண்டு), பீப்பல் ஹவேலி (பஞ்சாப்)
- யுன்ஸ்கோ சிறப்பு விருது – கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் (இப்பெருமை பெற்ற ஒரே இந்திய விமான நிலையம்)
- 2000-ல் இருந்து இவ்விருதானது வழங்கப்பட்டு வருகிறது.
இந்திய தூதர்
- இலங்கைக்கான இந்தியா தூதராக சந்தோஷ் ஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இடைக்காலத் தடை
- மத்திய விளையாட்டு அமைச்சகமானது இந்திய புதிய மல்யுத்த சம்மேளத்தின் புதிய நிர்வாகிகளுக்கு தடை விதித்துள்ளது.
- புதிய நிர்வாகிகள் பதவியேற்றவுடன் யு-15, யு-20 தேசிய மல்யுத்தம் நடைபெறும் என்று அறிவித்ததை தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
புது தில்லி
- 19வது எலக்ட்ரிக் வாகன கண்காட்சியானது புது தில்லியில் நடைபெற்றுள்ளது.
உலக சுகாதார நிறுவன அறிக்கை
- உலக சுகாதார நிறுவனமானது ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் உள்ள நாடுகள் பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
- இவ்வறிக்கையின் படி 1 மில்லியன் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் உள்ள நாடாக ஆப்கானிஸ்தான் திழ்கிறது.
முதல் டெஸ்ட் வெற்றி
- இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியானது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
ரொனால்டோ
- சவுதி புரோ லீக் தொடரில் அல்-எட்டிஃபா அணிக்கு எதிதான ஆட்டத்தில் தன்னுடைய 870வது கோலினை அடித்து சாதனை படித்துள்ளார்.
தேசிய நுகர்வோர் தினம் (National Consumer Day) – Dec 24
- கருப்பொருள்: “Empowering Consumers Through Clean Energy Transitions”
- 1986 – தேசிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்
- உலக நுகர்வோர் தினம் – மார்ச் 15
பெரியார் நினைவு தினம் – Dec 24
- ஈ.வே.ரா. (ஈரோடு வெங்கடப்பா இராமசாமி) என அழைக்கப்பட்டவர்.
- 19.09.1879-ல் பிறந்தவர்.
- தந்தை பெரியார், வைக்கம் வீரர் என அழைக்கப்பட்டார்.
- 1917-ல் நீதிக்கட்சி தொடக்கம்
- 1925- சுயமரியாதை இயக்கம்
- 1944-ல் திராவிடர் கழகம் என பெயர்மாற்றம்
- குடியரசு (1925), ரிவோல்ட் (1928), பகுத்தறிவு (1934)
- இறப்பு : 24.12.1973
கக்கன் நினைவு தினம் – Dec 24
- 03.10.1963ல் பிறந்துள்ளார்.
- அமைச்சராக பதவி வகித்தபோது மேட்டூர், வைகை, வீடூர் அணைகள் கட்டப்பட்டது.
- ஆதிதிராவிட மக்களுக்காக அரிசன சேவா சங்கம் உருவாக்கப்பட்டது.
- இறப்பு : 24.12.1981
எம்.ஜி.ஆர் நினைவு தினம் – Dec 24
- 17.01.1917-ல் பிறந்துள்ளார்.
- 17.10.1972-ல் அனைத்திந்திய அண்ணா திராடவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கினார்
- 1977-1987 வரை தமிழக முதல்வரா பணியாற்றியவர்
- 1988-ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
- இறப்பு : 24.12.1987
நல்லாட்சி தினம் (Good Governance Day) – Dec 25
- முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்தநாள் நல்லாட்சி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- வாஜ்பாய் பிறந்தநாள் – 25 டிசம்பர், 1924
- 1996-ல் 13 நாட்களும், 1998-99-ல் 13 மாதங்களும், 1999-2004-ல் பிரதமராக பணியாற்றியுள்ளார்
December 22 Current Affairs | December 23 Current Affairs