Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 24-25th November 2022

Daily Current Affairs

Here we have updated 24-25th November 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

  • நவம்பர் 24-ல் தமிழ்நாட்டின் இரண்டவாது பெரிய நகரமான கோயம்புத்தூர் மாவட்டம் உருவான தினம் கொண்டாடப்பட்டது.
    • 24.11.1804-ல் கோயம்புத்தூர் மாவட்டம் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது.

தேசிய செய்தி

  • இந்திய அரசின் டெலிகாம் ஆர் மற்றும் டி மையமான டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையத்தின் “தொழில் முனைவோர் பிரிவு மற்றும் புத்தாக்க மையம்” மத்திய அமைச்சர் ஸ்ரீஅஸ்வினி வைஷ்ணவ் டெல்லி வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
  • அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் தலைவராக கவுகாத்தி ஐ.ஐ.டி.யின் இயக்குநரான டி.ஜி.சீதாராம் நியமனம்.
  • பினோத் குமார் பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குநராக நியமனம்.
  • விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள விமானங்களை சரியான நேரங்களில் இயக்குவதன் தரவரிசை பட்டியிலில் ஏர் இந்தியா நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.
    • 2வது இடம் – விச்தாரா & ஏர் ஏசியா
    • 3வது இடம் – இண்டிகோ
  • நவம்பர் 23-ல் ஒடிசாவில் உள்ள A.P.J.அப்துல்கலாம் தீவில் அக்னி-3 என்ற இடைநிலை ஏவுகணை பயிற்சி சோதனையில் வெற்றி அடைந்தது.
  • நவம்பர் 28-30 வரை இந்திய விமானப்படை ஆக்ரா விமானப்படை நிலையத்தில் வருடாந்திர கூட்டு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண பயிற்சி “சமன்வே-2022” நடைபெறுகிறது.
  • ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் திட்டம் (UNEP) வழங்கும் “பூமியின் சாம்பியன் – 2022” விருதிற்கு அஸ்ஸாம் மாநிலத்தினைச் சேர்ந்த பூர்ணிமா தேவி பர்மன் (வனவிலங்கு உயிரியலாளர்) தேர்வாகியுள்ளார்.
  • இணையவழி விளையாட்டுகளுக்கு விதிக்கபட்ட GST வரி 18%லிருந்து 28%மாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
  • வந்தே பாரத் அறக்கட்டளை மற்றும் லீட் இந்தியா அறக்கட்டளையால் வழங்கப்படும் டாக்டர் கலாம் சேவா புரஸ்கார் விருதிற்கு RK’S INNO குழுமத்தின் இளைய நிர்வாகிகளில் ஒருவரான தலைமை நிர்வாக அதிகாரி ரவிக்குமார் சாகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு  3,500 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்ட “இடைமறித்து தாக்கும் அக்னி-3 ஏவுகணை” ஒடிசாவின் அப்துல்கலாம் தீவில் சோதனை செய்யப்பட்டது.
  • மீனாகுமாரி மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் டைரக்டர் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உலக செய்தி

  • நவம்பர் 24 முதல் இலங்கையில் 5 கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருள் வைத்திருந்தாலோ அல்லது விற்பனையில் ஈடுபட்டாலோ மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும் என்ற சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
  • புர்ஜ் பிங்காட்டி ஜேக்கப் & கோ ரெசிடென்சஸ் என பெயரிடப்பட்ட 100 மாடிகள் கொண்ட “ஹைப்பர் டவர்” கட்டுவதற்கான திட்டங்களை துபாய் அரசு வெளியிட்டுள்ளது.
  • பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக ISI ஏஜென்சியின் முன்னாள் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர் நியமனம் செய்ப்பட்டுள்ளார்.
  • அன்வர் இப்ராகிம் மலேசிய பிரதமாக தேர்வானர்.

முக்கிய தினம்

  • பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு தினம் (நவம்பர் 25)
  • நன்றி தெரிவித்தல் தினம் (நவம்பர் 4வது வியாழன்)

Nov 22 – Current Affairs | Nov 23 – Current Affairs

Leave a Comment