Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 24th September 2023

Daily Current Affairs

Here we have updated 24th September  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழகம் – உறுப்பு தானம் (Organ Donation)

Vetri Study Center Current Affairs - Organ Donation

  • இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
  • உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதன்மையான மாநிலமாக திகழ்கிறது.
  • 2008-க்கு பிறகு மூளைச் சாவு அடைந்த 1,705 மேற்பட்டோரின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 6,267-க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.
  • ஆகஸட்-23-ல் உறுப்பு தான தினம் (திருப்போரூர் அருகில் ஹிதேந்திரன் இறந்த தினம்) கடைபிடிக்கப்படுகிறது.
  • தமிழகத்தில் செப்டம்பர் 23-ல் உறுப்பு மாற்று தினம் கடைபிடிக்கப்படுகிறது.

சிலை திறப்பு

Vetri Study Center Current Affairs - Silamboli Chellappan statue

  • நாமக்கல்லில் தமிழறிஞர் சிலம்பொலி க.செல்லப்பன் சிலையை (Silamboli Chellappan statue) முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • மதுரையில் டி.எம்.செளந்தரராஜன் சிலையானது திறக்கப்பட்டுள்ளது.
  • தமிழ் எழுத்துக்களால் ஆன வள்ளுவர் சிலையானது கோவையில் திறக்கப்பட்டுள்ளது
  • 01.01.2000-ல் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையானது திறக்கப்பட்டது.

வந்தே பாரத் (Vadhe bharat)

Vetri Study Center Current Affairs - Vadhe bharat

  • செப்டம்பர் 24-ல் 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
  • தமிழகத்திற்கான இரு வந்தே பாரத் ரயில்களும் இதில் அடங்கும்.
    1. திருநெல்வேலி – சென்னை
    2. விஜயவாடா –  சென்னை
    3. உதய்பூர் – ஜெய்பூர்
    4. காசர்கோடு – திருவனந்தபுரம்
    5. ஜாம்நகர் – அகமதாபாத்
    6. ராஞ்சி -ஹெளரா
    7. ஹைதராபாத் – பெங்களூரு
    8. பாட்னா – ஹெளரா
    9. ரூர்கேலோ – பூரி

சுவாதி நாயக் (Swati Nayak)

Vetri Study Center Current Affairs - Swati Nayak

  • 2023ஆம் ஆண்டிற்கான அமெரிக்காவின் நார்மன் இ போர்லாக் விருதானது (The Prestigious Norman Borlaug Filed Award) ஒடிசா மாநிலத்தை சேர்ந்த விஞ்ஞானி சுவாதி நாயக்கு வழங்கப்பட உள்ளது.
  • உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான ஆராய்ச்சிக்காக மூன்றாவது இந்தியர் ஆவார்.

தொடர்புடைய செய்திகள்

  • தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது கி.வீரமணி வழங்கப்பட்டுள்ளது.
  • கல்பனா சாவ்லா விருதானது நா.முத்தமிழ் செல்விக்கு (எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழ் பெண்) வழங்கப்பட்டுள்ளது
  • ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருதானது வசந்தா கந்தசாமிக்கு (வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக கணினி துறை பேராசிரியர்) வழங்கப்பட்டுள்ளது

தரவரிசையில் முதலிடம்

  • கிரிக்கெட் அனைத்து வடிவ போட்டிகளிலும் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணி முதலிடம் பிடித்துள்ளது.
  • 2012-ல் தென்னாப்பிரிக்கா அணிக்கு பிறகு இந்திய அணி இச்சாதனையை புரிந்துள்ளது.

September 22 Current Affairs | September 23 Current Affairs

Leave a Comment