Daily Current Affairs
Here we have updated 25th January 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழகச் செய்தி
- கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
- ஒடிசாவின் கஞ்சாம் மாவட்டம் முதலிடமும், ராஜஸ்தானின் பார்மிரா மாவட்டம் இரண்டாம் பிடித்துள்ளது.
- மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 25.08.2005ல் நடைமுறைக்கு வந்தது
தேசிய செய்தி
- ஆஸ்கர் விருதுக்கான இறுதி பரிந்துரைப் பட்டியலில் ஆர்ஆர்ஆர் படத்தின் “நாட்டு நாட்டு” பாடல் தேர்வாகியுள்ளது.
- சிறந்த ஆவணப் படத்திற்கான இறுதி பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் “ஆல் கட் பிர்க்ஸ்” ஆவணப்படமும், குறும்படத்திற்கான பட்டியலில் தமிழில் எடுக்கப்பட்ட “தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்” குறும்படமும் தேர்வாகியுள்ளது.
- மார்ச் 12ல் 95வது ஆஸ்கர் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகரில் நடைபெற உள்ளது.
- ஜனவரி 27-ல் திருவனந்தபுரத்தில் அலுவல் மொழி மண்டல மாநாடு-ஐ மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அலுவல் மொழித்துறை நடத்துகிறது.
- பிப்ரவரி 17-ல் தெலுங்கானா தலைநகர் ஹைதரபாத்தில் அம்மாநிலத்திற்கான புதிய தலைமைச் செயலகம் திறக்கப்பட உள்ளது.
- நீதிபதிகள் நியமன விவகாரத்தில் உயிர்நீதிமன்ற கொலீஜியம் மீது மத்திய அரசு மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.
- உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பினால் 1993-ல் கொலீஜியம் அமைப்பு உருவாக்கப்பட்டது.
- குடியரசுதின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்கவுள்ள எகிப்து அதிபர் எல்-சிசி இந்தியா வருகை தந்துள்ளார்.
- இந்திய வடகிழக்கு பகுதியில் இந்திய விமானப்படை “பிரலே” பயிற்சியை நடத்துகிறது.
- இப்பயிற்சியில் Su-30, ரஃபேல் போர் விமானங்கள் பங்கேற்க உள்ளன.
- தேர்வு குறித்து மாணவர்களுடன் கலந்துரையாட தொலைபேசி எண் 1921 அறிமுகப்படுத்தப்படுள்ளது.
- இமாச்சலப்பிரதேசம் தனது 53வது மாநில தினத்தை கொண்டாடுகிறது.
- மாநிலச்சட்டம் 1970ன் படி 1971 ல் உருவாக்கப்பட்ட 18வது மாநிலம்
- சிக்கிம் மாநிலத்தில் பிறப்பு விகிதம் (1.1) குறைவாக உள்ள காரணத்தினால் ஒரு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் பெண் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை சிக்கிம் மாநில அரசு அறிவித்துள்ளது.
- IVF முறையில் குழந்தை பெறுபவருக்கு ரூ.3 லட்சமும் நிதியும், பேறுகால விடுப்பு 365 நாட்கள் எனவும் அறிவித்துள்ளது.
உலகச் செய்தி
- “டுநாட்பே” என்ற சட்ட ஆலோசனை வழங்கும் நிறுவனம் உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு ரோபோ வழக்கறிஞரான “ROSS”யை உருவாக்கியுள்ளது.
- பிப்ரவரி மாதத்தில் அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஸ்வீடன் நேட்டாவில் அமைப்பில் இணைய ஆதரவு தரமாட்டோம் என துருக்கி அறிவித்துள்ளது.
- நேட்டா உருவாக்கப்பட்ட ஆண்டு – 04.04.1949
- தலைமையகம் – பெல்ஜியம்
- உறுப்பினர்களின் எண்ணிக்கை – 30
முக்கிய தினம்
- தேசிய வாக்காளர் தினம் (ஜனவரி 25).
- கருப்பொருள் : “வாக்களிப்பதை போல எதுவும் இல்லை, நான் நிச்சயமாக வாக்களிக்கிறேன்”