Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 25th February 2023

Daily Current Affairs

Here we have updated 25th February 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழகச் செய்தி

 • மார்ச் 1முதல் திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் சார்பில் “கவ் மில்க்” எனும் புதிய ஆவின் பால் அறிமுகம் செய்கிறது.
 • பிப்ரவரி 25-ல் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் “6வது பொருநை நெல்லை புத்தக திருவிழா” தொடங்குகிறது.
  • மேலும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிறை நூலகம், அரசுப் பள்ளிகூட நூலகங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளின் நூலகங்களுக்கு புதிய புத்தகம் வழங்கும் “புத்தகப் பாலம்” என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • புத்தக நன்கொடைக்கு https://nellaibookfair.in என்ற இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 • வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதில் சென்னை மாவட்டம் கடைசி இடமான 38வது இடம் பிடித்துள்ளது.
  • 38,66,626 வாக்களார்களை கொண்டது சென்னை மாவட்டம்
  • 31.83% பேர் மட்டும் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
  • அரியலூர் மாவட்டம் 97.12%-உடன் முதலிடம் இடம் பிடித்துள்ளது
 • சர்க்கரை நோய் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 22.3%-உடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
  • முதலிடம் – கேரள மாநிலம் (24.4%)
  • மூன்றாமிடம் – ஆந்திரா (22.7%)
  • யூனியன் பிரதேசத்தில் கோவா (22.7%), புதுச்சேரி (22%), லட்சத்தீவுகள் (21.9%) முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
  • சர்க்கரை நோயால் நாடு முழுவதும் 19 கோடி பேருக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளன. சர்க்கரை நோயின் உலகின் தலைநகரமாக இந்தியா உருவெடுத்துள்ளது.
  • வட மாநிலங்களான உத்திரபிரதேசம், தில்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்திரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் 12%க்கும் குறைவாக பாதிப்பு உள்ளது.
  • கடந்த நிதியாண்டில் 14.7% பேர் ரத்த சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்து
 • பிரதமர் வீடு கட்டும் திட்ட முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறையை தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் பின்பற்றலாம் என உச்ச நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
  • பிரதமர் வீடு கட்டும் திட்டம்பிரதான் மந்திர ஆவாஸ் யோஜனா (2015)
 • கைப்பேசி செயலி வழியாக தொலகாப்பியத்தை அறிந்து கொள்ளும் புதிய வசதியை “செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்” தொடங்கியுள்ளது.
  • இது பார்வை திறனற்ற மாற்றுத்திறளாளிகளுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • 2021-ம் ஆண்டு தொல்காப்பியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை செம்மொழி தமிழாய்வு நிறுவனம் வெளியிட்டது.
  • “CICT தொல்காப்பியம் எழுத்து” (Phonology and Morphology Mobile Application) என்ற பெயரில் எழுத்து அதிகாரத்தின் செயலியை கூகுள் ஆண்ட்ராய்டு “பிளே ஸ்டோடரில் வெளியிட்டுள்ளது.

தேசிய செய்தி

 • ஐ.நா.-வின் உக்ரைன்-ரஷியா போர் நிறுத்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது.
 • நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் வேளாண்மை துறைக்கு ரூ.1.25 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 2014 நிதியாண்டில் ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கபட்டிருந்த நிலையில் தற்போது இதனை 5 மடங்கு உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
 • இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான கரோனோ தடுப்பூசி திட்டத்தால் 34 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிரிகள் காப்பற்றப்பட்டுள்ளன என்ற அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • கேரள மாநிலம் குருவாயூரில் புதைசாக்கடைகளில் நுழைந்து கழிவுகளை அகற்றும் பணிகளுக்கு ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் புதைசாக்கடைகளில் கழிவுகளை அகற்ற ரோபோக்களை பயனபடுத்திய முதல் மாநிலம் கேரளம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
  • 2018-ல் திருவனந்தபுரத்திலும் பின் எர்ணாகுளம், குருவாயூரில் கழிவுகளை அகற்ற ரோபோ பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 • இந்தியாவில் ஊழலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுவரும் நிலையில் அதனை தடுக்க அனைத்து நிலைகளிலும் பொறுப்புடைமையை நிர்ணயிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  • 2019 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற 539 எம்.பி.க்களில் 233 பேர் (43%) எதிராக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலகச் செய்தி

 • சோயுஸ்-எம்எஸ்22 விண்கலத்தில் கசிவு ஏற்பட்டதன் காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கியுள்ள அமெரிக்க மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்களை மீட்டு அழைத்துவர ரஷ்யா தனது சோயுஸ் விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.
  • சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஆய்வு மேற்கொள்வதற்காக அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் ஃபிராங்க்ரூபியோ, ரஷ்ய விண்வெளி ஆய்வு மையமான ராஸ்கோஸ்மாஸைச் சேர்ந்த செர்கேய் ப்ரோகோபியேவ், டிமித்திரி பீட்டலின் ஆகிய மூவரும் ரஷ்யாவின் சோயுஸ்-எம் விண்கலம் மூலம் அனுப்பியிருந்தது.

விளையாட்டுச் செய்தி

 • பிரான்சில் நடைபெற்ற நோய்சியல் சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் ஈரோட்டினை சேரந்த கிராண்ட் மாஸ்டர் இனியன் பட்டம் வென்றார்.

Feb 23 Current Affairs  |  Feb 24 Current Affairs

Leave a Comment