Daily Current Affairs
Here we have updated 25th March 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழகச் செய்தி
- தமிழகத்தில் மலைப் பகுதிகள், பின் தங்கிய ஊரகப் பகுதிகளில் உயர் சிறப்பு மருத்துவ சேவைகளை தொலைநிலை முறையில் (டெலி மெடிசன்) வழங்குவதற்கான முயற்சியை மக்கள் நல்வாழ்வுத் துறை முன்னெடுத்துள்ளது.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை முறையில் தொலைநிலை மருத்து சேவை மேற்கொள்ளப்பட்டது.
- மார்ச் 24 இந்தியாவுக்கான கல்வி மேம்பாட்டு சங்கம் (இபிஎஸ்ஐ) சார்பில் “உயர் கல்வியில் ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பது மற்றும் எண்ம கற்றல் தொழில் நுட்ப மாநாடு” குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது.
- மாறிவரும் தொழில்நுட்ப சூழலுக்கு ஏற்ற வகையில் நவீன தொழில் நுட்ப பயிற்சிகள் அனைத்தும் “நான்முதல்வன்” திட்டத்தின் கிழ் கட்டாயப்படுத்தப்படும் என தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநனர் இன்சென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
- “நான்முதல்வன்” – 01.03.2022
- தமிழக பேரிடர் மேலாண்மைக் கொள்கையை முதல்வர் மு.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
- காசநோய் ஒழிப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக மாவட்ட அளவிலான விருதுகள் நீலகிரி, புல்வாமா, அன்ந்த்நாக் ஆகியவற்றுக்கு வழங்கபட்பட்டுள்ளன.
- மாநில அளவிலான விருது கர்நாடகாவிற்கும், யூனியன் பிரதேச அளவிலான விருது ஜம்மு-காஷ்மீருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
- இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ள காசநோய் பாதிப்பில் 5% தமிழகத்தில் காணப்படுகிறது.
- இந்தியாவில் அதிகபட்சமாக உத்திரபிரதேசத்தில் 20% பாதிப்பு உள்ளது.
- 2030-ஆம் ஆண்டிற்குள் காசநோயை இந்தியாவை விட்டு விரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேசிய செய்தி
- ஆண்டு வருமானம் ரூ.7,27,700 வரை உள்ளவர்கள் வரிவிலக்கு பெறுவர் என்று நிதியமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரதமரின் உஜ்வலா திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு வழங்கப்படும் ரூ.200 மானியத்தொகை ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டள்ளது.
- பிரதமரின் உஜ்வலா திட்டம் – 01.05.2016 (2016 மே 1).
- மார்ச் 24-ல் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு உத்திரப்பிரதேசம் வாரணாசியில் உலக காசேநாய் உச்சி மாநாடு 2023 நடைபெற்றது
- 2030-ஆம் ஆண்டிற்குள் காசநோயை இந்தியாவை விட்டு விரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இந்தியா காசநோயை ஒழிப்பதற்கு “காசநோய் ஒழிப்பு நண்பர்கள்” (நிக்ஷ்ய் மித்ரா) என்ற திட்டத்தின் மூலம் காசநோயாளிகள் தத்தெடுக்கப்படுகின்றனர்.
- இத்திட்டத்தின் மூலம் காசநோயளிகளை தத்தெடுப்போர் அவர்களின் மருத்துவ சிகிச்சைக்குரிய தொகையை ஏற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை வகித்து வரும் இந்தியா “ஒரே குடும்பம், ஓரே உலகம், ஒரே எதிர்காலம்” என்ற கருப்பொருளைத் தேர்ந்தெடுத்துள்ளது.
- பிரதமரின் பயிர்காப்பீட்டு திட்டத்தில் இதுவரை 38 கோடி விவசாயிகள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
- பிரதமரின் பயிர்காப்பீட்டு திட்டம் –18.02.2016
- இரு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டள்ளதற்காக மக்களவையில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்பட்பட்டுள்ளார்.
- மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (1951) இதற்கான அனுமதி அளிக்கிறது.
- மார்ச் 24-ல் ஜி20 கூட்டமைப்பின் இரண்டாவது நிதி கட்டமைப்பு பணிக்குழு கூட்டம் சென்னையில் தொடங்கியது.
- 2022-ம் ஆண்டுக்கான இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலங்கள் பட்டியிலில் ரண்வீர் சிங் முதலிடம் பிடித்துள்ளார்.
- 2வது இடம் – விராட்கோலி
- 3வது இடம் – அக்ஷய் குமார்
- பத்மா லட்சுமி கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர்-ஆக உருவெடுத்துள்ளார்.
- 2017-ல் மேற்கு வங்கத்தை சார்நத் “ஜாேயிதா மோண்டல்” இந்தியாவின் முதல் திருங்கை வழக்கறிஞர்-ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- பிரமோஸ் ஏவுகணையின் செயல்திறனை பரிசோதிக்கும் புதிய சாதனம் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- இந்தியா-ரஷ்ய கூட்டு முயற்சியில் பிரமோஸ் ஏரோஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
- இதன் பெயரானது இந்தியாவின் பிரம்மபுத்திரா, ரஷ்யாவின் மாஸ்குவா நதியின் பெயர் கலப்பால் உருவானது.
விளையாட்டுச் செய்தி
- மார்ச் 24-ல் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ருத்ராங்க்ஸ் பாட்டீல் ஆடவர் தனிநபர் 10 மீட்டர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
- ஏற்கனவே ஏர்ரைஃபிள் பிரிவில் நர்மதா நிதினுடன் இணைந்து வெண்கலம் வென்றிருந்தார்.
- நடப்பாண்டு மார்ச் 31-ம் தேதி முதல் மகளிருக்கான சர்வதேச தடகள போட்டிகளில் திருநங்கை போட்டியாளர்கள் அனுதிக்கப்பட மாட்டார்கள் என்று உலக தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது.