Daily Current Affairs
Here we have updated 25-26th February 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது
- 2020ஆம் ஆண்டிற்கான அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருதானது வள்ளலாரிய ஆய்வாளரான திண்ணை ம.சரவணுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவர் எழுதிய நூல்கள்
- அருட்பா
- மருட்பா
- நவீன நோக்கில் வள்ளலார்
- வாழையடி வாழையென
தொடர்புடைய செய்திகள்
- பிரெஞ்சு அரசானது சசிதரூர்-க்கு செவாலியர் விருது வழங்கியுள்ளது.
- முதலமைச்சர் சிறப்பு விருது – ஆயி அம்மாள்
- அண்ணா பதக்கம் – சு.சிவக்குமார், தே.டேனியல் செல்வசிங், யாசர் அராஃபத்
- சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்திக்கான விருது – சி.பாலமுருகன்
- கோட்டை அமீர் பதக்கம் – முகமது ஜீபைர்
- நம்மாழ்வார் விருது – கோ.சித்தர், கே.வெ.பழனிசாமி, கு.எழிலன்
அடிக்கல் நாட்டல்
- தமிழகத்தில் வியட்நாமின் வின்ஃபாஸ்ட் நிறுவனம் மின்சார வாகனம் மற்றும் அதற்கான பேட்டரிகளை தாயரிக்கும் ஆலையை நிறுவ உள்ளது.
- தூத்துக்குடி, சில்லா நத்தம் சிப்காட் வளாகத்தில் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
இவ்விழாவில் போது
- வேம்பார் பகுதியில் பனை பொருள்கள் குறுங்குழுமம், கோவில்பட்டியில் கடலை மிட்டாய் குறுங்குழுமம், தூத்துக்குடியில் வர்த்தக மையமும் அமைக்கப்பட உள்ளது.
தேசிய முதியோர் நல மருத்துமனை மையம்
- சென்னை, கிண்டியில் கட்டப்பட்பட தேசிய முதியோர் நல மருத்துமனை மையத்தினை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.
- உலக முதியோர் தினம் – ஆகஸ்ட் 21
ஆலை திறப்பு
- சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக செங்கல்பட்டு, நெய்மேலியில் ரூ.1516 கேோடி செலவில் அமைக்கப்பட்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்து.
- நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் சென்னை குடிநீர் வாரியம் இணைந்து இவ்வாலையை நிறுவி உள்ளது.
பள்ளி சேர வயது
- 6வயது நிரம்பாத குழந்தைகளை பள்ளியில் சேர்க்க கூடாது மத்திய கல்வித்துறை செய்யப்பட்டுள்ளது.
கேன்ஸ் திரைப்பட விழா-பிரான்ஸ்
- சிறந்த ஒளிப்பதிவாளருக்கான பியர் ஏஞ்சனியூ (Pierre Angenieux) விருதானது சந்தோஷ் சிவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- இவ்விருதினை பெறும் முதல் இந்தியர் ஆவார்.
கவுகாத்தி ஐஐடி
- இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் பைலட் பயிற்சி அமைப்பினை கவுகாத்தி ஐஐடி தொடங்கியுள்ளது.
அசாம்
- அசாம் மாநிலத்தில் குழந்தை திருமணத்தினை ஒழிக்க இஸ்லாமிய திருமணங்கள் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம் 1935 ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- இந்திய இந்து திருமணங்கள் சட்டம் – 1955
- கிறிஸ்தவ திருமண சட்டம் – 1872
தர்ம கார்டியன்
- இந்தியாவிற்கும், ஜப்பான் இடையே கூட்டு ராணுவப் பயிற்சியானது தர்ம கார்டியன் எனும் பெயரில் நடத்தப்பட்டது.
நான்கு வழி கம்பி பாலம்
- நாட்டின் மிக நீளமான நான்கு வழி கம்பி பாலம் குஜராத்தின் ஓகா-பேட் துவாரகை இடையே 2.32 கி.மீ அளவில் சுதர்சன் சேது எனும் பெயரில் உருவாக்கப்பட்டது.
- இதனை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.
மேலும் குஜராத் (ராஜ்கோட்), உத்திரப்பிரதேசம் (ரேபரேலி), பஞ்சாப் (பதிண்டா), மேற்குவங்கம் (கல்யாணி), ஆந்திரா (மங்களகிரி) போன்ற இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்துள்ளார்.
மெக்ஸிகோ ஆடவர் டென்னிஸ் போட்டி
- ஆஸ்திரேலியாவின் ஜோர்டன் தாம்ப்ஸன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்
February 23 Current Affairs | February 24 Current Affairs