Daily Current Affairs
Here we have updated 25th December 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
முத்தமிழ் செல்வி
- தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி அண்டார்டிகா மவுண்ட் வின்சன் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்|
- ஏவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ்ப்பெண் – முத்தமிழ் செல்வி
- கல்பனா சால்வா விருது – 2023
மனித உரிமைகள் ஆணையம்
- மனித உரிமைகள் ஆணைய தலைவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை ஆகும்.
- தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமசுப்ரமணியன் மனித உரிமைகள் ஆணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் இப்பதவியை வகிப்பது இதுவே முதல் முறை.
பொதுப்பட்டியல்
- பள்ளி கல்வி பொதுப்பட்டியலின் கீழ் வருகிறது.
- தற்போது அனைத்து மாநிலங்களிலும் 5 மற்றும் 8ஆம் வகுப்பு தேர்ச்சி அளிக்கும் கொள்கையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- 42 CAA-ன் படி 1976ஆம் ஆண்டு கல்வி மாநிலப்பட்டியலில் இருந்து மாற்றபட்டது
- இதனுடன் காடுகள், எடைகள் மற்றும் அளவுகள், பறவைகள் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு, மறும் உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்றம் அமைப்புகளை தவிர பிற நீதிமன்றங்களின் நீதி நிர்வாகம் ஆகியனவாகும்.
பூஜ்ய கழிவு விமான நிலையம்
- மத்தியபிரதேசத்தின் இந்தூரில் உள்ள தேவி அகில்யாபாய் ஹோல்கர் விமான நிலையம் இந்தியாவின் முதல் பூஜ்ய கழிவு விமான நிலையமாக மாற உள்ளது.
- விமான நிலையங்களில் கிடைக்கும் கழிவுகளை உரமாக மாற்றுவது பூஜ்ய கழிவு எனப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவின் தூய்மையான நகரம் – இந்தூர்
புதிய ஆளுநர்
- கேரள மாநிலத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர அர்லேகர் நியமிக்கப்பட்|டுள்ளார்.
- விதி 155-ன் படி குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகிறார்
- விதி 157-ன் படி ஆளுநர் தகுதி வரையறுக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
- மணிப்பூர் ஆளுநர் – அஜய் பல்லா
- பீகார் ஆளுநர் – ஆரிப் முகமது கான்
- மிசோரம் ஆளுநர் – விஜய்குமார் சிங்
- ஒடிசா ஆளுநர் – ஹரிபாபு
தலைமை நீதிபதி
- உத்திரகண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நரேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இமாச்சலபிரதேச மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்தவாலியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி நியமன விதி – 217
- இந்தியாவிலுள்ள உயர்நீதிமன்றங்கள் – 25
- மிகப் பழையான உயர்நீதிமன்றம் – கொல்கத்தா
- மிகப் பெரிய உயர்நீதிமன்றம் – அலகாபாத்
கடற்படையிடம் ஒப்படைப்பு
- உள்நாட்டில் மிக நவீனமாக தயாரிக்கப்பட்ட பி17ஏ, பி15பி ரகங்களைச் சேர்ந்த நீல்கிரி சூரத் போர்க்கப்பல் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சந்திரசேகரேந்திர சரஸ்வதி விருது
- தென் இந்தியா கல்வி சங்கம் வழங்கும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விருதானது மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டுள்ளது.
SPADEX
- SPADEX திட்டமானது PSLV-C60 மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.
- SPADEX – Space Docking Expreriment
சர்வதேச ஒட்டக ஆண்டு
- ஐக்கிய நாடுகள் சபையானது 2024-ஆம் ஆண்டை சர்வதேச ஒட்டக ஆண்டாக அறிவித்துள்ளது.
முக்கிய தினம்
நல்லாட்சி தினம் (Good Governance day) – டிசம்பர் 25
- அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளை நினைவாக 2014 முதல் நல்லாட்சி தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 25-ல் கொண்டாடப்பட்டு வருகிறது.
- பாரத ரத்னா விருது – 2015
CA 👏 360° 🔥