Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 25th January 2024

Daily Current Affairs

Here we have updated 25th January 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

நாமக்கல் கவிஞர் சிலை

  • நாமக்கலிலுள்ள நாமக்கல்லார் மண்படத்தில் நாமக்கல் கவிஞரின் மார்பளவு சிலையானது தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கணியன் பூங்குன்றனார் சிலை

  • (சிவகங்கை) திருப்பத்தூர் வட்டம் மகிபாலன்பட்டியில் கணியன் பூங்குன்றனாரின் மார்பளவு சிலையானது தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பழமையான கல்லாங்குழி

  • திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே பாலசமுத்திரம் பேரூராட்சி, குரும்ப்பட்டியில் மனித இனத்திற்கு முந்தைய இனமான ஹோமா எரக்டஸ் இனம் உருவாக்கிய கல்லாங்குழி அடங்கிய தொகுதியானது கண்டறியப்பட்பட்டுள்ளது.
  • இது 4 லட்சம் ஆண்டுகள் பழமையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செயலிகள்

பருந்து செயலி

  • குற்றச் செயல்களை முன்னரே கண்டறிந்து தடுக்கும் வகையிலும், ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் தமிழக காவல் துறை பருந்து என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.
  • பழைய குற்றவாளிகள் தொடர்புடைய வழக்குகளை விரைவாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் உதவுகிறது.

பந்தம் செயலி

  • சென்னையில் வசிக்கும் 75 வயதிற்கு மேற்பட்டவர்கள் தனியாக வசிப்பவர்கள் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் விதமாக தமிழக காவல்துறையில் பந்தம் என்னும் செயலி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நிவாரணம் செயலி

  • போலீஸ் அதிகாரிகள், இணையதளம் வாயிலாக பொதுமக்கள் அளிக்கும் புகார்களை ஒருங்கிணைத்து அவற்றை கண்காணிக்கவும், விசாரணை முறைகள் நடவடிக்கைகள் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து புகார் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக நிவராணம் என்னும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்

  • அலங்காநல்லூர் (மதுரை), கீழக்கரையில் உலகின் முதல் பிரம்மாண்ட ஏறுதழுவுதல் அரங்கமாக கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
  • இவ்வரங்கமானது 5,000 பார்வையாளர்கள் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • மேலும் நூலகம், அருங்காட்சியகம், ஒலி-ஒளி காட்சிக்கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • காஞ்சிபுரம், பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில் புதிய தொழிற்சாலை அமைக்க பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜிஸ் நிறுவனமானது தமிழக அரசுடன்  புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
  • இத்தொழிற்சாலையில் மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருட்களை உற்பத்தி செய்யப்பட உள்ளது.

பிரசன்னா பாலச்சந்திரா வராலே

  • உச்சநீதிமன்ற புதிய நீதிபதியாக பிரசன்னா பாலச்சந்திரா வராலே நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இதன் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

அஞ்சல் தலை வெளியீடு

  • பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூர் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • நிலக்கரி வாயுமயமாக்கல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் 2030 ஆம் ஆண்டுக்குள் 10 கோடி டன் நிலக்கரியை வாயுமயமாகக்க அரசு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • டொமனிக்கன் குடியரசுடன் இணைந்து கூட்டு பொருளாதார மற்றும் வர்த்தககுழு அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

டெஸர்ட் நைட் விமானப்படை பயிற்சி (Exercise Desert Knight)

Vetri Study Center Current Affairs - Exercise Desert Knight

  • அரபிக்கடல் பகுதியில் இந்தியா, பிரான்ஸ் மற்றும் யுஏஇ நாடுகள் பங்கேற்ற டெஸர்ட் நைட் விமானப்படை பயிற்சியானது நடத்தப்பட்டுள்ளது.

பங்குச்சந்தை தரவரிசை

  • உலக பங்குச்சந்தை தரவரிசையில் இந்தியா 4வது இடம் பிடித்துள்ளது.
  • இந்தியா ஹாங்காங்கை பின்னுக்கு தள்ளி 4வது இடத்திற்கு முன்னேறியது.

ஐஐசி விருதுகள் 2023

  • 2023 ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக சூர்ய குமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக இவ்விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
  • 2023 ஆம் ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் வீரராக நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்த்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய வாக்காளர் தினம் (National Voter’s Day) – ஜன 25

Vetri Study Center Current Affairs - National Voter's Day

  • கருப்பொருள்: Nothing like Voting, I vote for sure

தேசிய சுற்றுலா தினம் (National Tourism Day) – ஜன 25

Vetri Study Center Current Affairs - National Tourism Day

  • கருப்பொருள்: Sustainable Journeys, Timeless Memories

January 20 Current Affairs | January 23 Current Affairs

Related Links

Leave a Comment