Daily Current Affairs
Here we have updated 25th June 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழ் செம்மொழி தினம்
- ஆண்டுதோறும் ஜூன் 3-ல் தமிழ் செம்மொழி தினம் கொண்டாடப்படுமென தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ் செம்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.
தமிழ் மொழி தியாகிகள் தினம்
- ஆண்டுதோறும் ஜனவரி 25-ல் தமிழ் மொழி தியாகிகள் தினம் கொண்டாடப்பட உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகல்விளக்கு திட்டம்
- 9 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு அகல்விளக்கு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- 9-12 வகுப்பு வரை பயிலும் மாணவிகள் எவ்வித இடர்பாடு இன்றி தொடர்ந்து பள்ளிக்கு வந்து செல்வதை உறுதி செய்யவும், இணையத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவை குறித்து கற்பிக்கப்படுகிறது.
மொத்த சிறுநிதி கடன் குறியீடு
- தொழில் தொடங்க வழங்கப்படும் மொத்த சிறுநிதி கடன் குறியீட்டில் தமிழகம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
- இதில் பீகார் முதலிடம் பிடித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு எந்திரனியல் ஆய்வகம்
- சேலம், கோயம்புத்தூர், பர்கூர் (கிருஷ்ணகிரி) போன்ற இடங்களில் செயற்கை நுண்ணறிவு எந்திரனியல் ஆய்வகம் (Artificial Intelligence Mechanics Lab) அமைய உள்ளது
சிலை அமைத்தல்
- கவிஞர் முடியரசன் சிலையானது சிவகங்கையில் அமைக்கப்பட உள்ளது.
- தென்னாட்டு ஜவகர் என அழைக்கப்பபடும் நாடிமுத்து சிலையானது பட்டுக்கோட்டையில் அமைக்கப்பட உள்ளது.
- துணை குடியரசுத் தலைவர் இராகிருஷ்ணனுக்கு திருத்தணியில் சிலையானது அமைக்கப்பட உள்ளது.
- அறிவியல் அறிஞர் ஜி.டி.நாயுடுவுக்கு கோயம்புத்தூரில் சிலையானது அமைக்கப்பட உள்ளது.
- இந்திராகாந்தி, ஜான் மார்ஷல் ஆகியோருக்கு சிலையானது சென்னையில் அமைக்கப்பட உள்ளது.
அரசு விழா
- எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பிறந்த நாள் விழா தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- 1991 – கோபல்லபுரத்து மக்கள் (சாகித்திய அகாதெமி விருது)
- கரிசல் வட்டாரச் சொல்லகராதி உருவாக்கியவர்
- எழுத்துலகில் கி.ரா என அழைக்கப்படுகிறார்.
- எழுதிய நூல்கள் – கிடை, கோபல்லபுரத்து மக்கள், சிறுவர் நாடோடிக் கதைகள்
வறுமை குறைப்பு
- இந்தியாவில் 2015-16 முதல் 2019-21 வரை 13.55 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
- BIMARU மாநிலங்களில் வறுமையின் அளவு சதவீதத்தினை அதிகமாக குறைத்த மாநிலங்களில் பீகார் முதலிடம் பிடித்துள்ளது.
- அதிக மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்துள்ள மாநிலமாக உத்திர பிரதேசம் அமைந்துள்ளது.
இலக்கிய நகரம்
- இந்தியாவின் முதல் யுனஸ்கோ இலக்கிய நகரமாக கோழிக்கோடு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேகவெடிப்பு
- அருணாச்சல பிரதேசத்தின் இடாநகரில் மேகவெடிப்பினால் மழை பெய்துள்ளது.
மேகவெடிப்பு என்பது குறுகிய கால, தீவிர மழைப்பொழிவு ஆகும்.
நிலையான வளர்ச்சி குறியீடு 2024
- ஐ.நா. வெளியிட்டுள்ள நிலையான வளர்ச்சி குறியீடு 2024-ல் இந்தியா 109வது இடம் பிடித்துள்ளது.
- இப்பட்டியலில் பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.
ரோஹித் சர்மா
- சர்வதேச டி20 போட்டிகளில் 200 சிக்கர்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.