Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 25th March 2025

Daily Current Affairs 

Here we have updated 25th March 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தனிநபர் வருமானம்

  • தனிநபர் வருமானம் பட்டியலில் தமிழ்நாடு நான்காவது இடம் பிடித்துள்ளது.
  • தெலுங்கானா, கர்நாடாகா, ஹரியானா முதலிய மாநிலங்கள் முறையே முதல் மூன்று இடங்ககளை பிடித்துள்ளன.

மாநிலங்கள் பட்டியல்

  • தனிநபர் வருமான அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, நாமக்கல், திருப்பூர் முறையே முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.
  • தனிநபர் வருமான குறைவாக உள்ள மாநிலங்கள் பட்டியலில் திருவாரூர், விழுப்புரம், பெரம்பலூர், மயிலாடுதுறை, அரியலூர் முறையே கடைசி 5 இடங்களை பிடித்துள்ளன.

சைகை மொழி

  • பஞ்சாப் அரசு சட்டமன்ற நடவடிக்கைகளை சைகை மொழியில் பரப்பியது.
  • இதன் மூலம் சட்டமன்ற நடவடிக்கைகளை சைகை மொழியில் பரப்பிய மாநிலம் என்ற பெருமையை பெருகிறது.
  • காது கேளாதவர்கள் அல்லது பேச்சு குறைபாடு உள்ளவர்களுக்காக உடல் அசைவுகளைப் பயன்படுத்தி தகவல்களைப் பரிமாறிக் கொள்ள சைகை மொழியைப் பயன்படுத்துகின்றனர்.
  • விளையாட்டு தொடர்பாக சட்டம் கொண்டு வந்த முதல் மாநிலம் – பஞ்சாப்

தொடர்புடைய செய்திகள்

  • மாற்றுத்திறனாளிகள் சட்டம் – 2016
  • சர்வதேச சைகை மொழி தினம் – செப்டம்பர் 23

மிதக்கும் மின் உற்பத்தி நிலையம்

  • கேரளாவில் BPCL-ன் மிதக்கும் மின் உற்பத்தி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

சிலை திறப்பு

Vetri Study Center Current Affairs - Vinod Kumar Shukla

  • ஆந்திராவின் அமராவதியில் பொட்டி ஸ்ரீராமலுக்கு சிலை திறக்கப்பட்டுள்ளது.
  • இவர் ஆந்திர மாநிலம் உருவாக காரணமானவர்.
  • ஆந்திரா மாநிலம் உருவாவதற்காக 19.10.1952-ல் உண்ணாவிரதம் இருந்து 15.12.152-ல் காலமானர்.
  • இவர் 56 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.
  • 1.10.1953-ல் மொழிவாரியாக தோன்றிய முதல் மாநிலமாக ஆந்திர மாநிலம் உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • சங்கரலிங்கனார் மதராஸ் மாகாணத்தை தமிழகம் எனப்பெயர் மாற்றம் செய்யக்கோரி 27.07.1956 முதல் 13.10.1956 வரை 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார்.
  • மதராஸ் மாநில பெயர் மாற்றச் சட்டம் 14.01.1969-ல் தமிழ்நாடு என மாற்றப்பட்டது.

நுகர்வோர் சந்தை

  • உலக நுகர்வோர் சந்தை வரிசைப்பட்டியலில் இந்தியா 4வது இடம் பிடித்துள்ளது.
  • உலக நுகர்வோர் சந்தையில் இந்தியாவின் மதிப்பு 65லட்சம் கோடியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986
  • உலக நுகர்வோர் உரிமைகள் தினம் – மார்ச் 15
  • தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம் – டிசம்பர் 24

அந்தூரியம் பூக்கள்

  • மிசோரம் மாநிலத்திலிருந்து அந்தூரியம் பூக்கள் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

முகுந்திரா மலை புலிகள் சரணாலயம்

  • பூனை குடும்பத்தினைச் சேர்ந்த கேரக்கல் ராஜஸ்தானின் முகுந்திரா மலை புலிகள் சரணாலயத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
  • ராஜஸ்தானில் ரந்தப்பூர் புலிகள் சரணாலயம், ராமகர் புலிகள் சரணாலயம், சரிஸ்கா புலிகள் சரணாலயம் போன்ற சரணாலயங்கள் உள்ளன.

ஹரிஷ் பாண்டன்

  • ஒடிசா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஹரிஷ் பாண்டன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி – விதி 271

அனுஜ் குமார் சிங்

Vetri Study Center Current Affairs - Anuj Kumar Singh

  • UPSC-யின் இணைச்செயலாளராக அனுஜ் குமார் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • UPSC தலைவர் – பீரித்தி சுதன்
  • UPSC – விதி 315-323

மார்ச் ஆப் குளோரி

  • ஹாக்கி உலககோப்பை-1975 போட்டியில் வென்றதன் 50ஆம் ஆண்டு நினைவாகறுமுகம், ஏரோல் டி குரூஸ் ஆகியோர் மார்ச் ஆப் குளோரி என்ற நூலினை எழுதியுள்ளனர்.

கபடி உலககோப்பை 2025

  • இங்கிலாந்தில் நடைபெற்ற கபடி உலககோப்பை 2025-ல் சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் ஆண்கள், பெண்கள் அணி வென்றுள்ளன.

முக்கிய தினம் 

சர்வதேச பிறக்காத குழந்தைகள் தினம் (International Day of the Unborn Child) – மார்ச் 25

Related Links

Leave a Comment