Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 25th November 2023

Daily Current Affairs

Here we have updated 25th November 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

மதுசூதனன் ரெட்டி

Vetri Study Center Current Affairs - Madhusudhan Reddy

  • மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான சிறப்பு அதிகாரியாக மதுசூதன் ரெட்டி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • இத்திட்டமானது முதலமைச்சரின் முகவரி துறையின் கீழ் இயங்குகிறது.

புகார் எண்

Vetri Study Center Current Affairs - Complaint no

  • தமிழ்நாடு காவல்துறை சார்பில் போதைப்பொருள் மற்றும் மனமயக்க பொருள்களின் சட்ட விரோத விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்களை தெரிவிக்க கட்டணமில்லா உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கட்டணமில்லா உதவி எண்: 10581
  • வாட்ஸ் அப் எண்: 9498410581
  • மின்னஞ்சல் முகவரி: [email protected]

கிஷ்த்வார் குங்குமப்பூ (Kishtwar saffron)

Vetri Study Center Current Affairs - Kishtwar saffron

  • ஜம்மு & காஷ்மீரில் விளையும் கிஷ்த்வார் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு (GI Tag) வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள் 

  • புவிசார் குறியீடு பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
  • உத்திரபிரதேசம், கர்நாடகா அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
  • இந்தியாவின் “பொருள்கள் புவிசார் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 1999 கொண்டு வரப்பபட்டு 2003-ல் செப்டம்பர் 15-முதல் நடைமுறைக்கு வந்தது.
  • உலகில் முதன் முறையாக டார்ஜிலிங் தேயிலைக்கு புவிசார் குறியீடு (2004) வழங்கப்பட்டது

கருணை பட்டு

Vetri Study Center Current Affairs - Karunai Pattu

  • பட்டு புழுக்களை கொல்லாமல் பட்டு ஆடைகளை உருவாக்கும் கருணா பட்டு என்ற முறையானது ஒடிசாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • பட்டுப்பூச்சிகளானது வெளியேறிய பிறகு கிடைக்கும் பட்டு இழைகளை பயன்படுத்தி கருணா பட்டு தயாரிக்கப்படுகிறது.
  • எரி என்னும் பட்டுப்புழுக்களிலிருந்து இப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்திய நீர் தாக்க உச்சி மாநாடு (India Water Impact Summit)

Vetri Study Center Current Affairs - India Water Impact Summit

  • புதுதில்லியில் 8வது இந்திய நீர் தாக்க உச்சி மாநாடானது நடைபெறுகிறது.
  • இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி துவங்கி வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • 2024 ஜனவரி 19-21 வரை சென்னையில் பன்னாட்டு மருத்துவ சர்வதேச மாநாடானது நடைபெற உள்ளது.
  • குஜராத்தின் அகமதாபத்தில் உலக மீன்பிடி மாநாடு 2023 (World Fisheries Conference) நடைபெற உள்ளது.
  • இந்திய கடற்படையால் கோவா கடல் சார் மாநாட்டின் நான்காவது பதிப்பானது நடத்தப்பட்டுள்ளது.

சூர்ய கிரண்

Vetri Study Center Current Affairs - Surya Kiran

  • இந்தியா-வங்கதேசம் இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியானது சூர்ய கிரண் (Surya Kiran) என்ற பெயரில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியா-பங்களாதேஷ் இடையேயான கூட்டு கடற்படை பயிற்சியானது போங்கோசாகர் என்ற பெயரில் நடைபெற்றது.

இராணுவப் பயிற்சி

Vetri Study Center Current Affairs - AUSTRAHIND-23

  • இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2வது கூட்டு இராணுவப் பயிற்சியானது AUSTRAHIND-23 என்ற பெயரில் நடைபெற்றது.
  • முதல் பயிற்சியானது ராஜஸ்தான் நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியா-அமெரிக்கா இடையேயான கூட்டு பயிற்சியானது வஜ்ர பிரஹார் என்ற பெயரில் நடைபெற்றது.
  • இந்தியா-பிரான்ஸ் இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியானது சக்தி (Shakkti) என்ற பெயரில் நடைபெற்றது.

முப்பரிமாண கோயில் (3D)

Vetri Study Center Current Affairs - 3D Temple

  • உலகின் முதல் முப்பரிமாண அச்சிடல் முறையில் அமைக்கப்பட்ட கோவிலானது தெலுங்கானாவில் அமைக்கப்பட்டுள்ளது.
  • சித்திக்பேட் மாவட்டத்தின், புருகுப்பள்ளியில் அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • பெங்களூரு, அல்சூரின் இந்தியாவின் முதல் 3டி பொதுத்துறை நிறுவன கட்டமான கேம்ப்ரிட்ஜ் தபால் நிலையம் நிறுவப்பட்டுள்ளது.

பிரமோஸ் ஏவுகணை

Vetri Study Center Current Affairs - Brahmos missile

  • INS இம்பால் போர்க்கப்பலில் இருந்து பிரமோஸ் ஏவுகணையை செலுத்தி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

தொந்தரவு செய்யாதீர் செயலி

Vetri Study Center Current Affairs - Do Not Disturb App

  • கைப்பேசிகளில் ஸ்பேம் மோசடி அழைப்புகளை தடுக்க தொந்தரவு செய்யாதீர் (Do Not Disturb App) என்ற செயலியானது அறிமுகம் செய்யப்பட உள்ளது.
  • இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்  எனப்படும் டிராய் இதனை அறிமுகம் செய்ய உள்ளது.

உலக இந்து மாநாடு

Vetri Study Center Current Affairs - World Hindu Conference

  • தாய்லாந்தின் பாங்காக்கில் 3வது உலக இந்து மாநாடானது நடைபெற உள்ளது.
  • கருப்பொருள்: தர்மம் வெற்றியின் உறைவிடம்

சீனா

  • சீனாவில் H9N2 என்ற வைரஸ் பரவி வருகிறது.

ஐ.நா. பருவநிலை மாநாடு

Vetri Study Center Current Affairs - UN Climate Conference

  • நவம்பர் 30-டிசம்பர் 12 வரை ஐக்கிய அரபு அமீரகம், துபையில் 28வது ஐ.நா. பருவநிலை மாநாடானது நடைபெற உள்ளது.
  • இம்மாநாட்டின்போது டிசம்பர் 1-ல் உலக பருவநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

ஐஎஸ்எஸ்எஃப் உலக கோப்பை ஃபைனல் துப்பாக்கி சுடுதல் போட்டி – கத்தார்

Vetri Study Center Current Affairs - Anish Bhanwala

  • 25மீ ரேப்பிட் ஃபயர் பிஸ்டல் பிரிவு அனீஷ் பன்வாலா (Anish Bhanwala) வெண்கலம் வென்றுள்ளார்.
  • இப்போட்டியில் இப்பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஆவார்

இமாத் வாசிம் ஒய்வு

Vetri Study Center Current Affairs - Imad Wasim

  • பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் இமாத் வாசிம் ஒய்வு அறிவித்தார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் (International Day for the Elimination of Violence against women) – Nov 25

Vetri Study Center Current Affairs - International Day for the Elimination of Violence against women

November 22 Current Affairs | November 23-24 Current Affairs

Related Links

Leave a Comment