Daily Current Affairs
Here we have updated 25th October 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
சிலை திறப்பு
- சென்னையில் மருதுசகோதர்கள் சிலையை (Maruthu Brothers Statue) தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ளார்.
- அக்டோபர் 24 நினைவு தினத்தினை முன்னிட்டு மருதுசகோதர்கள் சிலையானது திறக்கப்பட்டது.
- 1801 திருச்சிராப்பள்ளி பிரகனடத்தை வெளியிட்டனர்
- அக்டோபர் 24-ல் 1801 திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலிடப்பட்டனர்.
உமறுப்புலவர்
- தமிழறிஞர் உமறுப்புலவரின் (Umaru Pulavar) 381-ஆவது பிறந்தாள் விழாவானது எட்டயபுரத்தில் கொண்டாடப்பட்டது.
- இவர் சீறாப்புராணம், முதுமொழி மாலை, சீத்க்காதி திருமண வாழ்த்து, சீதக்காதி கோவை உள்ளிட்ட நூலினை எழுதியுள்ளார்.
பாதுகாப்பன நகரங்கள் பட்டியல்
- சென்னை நகரமானது பாதுகாப்பு நகரங்கள் பட்டியிலில் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.
- உலகளவில் 127வது இடத்தினை பிடித்துள்ளது.
- செர்பியாவின் நம்பியோ தனியார் நிறுவனம் இப்பட்டியலை வெளியிட்டுள்ளது.
குஜராத் – காந்திநகர்
- இந்தியாவின் முதல் திரவ நானோ DAP ஆலையானது குஜராத் மாநிலம் காந்திநகரில் திறக்கபட்டுள்ளது.
- DAP – Di Ammonium Phosphate
பியூஸ் கோயல்
- 2024 பிப்ரவரி 26-29 வரை உலகளவில் மிகப்பெரிய டெக்ஸ் 2024 எக்ஸ்போ (TEX 2024 Expo) டெல்லியில் நடைபெற உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
வி.கே. பாண்டியன்
- ஐ.ஏ.எஸ் பணியில் விருப்ப ஓய்வு பெற்ற வி.கே.பாண்டியன் நம்ம ஒடிசா, புதிய ஒடிசா திட்டத் தலைவராக (கேபினட் அமைச்சருக்கு இணையானது) நியமனம் செய்யப்பட்டுள்ளார்
- இவர் ஒடிசாவின் முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச்செயலராக 12 ஆண்டுகள் இருந்துள்ளார்.
உத்திரகாண்ட்
- பெண்குழந்தைகளுக்கான நந்த கெளரா யோஜனா போர்டல் (Nanda Gora Yojana Portal)-ஐ உத்திரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தொடங்கி வைத்துள்ளார்.
இலங்கை
- இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, இந்தோனோசியா உள்ளிட்ட நாட்டவர்க்கு இலங்கை வருவதற்கு விசா(VISA) தேவையில்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உலகச் சாதனை
- உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக முறை 350 ரன்களுக்கு மேல் அடித்து சாதனை படைத்துள்ளது.
- தென்னாப்பிரிக்கா அணியானது 8வது முறையாக 350 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது.
- ஆஸ்திரேலிய அணியானது 7 முறை 350 மேல் அடித்ததே சாதனையாக இருந்து வந்தது
ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டி
- வட்டு எறிதலில் முத்துராஜா (தமிழகம்) வெண்கலம் வென்றுள்ளார்.
- ஈட்டி எறிதலில் சுமித் அண்டில் தங்கம் வென்றுள்ளார்.
- படகு வலித்தல் போட்டியில் பிராச்சி யாதவ் தங்கம் வென்றுள்ளார்.
- பெண்கள் பிரிவு 400மீ ஓட்டத்தில் தீப்தி ஜீவன்ஜி தங்கம் வென்றுள்ளார்.
- ஆண்களுக்கான வட்டு எறிதலில் நீரஜ் யாதவ் தங்கம் வென்றுள்ளார்.
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன் ஷிப் போட்டி – தென்கொரியா
- ஆடவர் 10மீ ஏர் பிஸ்டர் பிரிவில் சரப்ஜோத் சிங் (Sarabjot Singh)வெண்கலம் வென்றுள்ளார்.
- 2024-ல் பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி அடைந்துள்ளார்.