Daily Current Affairs
Here we have updated 26th March 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழகச் செய்தி
- நம்ம ஊரு பள்ளித்திட்டதில் அரசுப் பணியார்கள் பங்களிப்பு செலுத்தி அரசு பள்ளிகளை மேம்படுத்த முன்வரவேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலர் வெ. இறையன்பு தெரிவித்துள்ளர்.
- நம்ம ஊரு பள்ளித்திட்டம் – 19.12.2022
- திறன் வாய்ந்த தொழில்நுட்ப மனித வளங்களை உருவாக்குவதற்கென முதல்வர் மு.க.ஸ்டாலின் “நான்முதல்வன்” என்ற சிறப்பு திட்டத்தை தொடங்கியுள்ளார் என உதயநிதி ஸ்டாலின் (இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்) தெரிவித்துள்ளார்.
- “நான்முதல்வன்” – 01.03.2022
- மார்ச் 24-25-ல் ஜி-20 கூட்டமைப்பின் “2வது நிதி கட்டமைப்பு பணிக்குழு கூட்டம்” சென்னை கிண்டியில் நடைபெற்றது.
- தமிழ்நாட்டின் ஊட்டி வர்க்கி, மணப்பாறை முறுக்கு, மானாமதுரை கடம், மயிலாடி கற்சிற்பங்கள் ஆகியவற்றிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
தேசிய செய்தி
- இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அதிக எடையைத் தாங்கிச் செல்லும் திறன் கொண்ட எல்விஎம்-3 ராக்கெட்டை 36 செயற்கைகோள்களுடன் இன்று (மார்ச் 26) விண்ணில் ஏவ உள்ளது.
- ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.
- இஸ்ரோவின் வணிகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்திய நிறுவனம் பிரிட்டனின் “ஒன்வெப்” குழுமம் நிறுவனமான நெட்வொர்க் அக்சஸ் அசோசியேட் நிறுவனத்துடன் விண்ணில் வட்டப் பாதையில் 72 செயற்கைக் கோள்களை செலுத்துவதற்கான வணீக ரீதியிலான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
- கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி எல்விஎம்3-எம்2 ராக்கெட் மூலமாக 36 செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது.
- மார்ச் 25-ல் மக்கள் பிரநிதித்துவச் சட்டம் பிரிவு 8(3)-ன் கீழ் 2ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத் தண்டனை பெறும் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தானாக தகுதி நீக்கம் செய்யப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
- மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (1951)
- மார்ச் 25-ல் சிஆர்பிஎஃப்-இன் “84வது நிறுவன தின விழா” சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டம், ஜக்தல்பூரில் நடைபெற்றது
- “அக்னிபத்” திட்டத்தின் கீழ் கடற்படையில் தேர்வு செய்யப்பட்ட அக்னி வீரர்களில் முதல் குழுவின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு மார்ச் 28-ம் தேதி ஐஎன்எஸ் சிலிகாவில் நடைபெற உள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
- அக்னிபத் திடடம் – 14.06.2022
- நாட்டில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், அதைத் தடுப்பதற்கான தயார்நிலை குறித்த ஒத்திகை ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளி்ல் நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படவுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- மகாராஷ்டிரா மாநிலத்தில் “பசு நலவாழ்வு ஆணையம்” அமைக்க மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
உலகச் செய்தி
- மார்ச் 25-ல் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டி (52) அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்றுள்ளார்.
- வடகொரியாவால் கதிர்வீச்சு சுனாமியை ஏற்படுத்தும் ஆளில்லா நீர்மூழ்கிப் படகை சோதனை செய்துள்ளது.
விளையாட்டுச் செய்தி
- தில்லியில் நடைபெற்ற மகளிர் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நீது கங்காஸ், சவீதி போரா ஆகியோர் முறையே தங்களது எடைப்பிரிவல் உலக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றில் இடம் பெற்றுள்ளன.
- இந்தியாவுக்காக உலக சாம்பியன்ஷிப்பில் தங்க வென்றவர்கள் பட்டியலில் மேரிகோம் (2022, 2018, 2010, 2008, 2006, 2005) சரிதா தேவி (2006), ஜெனி ஆர்.எல். (2006), லேகா கே.சி (2006), நிகாத்ஜரீன் (2022) ஆகியோருடன் நீது, சவீதியும் இணைந்துள்ளனர்.
- நீது கங்காஸ் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
- மத்திய பிரதேசத்தில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் மானு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார்.