Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 26th November 2022

Daily Current Affairs

Here we have updated 26th November 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

 • நாட்டிலேயே முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில்  மின் வாகனம் மின்னேற்றும் நிலையம் தொடங்கப்பட்டு உள்ளது.
  • இந்திய விமான நிலைய ஆணையம், சென்னை விமான நிலையம், இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் ஆகியவை இணைந்து தொடங்கியுள்ளது.
  • இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட முதல் சில்லறை விற்பனை நிலையம் ஆகும்.
 • உலக வங்கி நிதியுடன் ரூ.1,763கோடியே 19லட்சம் செலவில் “மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டத்தினை” தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
 • பரேஷ் உபாத்யாய் சென்னை ஐகோர்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.
  • சென்னை ஐகோர்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த டி.ராஜா, வேலுமணி உள்ளிட்ட 7 நீதிபதிகள் ராஜஸ்தானுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
 • கி.பி.16-ம் நூற்றாண்டினைச் சேர்ந்த 4 அடி உயரமும், 2 அடி அகலமும் உடை நடுகல்சிற்பம் மதுரை மாவட்டத்தின் டி.கல்லுப்பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 • 9 மற்றும் 10-ம் நூற்றாண்டினைச் சேர்ந்த  மாதேஸ்வரி கற்சிற்பம் திருக்கோவிலூர் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 • 2022ம் ஆண்டிற்கான “குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார் விருது” தமிழகத்தினை சேர்ந்த இமையம் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இவ்விருதினை பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர்.
  • செல்லாத பணம்” நாவலுக்காக “சாகித்திய அகாதெமி விருது” பெற்றவர்

தேசிய செய்தி

 • ஓமன் கடற்கரையில் இந்தியா கடற்படை & ஓமன் ராயல் கடற்படை இரு தரப்பலான 13வது “நசீம் அல் பஹ்ர்” (Sea Breeze) கடற்படை பயிற்சி நடைபெற்றுள்ளது.
  • இப்பயிற்சி 6 நாட்கள் நடைபெறுகிறது.
  • இந்தியாவின் வழிகாட்டப்பட்ட ஏவுகணை ஸ்டெல்த் போர்க்கப்பல், INS தரிகண்ட், கடல் ரோந்து கப்பல், INI சுமித்ரா மற்றும் கடல் சார் ரோந்து விமானம் போர்னியர் ஆகியவை பங்கேற்றுள்ளன.
  • இப்பயிற்சி 1993-ல் தொடங்கப்பட்டது.
 • நவம்பர் 1-முதல் பெங்களூருவில் மெட்ரோ ரயிலில் “கியூ.ஆர் கோடு” மூலம் டிக்கெட் பெறும் வசதியை மெட்ரோ நிர்வாகம் அமல்படுத்துகிறது.
  • மேலும் ஒரே டிக்கெட்டில் 6பேர் பயணம் செய்யும் டிக்கெட் வசதியினை பெங்களூர் மெட்ரோ ரயில்களில் மெட்ரோ நிர்வாகம் அறிமுகம் செய்ய உள்ளது.
  • இந்திட்டம் ஜனவரி 15-2023 முதல் அமலுக்கு வருகிறது.
 • டிஜிட்டல் இந்தியா ஸ்டார்ட்அப் மையத்தை கர்நாடாகா-தாவணகெரேல் உள்ள இந்திய மென்பொருள் தொழில் நுட்ப பூங்கா மையத்தில் மத்திய அமைச்சர் ஸ்ரீராஜீவ் சந்திரசேகர் திறந்து வைத்தார்.
  • இது நாட்டின் 63 SDBI மையம்
  • கர்நாடாகாவின் 5வது மையம்
 • நவம்பர் 24ல் ICHR துறையால் தயாரிக்கப்பட்ட “இந்தியா : ஜனநாயகத்தின் தாய்” என்ற புத்தகத்தினை மத்திய அமைச்சர் ஸ்ரீ தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ளார்.
  • ICHR – இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில்
 • கர்நாடகா மாநிலத்தில் “கடலெக்காய் பரிஷே” என்ற நிலக்கடலை விசாயிகள் திருவிழா கொண்டாடப்படுகிறது.

உலகச் செய்தி

 • அமெரிக்காவின் மார்னிங் கன்சல்ட் குளோபல் லீரட் வெளியிட்டுள்ள ஒப்புதல் மதிப்பீடுகளின் அறிக்கையான “உலகின் மிகவும் பிரபலமான தலைவர்களின் பட்டியலில்” பிரதம அமைச்சர் நரேந்திர மோடி  உலகின் மிகவும் பிரபலமான தலைவராக முன்னிலை பிடித்துள்ளார்.
  • 2வது இடம் – ஆண்ட்ரேஸ் மானுவல் லேபார் ஒப்ராடோர் (மெக்சிக்கோ அதிபர்)
  • 3வது இடம் – அந்தோணி அல்பானீஸ் (ஆஸ்திரேலிய பிரதமர்)
  • 9வது இடம் – ரிஷி சுன்க் (இங்கிலாந்து பிரதமர்)
  • 22வது இடம் – ஜோபைடன் (அமெரிக்க அதிபர்)
 • உலகிலன் முதல் ஒட்டுநர் இல்லா தானியங்கி பேருந்தினை தென் கொரியா அறிமுகப்படுத்தியுள்ளது.
 • வினாடிக்கு 1.5 லட்சம் லாபம் ஈட்டுவதன் மூலம் உலகளவில் லாபம் ஈட்டும் நிறுவனங்களின் பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.
  • 2வது இடம் – மைக்ரோசாப் நிறுவம் (1.4லட்சம்)
  • 3வது இடம் – Berkshire Hateway
  • 4வது இடம் – ஆல்ஃபபெட் (கூகுள் தாய் நிறுவனம்)

விளையாட்டு செய்தி

 • 5 ஆண்டுகளில் நடைபெற்ற வெவ்வேறு கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்) கோல் அடித்து சாதனை படைத்துள்ளா்
  • பிஃபா உலககோப்பை கால்பந்து போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ எட்டு கோல்கள் அடித்து மெஸ்ஸி (7) சாதனையை முறியடித்துள்ளார்.

முக்கிய தினம்

 • தேசிய பால் தினம் 
  • இந்தியாவின் பால் மனிதன் என அழைக்கப்படும் “இந்தியாவின் வெண்மை புரட்சியின் தந்தை” டாக்டர் வர்கீஸ் பிறந்த நாளை முன்னிட்டு கொண்டாடப்படுகிறது.

Nov 20-21 Current Affairs | Nov 22 – Current Affairs

 

Leave a Comment