Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 26 & 27th February 2023

  • பிப்ரவரி 27-ல் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
    • இதுவரை 796 தேர்தல் விதி மீறல்கள் நடைபெற்றுள்ளன என தெரிவிக்கப்பட்டள்ளது.
    • தேர்தல் நடத்தை விதிகள் கடைபிடிக்க தவறினால் புகார் அளிக்க இந்திய தேர்தல் ஆணையம் “cVIGIL” என்ற கைபேசி செயலியை அறிமுகம் செய்துள்ளது.
  • “கரோனா காலக்கட்டத்தில் நாடு முழுவதும் காணொலி விசாரிக்கப்பட்ட 64 லட்சம் வழக்குகளில் 40 லட்சம் வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்துள்ளது-தாக சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா தெரிவித்துள்ளார்.
    • மாவட்ட நிதிபதிகளுக்கு பயற்சி அளிப்பதில் தமிழ்நாடு மாநில நீதித்துறை பயிலகம் உலகத்திற்கு முன்மாதியாக திகழ்கிறது என தெரிவித்துள்ளார்.
  • பல்கலைக்கழகம், கல்லூரி மாணவர் சேர்க்கையின் போது வாய் பேசாதவர், தொழுநோயால் பாதிக்கப்பட்வர், காது கேளாதவர் என்று சொற்களை பயன்படுத்தாமல்மாற்றத்திறனாளிகள்” என்று மட்டுமே குறிப்பிட வேண்டும் என பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
    • தனிப்பட்ட குறைகளை சுட்டிக்காட்டி அதன் மூம் நவீன தீண்டாமையை கடைபிடிப்பதை தடுக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
  • மார்ச் 6-ல் நடைபெற உள்ள “தோள்சீலை பேராட்ட 200-வது ஆண்டு விழா” நடைபெற உள்ளது. இவ்விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர பினராயி விஜயன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
    • ஏற்றத்தாழ்வு மற்றும் அடக்குமுறைக்கு எதிராக சமூக நிதி பேராட்டம் 1822 முதல், திருவாங்கூர் சமஸ்தானத்தில் தொடங்கியது.
  • பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிக்கு கல்லூரி மாணவி மிஸ்கான் ரகுவன்சி மேற்கொண்ட சைக்கிள் பயணம் பிப்ரவரி 26-ல் முடிவடைந்துள்ளது.
    • மத்திய பிரதேச மாநிலம் அசோக் நகரை சார்ந்தவர்.
    • ஒரே பாரதம் உண்மையா பாரதம், பெண்கள் உரிமை, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி பயணம் மேற்கொண்டார்.
    • பிப்ரவரி 1-ல் பயணத்தை தொடஙகி 3,600 கி.மீ. பயணம் மேற்கொண்டுள்ளார்
  • வேலூர் மாவட்டத்தில் விளையும் முள்ளு கத்தரிக்காய் புவிசார் குறியீட்டுக்கு தேர்வு.
    • மேலும் ராதாபுரம் முண்டு மிளகாய் புவிசார் குறியீட்டுக்கு தேர்வு.
  • புவிசார் குறியீட்டுத் தேர்வில்
    • முதலிடம்  – கர்நாடகா (46 பொருட்கள்)
    • 2ம் இடம் – தமிழகம் (45 பொருட்கள்)
    • 3ம் இடம் – கேரளா (36 பொருட்கள்)
  • இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
    • மத்திய புதுப்பிக்கத்தக்க மின்துறை 31.01.2023 நிலவரப்படி நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சூரியசக்தி, காற்றாலை மின் நிலையங்களின் உற்பத்தி திறன் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
  • காற்றாலை உற்பத்தியில்
    • முதலிடம்  – தமிழகம் (9,964 மெகாவாட்)
    • 2ம் இடம் – குஜராத் (5,269 மெகா வாட்)
    • 3ம் இடம் – கர்நாடகம் (5,012 மெகா வாட்)
  • சூரிய மின்சக்தியில் தமிழகம் 4வது இடம் பிடித்துள்ளது
    • நிகழாண்டில் ஜனவரி நிலவரப்படி தமிழகத்தில் 6,123 மெகாவாட் நிலத்திலும், கட்டங்களின் மேல் 373.73 மெகா வாட் சூரிய மின் சக்தி உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படுள்ளது.

தேசிய செய்தி

  • “கம்பேர் தி மார்க்கெட்” என்ற இன்சூரன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள உலகின் மோசமான ஓட்டுநர்கள் பட்டியலில் இந்தியாவிற்கு 4வது இடம் கிடைத்துள்ளது.
    • முதலிடம் – தாய்லாந்து
    • 2-ம் இடம் – பெரு
    • 3-ம் இடம் – லெபனான்
    • உலகின் சிறந்த ஓட்டுநர்கள் பட்டியிலில் ஜப்பான், தெதர்லாந்து, நார்வே முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
  • “உலகிலேயே சிறந்ததாக இந்திய நீதித்துறை விளங்குகிறது” என தேசிய நீதித்துறை அகாடமி இயக்குநரும், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான ஏ.பி.சாஹி தெரிவித்துள்ளார்.
    • 2016-22-ம் ஆண்டு வரையிலான கொரனா காலக்கட்டத்தில் 10 கோடி வழக்குகளில் 9 கோடி வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
  • வேகமாக முன்னேறி வரும் இந்தியாவில் எண்மப் புரட்சியின் சக்தி, எங்கெங்கிலும் பிரதிபலிக்கிறது என்ற பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    • இ-சஞ்சவீனி செயலி மூலம் 10 கோடிக்கும் அதிகமானோர் பலன் அடைந்துள்ளனர்.
  • கர்நாடாக மாநிலம் சிவமெக்காவி்ல் புதிதாக அமைக்கபட்டுள்ள விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைத்தார்.
  • பிர்வரி 27-ல் மேகாலயம், நாகாலந்தில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.
  • ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள பணக்காரர்கள் பட்டியயில் 3ஆம் இடத்தில் இருந்து 30-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
  • தேசிய அளவில் மாணவர்களின் கற்றல் குறித்த ஆய்வு, பள்ளிகள் அடிப்படையிலான மதீப்பீடு, திறன் மேம்பாடு பணிகளை மேற்கொள்ளும் “பரக் ” என்ற தர நிர்ணய அமைப்பை உருவாக்கும் பணிக்கு இடிஎஸ் அமைப்பை தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் தேர்வு செய்துள்ளது.
    • இடிஎஸ் அமைப்பு அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டது

விளையாட்டுச் செய்தி

  • உலககோப்பை டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
    • 2வது முறையாக “ஹாட்ரிக்” கோப்பையை கைப்பற்றியது.

முக்கிய தினம்

  • உலக தன்னாவ தொண்டு நிறுவன தினம் (பிப் 27)

Leave a Comment