Daily Current Affairs
Here we have updated 26th December 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
நந்தம்பாக்கம் – சென்னை
- தமிழகத்தில் முதலீடுகளை ஈரக்கும் வகையில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறவிருக்கிறது.
- இம்மாநாடானது வரும் ஜனவரி 7 முதல் 8 வரை நடைபெறுகிறது.
தமிழகம் – உள்நாட்டு உற்பத்தி
- தமிழகத்தின் உள்நாட்டு உற்பத்தியானது ரூ.28 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
- தற்போது தமிழகம் உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளது.
- தமிழகம் தொழில்துறையில் முதலிடத்தினை பிடித்துள்ளது.
- நாட்டில் அதிக தொழிற்சாலைகளை (37,220) கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
- உள்நாட்டு உற்பத்தியில் 1வது இடம் – மகாராஷ்டிரா, 2வது இடம் – குஜராத் வகிக்கின்றன.
கடன் ஒப்புதல்
- தமிழ்நாடு தட்பவெப்பநிலை தாங்கக்கூடிய நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழகத்தின் நகர்ப்புற நீர் மற்றும் கழிவு நீர் அமைப்புகள் மேம்படுத்தபட உள்ளது.
- இதற்கா உலக வங்கி தமிழகத்திற்கு 300 மில்லியன் டாலர் கடன் வழங்க உள்ளது.
- 1944-ல் உலக வங்கியானது வாஷிங்டனை (அமெரிக்கா) தலைமையகமாக கொண்டு உருவாக்கப்பட்டது.
குற்றவியல் மசோதா
- இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898, இந்திய சாட்சிய சட்டம் 1872 ஆகியவற்றிற்கு பதிலாக கொண்டு வரப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாட்சிய அதினியம் போன்ற குற்றவியல் மசோதக்களுக்கு குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
அதுல் ஷா
- ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அதுல் ஷா-விற்கு Reach மாற்றத்தினை ஏற்படுத்தும் புதுமையாளர் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
- இவ்விருதானது துபாயில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாட்டில் தொழுநோய் சிகிச்சைக்கான சிறப்பான பங்களிப்பிற்காக வழங்கப்பட்து.
புலிகள் இறப்பு
- இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளை விட அதிமாக இந்த ஆண்டு 202 புலிகள் இறந்துள்ளதாக இந்திய வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சகம் அமைப்பு தெரிவித்துள்ளது.
- மகாராஷ்டிரா – 52, மத்தியப்பிரதேசம் – 47, உத்தரகாண்ட் – 25, தமிழ்நாடு – 15 என்ற எண்ணிக்கையில் புலிகள் இறந்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
- ஜூலை 29 – சர்வதேச புலிகள் தினம்
- தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA – National Tiger Conservation Authority) – 1972புலி
- தேசிய விலங்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு – 1972
- இந்தியாவில் புலிகள் காப்பக எண்ணிக்கை – 54
டாடா குழும விமானம்
- ஏர்பஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட டாடா குழுமத்தின் முதல் ஏ350-900 விமானமானது பிரான்சிலிருந்து தில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தினை வந்துள்ளது.
நிலவின் சுற்றுவட்டப்பாதை
- ஜப்பானின் ஸ்லிம் விண்கலமானது நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
- நிலவின் மேற்பரப்பினை ஆய்வு செய்ய இந்த விண்கலமானது நிலவின் மேற்பரப்பில் 100மீ பரப்புக்குள் துல்லியமாக தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- எனவே நிலவின் ஸ்னைப்பர் (தொலைவிலிருந்து துல்லியமாக சுடும் வீரர்) எனவும் அழைக்கப்படுகிறது.
- இந்த விண்கலம் நிலவில் தரையிறஙகினால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா நாடுகளுக்கு பிறகு நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய 5வது நாடு என்ற பெருமையை பெற உள்ளது.
இத்தாலி – முதலிடம்
- சிறந்த உணவு வகைகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் இத்தாலி முதலிடத்தை பிடித்துள்ளது.
- இரண்டாம், மூன்றாம் இடங்களை முறையே இந்தியா, சீனா வகிக்கின்றன.
சுனாமி நினைவு தினம் – Dec 26
- 2004 டிசம்பர் 26-ல் ஏற்பட்ட சுனாமியில் இறந்தவர்களின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.
வீர் பால் திவாஸ் (Veer Baal Diwas) – Dec 26
December 23 Current Affairs | December 24-25 Current Affairs