Daily Current Affairs
Here we have updated 26th December 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
இன்னுயிர் காப்போம்
- இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கட்டணமில்லா சிகிச்சை தொகை 1 லட்சத்திலிருந்து 2 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 – 2021
அகழாய்வு
- வெம்பக்கோட்டை (விருதுநகர்)-யில் நடைபெற்று வரும் 3ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது
- இங்கு பழங்காலத்து சோதனை பீங்கானால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
அகழாய்வு இடம் | மாவட்டங்கள் |
பூதிநத்தம் | தருமபுரி |
பொற்பனைக்கோட்டை | புதுக்கோட்டை |
கீழ்நமண்டி | திருவண்ணாமலை |
வடக்குப்பட்டு | காஞ்சிபுரம் |
துலுக்கர்பட்டி | திருநெல்வேலி |
வெம்பக்கோட்டை | விருதுநகர் |
பட்டறைப்பெரும்புதூர் | திருவள்ளூர் |
மாளிகைமேடு (கங்கை கொண்ட சோழபுரம்) | அரியலூர் மாவட்டம் |
கொந்தகை | சிவகங்கை |
கீழடி | சிவகங்கை |
விஜயகரிசல்குளம் (சாத்தூர்) | விருதுநகர் |
ஆதிச்சநல்லூர் | தூத்துக்குடி |
சிவகளை | தூத்துக்குடி |
திருக்கோளூர் | தூத்துக்குடி |
அரிக்கமேடு | புதுச்சேரி |
கொடுமணல் | ஈரோடு |
அகழாய்வுகள்
அகழாய்வு | இடம் | மாவட்டங்கள் |
முதற்கட்ட அகழாய்வுகள் | பூதிநத்தம் | தருமபுரி |
முதற்கட்ட அகழாய்வுகள் | பொற்பனைக்கோட்டை | புதுக்கோட்டை |
முதற்கட்ட அகழாய்வுகள் | கீழ்நமண்டி | திருவண்ணாமலை |
2-ஆம் கட்ட அகழாய்வு | வடக்குப்பட்டு | காஞ்சிபுரம் |
2ம் கட்ட அகழாய்வு | துலுக்கர்பட்டி | திருநெல்வேலி |
2ம் கட்ட அகழாய்வு | வெம்பக்கோட்டை | விருதுநகர் |
3-ம் கட்ட அகழாய்வு | பட்டறைப்பெரும்புதூர் | திருவள்ளூர் |
3-ம் கட்ட அகழாய்வு | மாளிகைமேடு (கங்கை கொண்ட சோழபுரம்) | அரியலூர் மாவட்டம் |
4-வது கட்ட அகழாய்வு பணி | கொந்தகை | சிவகங்கை |
9-ஆம் கட்ட அகழாய்வு | கீழடி | சிவகங்கை |
பார்க்கர் விண்கலம்
- வெள்ளி கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையை பயன்படுத்தி சூரியனை சுற்றி ஆய்வு செய்யும் பார்க்கர் விண்கலம் சூரியனுக்கு மிக நெருக்கததில் கடக்க உள்ளது.
- பார்க்கர் விண்கலத்தை அமெரிக்கா கடந்த 2018-ல் விண்ணில் செலுத்தப்பட்டது.
உத்தம்சிங் பிறந்த தினம்
- ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக பழிதீர்த்த உத்தம்சிங் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
- ஜாலியன் வாலாபாக் படுகொலையை நிகழ்த்திய ஜெனரல் டயரை இவர் 1940-ல் சுட்டுக்கொண்டார்.
- ஜாலியன் வாலாபாக் படுகொலை – 13 ஏப்ரல் 1919
நதிநீர் இணைப்பு
- கென் மற்றும் பெட்வா நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு காஜீராகோ என்னும் இடத்தில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.
- கென், பெட்வா – யமுனை நதியின் துணை ஆறுகள்
- கென் நதி மத்தியபிரேசத்தில் பாய்கிறது.
- பெட்வா நதி உத்திரப்பிரதேசத்தில் பாய்கிறது.
- மேலும் மத்தியபிரதேசத்தில் தெளதான் என்னும் அணையும் கட்டப்பட உள்ளது.
ஷியாம் பெனகல்
- சமீபத்தில் திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் காலமானார்
இவர் பெற்றுள்ள விருதுகள்
- 1976 – பத்மஸ்ரீ
- 1991- பத்மபூஷன்
- தாதாசாகேப் பால்கே – 2005
- ANR தேசிய விருது – 2013
ஹீஸ்டன் பல்கலைக்கழகம்
- அமெரிக்காவின் ஹீஸ்டன் பல்கலைக்கழகம் தமிழ் ஆய்வுகள் இருக்கைக்கு தமிழக அரசு ரூ.1.5 கோடி வழங்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- டாக்கா பல்கலைக்கழகம் – தாகூர் இருக்கை
CAR-T செல் சிகிச்சை மையம்
- மும்பை ஐஐடியும், டாடா நினைவு மருத்துவமனையும் இணைந்து இந்தியாவின் முதல் CAR-T செல் சிகிச்சை மையத்தை மும்பையில் அமைத்துள்ளது.
வெண்தலைக்கழுகு
- அமெரிக்காவின் தேசிய சின்னமாக வெண்தலைக்கழுகு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்
- பெங்களூரில் நடைபெற்ற தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுள்ளது.
சாம்பியன் பட்டம் வென்றவர்கள்
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு – ரகு
- பெண்கள் ஒற்றையர் பிரிவு – தேவிகா
முக்கிய தினம்
வீர குழந்தைகள் தினம் (Veer Bal Diwas) – டிசம்பர் 26
சுனாமி தினம் (Tsunami Day) – டிசம்பர் 26
- சுனாமி – 26.12.2004
CA 👏👌🔥💯