Daily Current Affairs
Here we have updated 26th November 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி
- எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த பள்ளி அளவில் மாணவர் குழுக்களை அமைக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
- எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி – 01.09.2023
ஸ்டார்ட் அப் தமிழா
- தொழில் முனைவோரை ஊக்குவிக்க, தொழில்முனைவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஸ்டார் அப் தமிழா தொலைக்காட்சி நிகழ்ச்சியை தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்துள்ளார்.
- மேலும் www.starupthamizha.tv இணையதளத்தினை துவங்கி வைத்துள்ளார்.
புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி
- இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் தமிழகம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
- 2023 அக்டோபர் மாத நிலவரப்படி தமிழகத்தின் சூரிய சக்தி மின் உற்பத்தி திறனானது 7,146.59 மெகா வாட் ஆகும்
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- குஜராத் மாநிலமானது முதலிடத்தை பிடித்துள்ளது.
கட்டணமில்லா உதவி எண்
- வெளிநாடு வாழ் தமிழர்களை தொடர்பு கொள்ள கட்டணமில்லா உதவி எண்ணாக 9600023645 அறிவிக்கப்பட்டுள்ளது.
சொற்குவை
- தமிழக அரசின் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சொற்குவை தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட சொற்களின் எண்ணிக்கை 14 லட்சத்தை கடந்துள்ளது.
- அச்சொற்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் 3 லட்சத்தினை கடந்துள்ளது.
ஜோஹா அரிசி ரகம் (Joha Rice)
- அதிக மகசூல் தரும் உயர்தர நறுமண அரிசி ரகமான ஜோஹா அரிசியை உருவாக்கும் பணியில் அஸ்ஸாம் ஆராய்ச்சி நிறுவனம் (ARRI) ஈடுபட்டுள்ளது.
- 1923-ல் இந்நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
- 45-க்கும் மேற்பட்ட அரிசி ரகங்களை உருவாக்கியுள்ளது.
கல்பனா பாலன்
- இந்தியாவின் கல்பனா பாலன் உலகிலேயே அதிக பற்களையுடையவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
- அவருக்கு வழக்கமாக இருக்கும் 32 பற்களை விட கூடுதலாக 6 பற்கள் உள்ளன.
பனிப்பாறை
- உலகின் மிகப்பெரிய பனிபாறையானது நகரத் தொடங்கியுள்ளது.
- இதற்கு A23a எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தூதரகம் மூடல்
- தில்லியில் உள்ள ஆப்கானிஸ்தானின் தூதரகம் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.
- 2021-ல் ஆப்கானிஸ்தானில் தலிபன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதினால் உலக நாடுகள் தலிபன்களின் ஆட்சியை அங்கீகரிக்கவில்லை.
- இந்தியாவும் இதன் நடவடிக்கையாக தூதரகத்தை மூடியுள்ளது.
தேசிய அரசியலமைப்பு தினம் (National Constitution Day) – Nov 26
- இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட தினம் தேசிய அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
- 2015 முதல் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
தேசிய பால் தினம் (National Milk Day) – Nov 26
National Cadet Corps Day (NCC Day) – Nov 26
November 23-24 Current Affairs | November 25 Current Affairs