Daily Current Affairs
Here we have updated 26th September 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
கட்டபெருமாள் முருகன்
- சுதந்திர போராட்ட வீரரும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனருமான ராம்நாத் கோயங்கோ நினைவாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் ராம்நாத் கோயங்கோ சாகித்திய சம்மான் விருதினை நடப்பாண்டிலிருந்து அறிமுகம் செய்துள்ளது.
- இவ்விருதானது தமிழ் இலக்கியத்திற்கு பங்காற்றிய எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
காசநோய் பரிசோதனை மையம் (Tuberculosis Testing Center)
- தமிழகத்தின் முதல் வட்டார அளவிலான காசநோய் பரிசோதனை சிகிச்சை மையமானது ஆவடியின் கொள்ளுமேட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் 86,000 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹிந்து கோயில்
- அக்டோபர் 05-ல் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் கட்டப்பட்ட சுவாமி நாராயண் அக்ஷர்நாம் கோவில் திறக்கப்பட உள்ளது.
- இந்தியாவிற்கு வெளியே அமைக்கப்பட்ட 2வது பெரிய இந்து கோவில் ஆகும்.
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவிற்கு வெளியே அமைக்கப்பட்ட முதலாவது பெரிய இந்து கோவில் கம்போடியாவின் அங்கோர்வாட் நகரத்தில் அமைந்துள்ளது.
ராணவ தின அணிவகுப்பு (Army Day Parade)
- ராணுவத்தின் 6 படைப்பிரிவுகளில் ஒன்றான மத்திய படைப்பிரிவு சார்பில் 2024-ஆம் ஆண்டுக்கான ராணுவ தின அணிவகுப்பானது உத்திரபிரதேசத்தின் லக்னோவில் நடைபெற உள்ளது.
- ஆண்டுதோறும் ஜனவரி 15-ல் ராணுவ தின அணிவகுப்பானது தில்லியல் நடைபெற்று வந்தது.
- தெற்கு படைப்பிரிவு சார்பில் 20232024-ஆம் ஆண்டுக்கான ராணுவ தின அணிவகுப்பானது பெங்களூவில் நடைபெற்றது.
சிலை திறப்பு
- செப்டம்பர் 25 தில்லியில் அந்த்யோதயா திவாஸ் தினத்தினை முன்னிட்ட 72 அடி உயர தீனதயாள் உபாத்யாய சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.
- பாரதி ஜனதாக கட்சியின் முன்னோடி கட்சியான பாரதிய ஜன சங்கத்தை துவக்கியவர்களுள் ஒருவரான தீனதயாள் உபாத்யாய பிறந்த தினமானது அந்த்யோதயா திவாஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
சி295 விமானம்
- ஏர்பஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்ட சி295 விமானமானது வதோதரா விமானப்படை நிலையத்திலுள்ள 11வது படைப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ளது.
லேவர் கோப்பை டென்னிஸ் 2003
- ஐரோப்பிய அணி & உலக அணிகளுக்கு இடையேயான 6வது லேவர் கோப்பை டென்னிஸ் போட்டியில் உலக அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி
- இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்று தங்கம் கைப்பற்றியுள்ளது.
- இலங்கை அணி வெள்ளியும், வங்கதேசம் வெண்கலமும் வென்றுள்ளது.
ஆசிய கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி
- ஆடவர் 10மீ ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் ருத்ராங்ஷ் பாட்டீல், திவ்யான்ஷ் சிங் பின்னர், ஐஸ்வரி பிரதாப் சிங் ஆகியோர் வெண்கலம் வென்றுள்ளனர்.
- ஆடவர் 10மீ ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் ஐஸ்வரி பிதாப் சிங் வெண்கலம் வென்றுள்ளனர்.
- ஆடவர் 25மீ ரேப்பிட் ஃபயர் பிஸ்டல் அணிகள் பிரிவில் ஆதர்ஷ் சிங், அனிஷ் பன்வாலா, விஜய்வீர் சித்து ஆகியோர் வெண்கலம் வென்றுள்ளனர்.
- துடுப்பு படகு போட்டியின் ஆடவர் ஃபோர்ஸ் இறுதி சுற்றில் ஜஸ்விந்தர் சிங், பீம் சிங், புனித்குமார், ஆஷிங் கோலியன் ஆகியோர் வெண்கலம் வென்றுள்ளனர்
- ஆடவர் குவாட்ரபிள் ஸ்கல்ஸ் இறுதி சுற்றில் சத்னம் சிங், பரிமிந்தர் சிங், ஜாக்ககர் கான், சுக்மித் சிங் ஆகியோர் வெண்கலம் வென்றுள்ளனர்.
உலக கருத்தடை நாள் (World Contraception Day) – Sep 26
- கருப்பொருள்: “The Power of Options“
உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம் (World Environmental Health Day) – Sep 26
- கருப்பொருள்: “Global Environmental Public Health Standing Up To Protect Everyone’s Health Each and Every Day“
அணு ஆயுதங்களை மொத்தமாக ஒழிப்பதற்கான சர்வதேச தினம் (International Day for the Total Elimination of Nuclear Weapons) – Sep 26
CSIR Day (Council of Scientific and Industrial Research) – Sep 26
- 26.11.1942-ல் CSIR உருவாக்கபட்ட தினத்தினை முன்னிட்டு கொண்டாடப்படுகிறது.