Daily Current Affairs
Here we have updated 27th March 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழகச் செய்தி
- மார்ச் 18-20 வரை துபையில் ஒன்பதாவது உலக தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் சர்வதேச பொருளாதார உச்சி மாநாடு நடைபெற்றது.
- இம் மாநாட்டில் 9 தமிழர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
- தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள சாலையை 6 வழித்தடமாக விரிவுபடுத்த மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் ரூ.200.30 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்
- மதுரை-திருநெல்வேலி-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை 7ஏ (புதிய நெடுஞ்சாலை எண் – 138) தூத்துக்குடி புறவழிச்சாலையாக தூத்துக்குடி துறைமுகத்தை அடைகிறது.
- மார்ச் 26, 27 ஆகிய தேதிகளில் மதுரை உலகத் தமிழ் சங்கக் கூட்டரங்கில் “வைகை இலக்கியத் திருவிழா – 2023” நடைபெறுகிறது.
- இத்திருவிழாவானது இலக்கியவாதிகள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் நடைபெறுகிறது.
தேசிய செய்தி
- மார்ச் 26-ல் ஒளிபரப்பான 99வது “மனதின் குரல்” நிகழ்ச்சியில் உடல் உறுப்பு தானம் பற்றி வலியுறுத்தினார்.
- உடல் உறுப்பு தானம் செய்வதற்கு 65 வயதுக்குள் இருக்க வேண்டுமென்ற வரம்பை நீடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- ஏப்ரல் 30-ல் ஒலிபரப்பாக உள்ள மனதில் குரல் “100வது மனிதில் குரல் நிகழ்ச்சி” ஆகும்
- 99வது “மனதின் குரல்” நிகழ்ச்சியில் பேசிய மோடி ஆஸ்கர் விருது பெற்ற “தி எலிஃபன்ட் விஸ்பர்ஸ்” ஆவண குறும்படத்தின் இயக்குநர் கார்த்திக் கோன்சால்வஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்கோ ஆகியோர் நாட்டிற்கு பெருமை சேர்த்தாக பாராட்டு தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சியில் பெண் சக்தியின் பங்களிப்பு மிகப்பெரியது எனவும் தெரிவித்துள்ளார்
- வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுநர் – சுரேகா யாதவ் (ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர்)
- சர்வதேச விருது பெற்ற “பாபா அணு ஆய்வு மைய அறிவியலாளர் – ஜோதிர்மயி மொஹந்தி
- விமானப்படை போர்ப் பிரிவில் கமாண்டர் நியமனம் பெற்றுள்ள முதல் பெண் அதிகாரி – ஷாலிஜாதாமி
- சியாச்சினில் பணியாற்றும் முதல் பெண் அதிகாரி – ஷிவா செளஹான் ஆகியோரை நினைவு கூர்ந்தார்
- மார்ச் 26-ல் பிரிட்டனின் 36 செயற்கைகோளுடன் எல்விஎம்-3 கனகர ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
- 23.10.2022-ல் இஸ்ரோவின் “நியூ ஸ்பேஸ் நிறுவனம்” மற்றும் பிரிட்டனின “இன் வெப்” நிறுவனம் இடையேயான ஒப்பந்தத்தின் கீழ் 36 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.
- மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் சுகன்யான் திட்டத்திற்குகேற்ப வகையில் எல்விஎம்-3 ராக்கெட் உள்ளதாக இஸ்ரோ (ISRO) தலைவர் தெரிவித்ததுள்ளார்.
- இஸ்ரோ தலைவர் – எஸ்.சோம்நாத்
- ISRO – Indian Space Research Organisation
- ISRO உருவாக்கம் – 15.08.1969
- காரைக்கால் மற்றும் இலங்கையில் காங்கேசன் துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து, ஏப்ரல் 29-ம் தேதி தொடங்கப்பட உள்ளது என அந்நாட்டின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்துறை அமைச்சர் நிமர் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
- ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரியாஸி மாவட்டத்தில் பக்கல் மற்றும் கெளரி பகுதி இடையே செனாப் ஆற்றின் குறுக்கே ரூ.1,486 கோடி செல்வில் “உலகின் உயரமான ரயில் மேம்பாலம்” கட்டப்பட்டுள்ளது.
- நீளம் – 1,315 மீ
- உயரம் – 359 மீ (ஆற்றுப் படுகையிலிருந்து).
- ஜம்மு-காஷ்மீரில் உத்தம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா இடையே ரூ.35,000 கோடி மத்திப்பிலான ரயில் வழித்தட இணைப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக உலகின் உயரமான பாலம் கட்டப்பட்டுள்ளது.
- இந்த ரயில் பாதையை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மார் 27ல் ஆய்வு செய்தார்
- ஏப்ரல் 17-26 வரை செளராஷ்டிரம்-தமிழ் சங்கமம் விழா குஜராத்தில் நடைபெற உள்ளன.
- இன்டெல் (Inter) நிறுவனத்தின் இணை நிறுவனர் கார்டன் மூர் (94) காலமானார்.
விளையாட்டுச் செய்தி
- மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்தியாவின் நிகாத் ஜரீன், லவ்வினா பேராாகைன் ஆகியோர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
- நிகாத் ஜரீன் (50கிலா எடை) – 2வது முறையாக சாம்பியன் பட்டமும், லவ்வினா பேராாகைன் முதன் முறையாக சாம்பியன் பட்டமும் வென்றுள்ளனர்
- இந்தியாவிற்கு ஏற்கனவே நிதுகங்காஸ் (48 கிலா எடை), சவீட்டி போரா (81 கிலா எடை) ஆகியோர் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளனர்.
- இதன் இந்தியாவிற்கு 4 தங்கம் கிடைத்துள்ளது. இந்தியாவிற்கு ஏற்கனவே 2006-ல் 4 தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஸ்விஸ் ஓபன் பாட்மிடன் சாம்பியன் போட்டி ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி இணையான சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஷெட்டி இணை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
முக்கிய தினம்
- சர்வதேச வலிப்பு நோய் விழிப்புணர்வு நாள் (or) ஊதா தினம்