Daily Current Affairs
Here we have updated 27th December 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
புதிய வகுப்பறை கட்டிடம்
- தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட ஆயிரம் புதிய வகுப்பறைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- இந்த வகுப்பறைகளானது ரூ.155 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளன.
நரேந்திர மோடி
- யூ டியூப்பில் 2 கோடிக்கு மேல் பின் தொடர்வோரைப் பெற்று பிரதமர் மோடி யூ டியூப்பில் அதிகம் பின் தொடர்வோர் முதல் அரசியல் தலைவர் புதிய சாதனையை படைத்துள்ளார்.
- இரண்டாவது இடத்தை பிரேசில் முன்னாள் அதிபரான ஜெயிர் பொல்சொனாரோவும், மூன்றாவது இடத்தை ராகுல் காந்தியும் பிடித்துள்ளன.
லக்னோ, உத்திரபிரதேசம்
- உத்திரப்பிரதேசம் லக்னோவில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு நகரம் அமைய உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- தமிழ்நாட்டில் ஜவுளி நகரம் திருவள்ளூரின் திருமழிசையில் அமைய உள்ளது.
- தமிழ்நாட்டின் அறிவுசார் நகரம் திருவள்ளூவர், ஊத்துக்கோட்டையில் அமைய உள்ளது.
இந்திய வானிலை மையம்
- வானிலை மையத்தின் 150வது ஆண்டு விழாவில் இந்திய வானிலை மையத்தின் புதிய இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது.
- இந்த இலச்சினையை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார்.
கேரளம்
- ISR வேலை செய்ய உகந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
- ஆண்கள், பெண்கள் வேலை செய்ய உகந்த மாநிலப் பட்டியலில் கேரளா முதலிடத்தை பிடித்துள்ளது.
- இரண்டாவது இடத்தினை மகாராஷ்டிராவும், மூன்றாவது இடத்தை ஆந்திராவும் பிடித்துள்ளன.
- ஆண்கள் வேலை செய்ய உகந்த நகரமாக பெங்களூரும், பெண்கள் வேலை செய்ய உகந்த நகரமாக கொச்சியும் உள்ளன.
ஐஎன்எஸ் இம்பால்
- பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் மசகான் கப்பல் கட்டம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள ஐஎன்எஸ் இம்பால் பிரமோஸ் ஏவுகணை தாங்கி போர்க்கப்பலானது இந்திய கடற்படையில் இணைந்துள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
- இந்தியா-ரஷ்யா இடையே எதிர்கால அணு உலைகளை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- இந்த அணு உலைகளானது தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அமைக்கப்பட உள்ளது.
கைபர்-பக்துன்கவா – தேர்தல்
- பாகிஸ்தானில் கைபர்-பக்துன்கவா மாகாணத்தில் தேர்தலில் போட்டியிடும் முதல் பெண் என்ற பெருமையை சவீரா பிரகாஷ் பெற்றுள்ளார்.
- சவீரா பிரகாஷ் புனேர் மகாணத்தின் பிகே25 தொகுதியில் போட்டியிட உள்ளார்
வீடுகள் விலை உயர்வு பட்டியல்
- நய்ட் ஃப்ராங்க் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள உலகளாவிய வீடுகளின் விலை உயர்வு பட்டியலில் முதலிடத்தை துருக்கியும், இரண்டாவது இடத்தை குரேஷியாவும், மூன்றாவது இடத்தை கீரிஸும் வகிக்கின்றன
- இப்பட்டியலில் இந்தியா 14வது இடத்தை பிடித்துள்ளது.
சர்வதேச மேஜை பந்தாட்ட கூட்டமைப்பு (ITTF)
- விட்டா டானி சர்வதேச மேஜை பந்தாட்ட கூட்டமைப்பு (ITTF) அறக்கட்டளையின் நிர்வாக குழு உறுப்பினராக தேர்வாகியுள்ளார். இப்பதவியை வகிக்கும் முதல் இந்தியர் ஆவார்
- 1926-ல் தொடங்கப்பட்ட International Table Tennis Federation-ன் தலைமையகமானது சுவிட்சர்லாந்தின் லொசேனின் உருவாக்கப்பட்டது.
அதிகம் சம்பளம் பெறும் பெண்கள் பட்டியல்
- பாட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து இந்தியாவில் அதிகம் சம்பளம் பெறும் பெண்கள் பட்டியிலில் முதலிடம் பிடித்துள்ளார்.
மான்செஸ்டர் சிட்டி அணி
- சவுதி அரேபியாவியல் நடைபெற்ற 2023ஆம் ஆண்டிற்கான பிபா (FIFA) உலககோப்பையை மான்செஸ்டர் சிட்டி அணி வென்றுள்ளது.
தொற்றுநோய் தயாரிப்புக்கான சர்வதேச தினம் (International Day of Epidemic Preparedness) – Dec 27
December 24-25 Current Affairs | December 26 Current Affairs