Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 27th January 2024

Daily Current Affairs

Here we have updated 27th January 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

குடியரசு தின விருதுகள்

Vetri Study Center Current Affairs - republic award

முதலமைச்சர் சிறப்பு விருது

  • ஆயி அம்மாள் என்ற பூரணம் (மதுரை)

அண்ணா பதக்கம்

  • சு.சிவக்குமார் (வட்டாச்சியர், ஸ்ரீவைகுண்டம்)
  • தே.டேனியல் செல்வசிங் – திருநெல்வேலி
  • யாசர் அராஃபத் – தூத்துக்குடி

சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்திக்கான விருது

  • சி.பாலமுருகன் – சேலம்

சிறந்த காவல் நிலையம்

  • மதுரை மாநகர எஸ்.எஸ்.காலனி காவல் நிலையம்

கோட்டை அமீர் பதக்கம் 

மத நல்லிணக்கத்திற்காக வழங்கப்படும் விருது

  • முகமது ஜீபைர் – கிருஷ்ணகிரி

நம்மாழ்வார் விருது

அங்கக விவசாயிகளுக்கான விருது

  • கோ.சித்தர் – தஞ்சாவூர்
  • கே.வெ.பழனிசாமி – திருப்பூர்
  • கு.எழிலன் – காஞ்சிபுரம்

குடியரசு தின அலங்கார ஊர்தி

Vetri Study Center Current Affairs - Kudavolai election

  • குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டின் சார்பாக சோழர் கால குடவோலை முறையை மையப்படுத்திய அலங்கார ஊர்தி பங்கேற்றது.
  • இதன் கருப்பொருள்: குடவோலை முறை மக்களாட்சியின் தாய்
  • இவ்வூர்தியில் உத்திரமேரூர் வைகுண்ட பெருமாள் கோவில் இடம் பெற்றது.
  • மேலும் மருதன் இளநாகனார் எழுதிய கயிறுபிணக் குழிசி ஒலை பாடல் ஒலிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின விழா

  • வளர்ந்த இந்தியா, ஜனநாயகத்தின் தாய் இந்தியா ஆகிய கருத்துருக்களில் நாட்டில் 75வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
  • டெல்லி கடமை பாதையில் வைத்து நடைபெற்ற குடியரசுதின விழாவில் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு கொடியேற்றினார்.
  • சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபரான இமானுவேல் மேக்ரான் கலந்து கொண்டார்.

முப்படைகள் குழு

Vetri Study Center Current Affairs - Captain Sandhya

  • குடியரசு தின விழா அணிவகுப்பில் முதல் முறையாக முப்படை வீராங்கனைகளின் குழுவானது கேப்டன் சந்தியா தலைமையில் பங்கேற்றுள்ளது.

தமிழ்நாடு BEAT கண்காட்சி

  • ஜனவரி 26-27 வரை சென்னையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தமிழ்நாடு BEAT கண்காட்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்துள்ளார்.
  • BEAT – Build Enterprises in Adi Dravidar & Tribes

அதிக கல்லூரிகள் – ஆய்வறிக்கை

  • அகில இந்திய உயர்கல்வி துறை ஆய்வின் 2021-22 கல்வி ஆண்டுக்கான ஆய்வறிக்கையில் நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகள் கொண்ட மாநிலங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
  • ஒன்றிய கல்வி அமைச்சகம் 2011 ஆண்டு முதல் இவ்வறிக்கையை வெளியிட்டு வருகிறது
  • முதலிடம் – உத்திரப்பிரதேசம்
  • இரண்டாம் இடம் – மகாராஷ்டிரா
  • மூன்றாம் இடம் – கர்நாடகா
  • இப்பட்டியலில் தமிழகத்திற்கு (2,829 கல்லூரிகள்) 5வது இடம் கிடைத்துள்ளது.

தொழுநோய் இலக்கு

  • 2027-ற்குள் இந்தியாவில் தொழுநோயை ஒழிக்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • காசநோய் ஒழிக்க இலக்கு – 2025
  • மலேரியா ஒழிக்க இலக்கு – 20230
  • அரிவாள் இரத்த சோகை நோய் ஒழிக்க இலக்கு – 2047

கேலோ இந்தியா விளையாட்டு போட்டி

  • பளுதூக்குதல் 55கி பிரிவில் எல்.தனுஷ் தங்கம் வென்றுள்ளார்.
  • துப்பாக்கி சுடுதல் டிராப் கலப்பு பிரிவில் நிலா ராஜா பாலா, யுகன் ஆகியோர் வெள்ளி வென்றுள்ளனர்.

இனப்படுகொலை நினைவு தினம் (Holocaust Memorial day) – ஜன 27

Vetri Study Center Current Affairs - Holocaust Memorial day

  • கருப்பொருள்: Fragility of Freedom.

January 25 Current Affairs | January 26 Current Affairs

Related Links

Leave a Comment