Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 27th July 2024

Daily Current Affairs

Here we have updated 27th July 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

அப்துல் கலாம்

ஜூலை 27-ல் அப்துல் கலாம் இறந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

Vetri Study Center Current Affairs - Abdul Kalam

  • காலம் 15.10.1931 – 27.07.2015
  • இந்தியாவின் 11வது குடியரசுத்தலைவர்
  • சிறப்பு பெயர் – இந்திய ஏவுகணை நாயகன்
  • விருதுகள் – பத்ம பூசன் (1981), பத்ம விபூசன் (1990), பாரத ரத்னா (1997)
  • நூல்கள் – அக்னி சிறகுகள், இந்தியா 2020
  • இயக்கம் – நான் என்ன தர முடியும் (2011)

முத்தமிழ் முருகன் மாநாடு

Vetri Study Center Current Affairs - Muthamizh Murugan Maanadu

  • அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடானது பழனியில் நடைபெற உள்ளது.
  • இதற்காக https://muthamizhmuruganmaanadu2024.com/ என்ற தனி இணையதளம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

முருகனின் அறுபடை வீடுகள்

  • பழனிமலை
  • சுவாமிமலை
  • பழமுதிர்சோலை
  • திருத்தணி
  • திருப்பரங்குன்றம்
  • திருச்செந்தூர்

வரி விதிக்கும் அதிகாரம்

  • அரசமைப்புச் சட்டத்தின் 2வது அட்டவணையின் 49வது சரத்தின்படி, நிலம் மற்றும் கட்டடங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  • கனிம வளங்களில் வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டென தமிழ்நாடு Vs இந்தியா சிமெண்ட்ஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சமூக நீதி OTT

Vetri Study Center Current Affairs - Periyar Vision

  • சமூக நீதிக்கான உலகின் முதல் OTT தளமானது பெரியார் விசன் (Periyar Vision) என்னும் பெயரில் திராவிடர் கழகம் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • மாநிலத்திற்கான முதல் OTT தளத்தை கேரள அரசு CSpace என்னும் பெயரில் தொடங்கியுள்ளது.
  • மாநிலத்திற்கான இரண்டாவது OTT தளத்தை மேகலயா அரசு Hello Meghalaya என்னும் பெயரில் தொடங்கியுள்ளது.

சமூக வானொலி நிலையம்

  • இந்தியாவின் 500வது சமூக வானொலி நிலையமானது ஆப்னா ரேடியோ 90.0 (APNA Radio 90.0) என்னும் பெயரில் மிசோரமில் தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்திய வானொலி ஒளிபரப்பு சேவை, மும்பை வானொலி சங்கம் மூலமாக 1923ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • இது 1936ஆம் ஆண்டு அகில இந்திய வானொலி என்றும் 1957ஆம் ஆண்டு முதல் “ஆகாச வாணி” எனவும் பெயர் மாற்றம் செய்ப்பட்டுள்ளது.

ஷிங்குன்லா சுரங்கப்பாதை

  • லடாக் மற்றும் ஹிமாச்சலப்பிரதேசம் இடையிலான ஷிங்குன்லா சுரங்கப்பாதைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.
  • இது உலகின் உயர சுரங்கப்பாதையாக மாற உள்ளது.

ட்ரிபூட்

  • கோவா கப்பல் கட்டும் தளமானது ட்ரிபூட் (Triput) எனும் போர்கப்பலை தயாரித்துள்ளது.

பெயர்மாற்றம்

  • ராஷ்டிரபதி பவனில் உள்ள தர்பார் ஹால் கணதந்திர மண்டபம் எனவும், அசோக் ஹால் அசோக் மண்டபம் எனவும் முகலாய தோட்டம் அமிர்த உதயான் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விவாட் விஸ்வாஸ் திட்டம்

  • மேல் முறையீட்டில் நிலுவையில் உள்ள சில வருமான வரி தகராறுகளைத் தீர்ப்பதற்காக விவாட் விஸ்வாஸ் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

பிரதமர் சூர்யா கர் முஃபட் பிஜிலி யோஜனா

  • 1 கோடி குடும்பங்கள் மாதத்திற்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவதற்கு உதவும் வகையில் கூரை சூரிய மின்சக்தி ஆலைகளை நிறுவ பிரதமர் சூர்யா கர் முஃபட் பிஜிலி யோஜனா தொடங்கப்பட்டுள்ளது.

நீதா அம்பானி

Vetri Study Center Current Affairs - Neetha Ambani

  • சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக நீதா அம்பானி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கான் குவெஸ்ட்

  • மங்கோலியாவிலுள்ள உலான்பாதார் (Ulaanbaatar) நகரில் கான் குவெஸ்ட் (Khaan Quest 2024) எனும் அனைத்து நாடுகள் பங்கேற்கும் ராணுவப் பயிற்சி நடைபெற்றுள்ளது.

ஜிம்பாப்வே

  • ஐ.நா.நீர் மாநாட்டில் 54வது நாடாக ஜிம்பாப்வே இணைந்துள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி

  • பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்கியுள்ளது.
  • 206 நாடுகள் பங்கேற்கின்றன.
  • ரஷ்யா, பெலாரஸ் நாடுகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற தடை விதிப்பு
  • இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் ஜோதியை அபினவ் பிந்த்ரா ஏற்றியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • இதுவரை இந்தியா 2020-ல் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தான் அதிகபட்சமாக 7 தங்க பதக்கங்களை வென்றுள்ளது.

 

Related Links

Leave a Comment