Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 27th June 2024

Daily Current Affairs

Here we have updated 27th June 2024 current affairs notes. These notes will be helpful for those who are preparing for competitive exams like TNPSC, TRB, and Police Exams.

அகழாய்வு கண்டுபிடிப்பு

Vetri Study Center Current Affairs - Keladi Sivagangai

  • கிருஷ்ணகிரி, சென்னானூரில் 4000 ஆண்டுகள் பழமையான புதிய கற்கால வெட்டுக் கருவி (6 செ.மீ  நீளம், 4 செ.மீ அகலம்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • சிவகங்கை, கீழடியில் தா என்ற எழுத்துடன் கூடிய பானை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பெருந்திட்டம்

  • ஏலகிரி மலை, கல்வராயன் மலை, வால்பாறை, சிறுமலை, கொல்லிமலை, செட்டிநாடு மலை, ஜவ்வாது மலை, தாளவாடி, ஹாசனூர், குத்தியா லத்தூர் போன்ற இடங்கள் சுற்றுலா பெருந்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

  • ஏலகிரி மலை – நீலகரி
  • கல்வராயன் மலை – கள்ளக்குறிச்சி
  • வால்பாறை – கோவை
  • சிறுமலை – திண்டுக்கல்
  • கொல்லிமலை – நாமக்கல்
  • செட்டிநாடு மலை -சிவகங்கை
  • ஜவ்வாது மலை – திருவண்ணாமலை
  • தாளவாடி, ஹாசனூர், குத்தியா லத்தூர் – ஈரோடு

அருவிகள் சுற்றுலா மேம்பாடு

  • புளியஞ்சோலை அருவி, புல்லாவெளி அருவி, கொட்டுவரை அருவி, கோட்டை நங்காஞ்சி அருவி, குட்லாடம்பட்டி அருவி போன்றவற்றை சுற்றலாவிற்கு மேம்படுத்த 10.20கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர்

Vetri Study Center Current Affairs - Rahul Gandhi

  • நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • இப்பதவி மத்திய அமைச்சருக்கு (கேபினட் அமைச்சர்) இணையானது.
    1977-ல் எதிர்கட்சி தலைவர் பதவிக்கு சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

  • லோக்பால், தேசிய தகவல் ஆணையர், சிபிஐ இயக்குநர், தேர்தல் ஆணையர்கள், தேசிய மனித உரிமைகள் ஆணையர், மத்திய விஜிலென்ஸ் ஆணையர் ஆகியோரை தேர்ந்தெடுக்குமு் குழுவில் எதிர் கட்சி தலைவர் பங்கு வகிப்பார்.

இட ஒதுக்கீடு ரத்து

  • கெளரவ் குமார் வழக்கின் கீழ் பீகார் அரசு அறிவித்திருந்த 65% இட ஒதுக்கீடானது  உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • கடந்த ஆண்டு மாநில அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கான இட ஒதுக்கீட்டை 50%லிருந்து 65%ஆக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
  • 1992-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் இட ஒதுக்கீட்டை 50%மேல் உயர்த்தக்கூடாது என்ற உத்தரவிட்டிருந்தது அதனை மேற்கோள்காட்டி பீகார் அரசின் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • 1990-ல் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு 69%மாக அதிகரிப்பு
  • 1992-ல் உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு ஷரத்து 16(4)ன் படி இட ஒதுக்கீடு 50%த்தை தாண்டக்கூடாது என உச்சநீதிமன்றம் அறிவித்தது.
  • 1993-ல் தமிழக அரசு இதற்கென மசோதாவை நிறைவேற்றியது.
  • 1994-ல் இந்த இட ஒதுக்கீடு 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.

செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம்

  • இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம் மகாராஷ்டிராவில் அமைக்கப்பட்டுள்ளது.
  • இதன் துணைவேந்தராக சைமன்மேக் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பள்ளி கேரளாவில் அமைக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் சிறந்த கல்லூரி

  • மத்தியபிரதேசம் மாநிலமானது பிரதமரின் சிறந்த கல்லூரி (Prime Minister College of Excellence) என்ற பெயரில் புதிதாக ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு கல்லூரி என்ற விகிதத்தில் 55 புதிய  கல்லூரிகளை தொடங்கவுள்ளது.

பெருமித மாதம்

  • ஜீன் மாதம் LGBTQ சமூகத்தால் பெருமித மாதமாக (Pride Month) அனுசரிக்கப்படுகிறது.

ஜூலியன் அசாஞ்சே

  • விக்கிலீக்ஸின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பிரிட்டன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

வுமன் பிரைஸ் விருது (Women Prize Award)

  • அமெரிக்க இலங்கை தமிழ் எழுத்தாளரான வி.வி.கணேஷ் ஆனந்தன் எழுதிய Botherless Night என்ற நூலிற்காக Women Prize Award வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய தினங்கள்:

  • சர்வதேச அன்னாசி தினம் (International Pineapple Day) – ஜூன் 27
    • கருப்பொருள்: Tropical harmony: Unity through diversity
  • உலக MSME தினம் (World MSME Day) – ஜூன் 27
  • ஹெலன் கெல்லர் தினம் (Hellen Keller Day) – ஜூன் 27

Related Links

Leave a Comment