Daily Current Affairs
Here we have updated 27th November 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
வி.பி.சிங்
- நாட்டின் முன்னாள் பிரதமரான வி.பி.சிங் சிலையானது சென்னை மாநில கல்லூரியில் தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ளார்.
- இந்தியாவின் 7வது பிரதமராக (2.12.1989 – 10.10.1990) பதவி வகித்தவர்.
- காவிரி நதிநீர் தீர்பாயம் உருவாக காரணமானவர்.
- பி.பி.மண்டல் கமிஷனின் பரிந்துரையான பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இட ஒதுக்கீட்டை அறிவித்தவர்.
- ஆங்கிலோ இந்தியன், எஸ்.சி., எஸ்.டி. நாடாளுமன்றம், சட்டமன்ற இடஒதுக்கீட்டினை 62வது சட்டதிருத்தம் மூலம் 10 ஆண்டுகள் மேலும் நீடித்தவர்.
கால்நடை தீவன ஆலை
- ரூ.33 கோடி மதீப்பீட்டில் கடலூரின் திட்டக்குடியில் கால்நடை தீவன ஆலையை உருவாக்கப்பட உள்ளது.
- 300 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்டதாக அமைக்கப்பட உள்ளது.
புவிசார் குறியீடு
- கோவா மாநிலத்தின் முந்திரிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
- போர்ச்சுகீயர்களால் முந்திரி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
மும்பை தாக்குதல் நினைவு தினம்
- நவம்பர் 26-ல் மும்பை தாக்குதல் 15வது நினைவு தினமானது அனுசரிக்கப்பட்டது.
- 26.11.2008-ல் மும்பை தாக்குதல் நடைபெற்றதில் 166பேர் மரணம் அடைந்துள்ளன.
சிலை திறப்பு
- 74வது அரசியல் சாசன தின விழாவையொட்டி உச்சநீதிமனற வளாகத்தில் நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலையை குடியசுத்தலைவர் திரெளபதி முர்மு திறந்து வைத்துள்ளார்.
- நவம்பர் 26, 1949 இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை இந்திய அரசியலமைப்பை ஏற்று கொண்ட நாளை அரசியல் சாசன விழாவாக கொண்டாடுகிறோம்.
- இந்திய அரசியலமைப்பானது 26.01.1950-ல் நடைமுறைக்கு வந்துள்ளது.
பெயர் மாற்றம்
- ஆயுஷ்மான் பாரத் சுகாதார நல்வாழ்வு மையங்களின் பெயரை ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு மையங்களிலும் ஆரோக்கியம் பரமம் தனம் என்ற வாசகமும் பொறிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதித்யா விண்கலம் (Aditya L1)
- பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட ஆதித்யா விண்கலமானது ஜனவரி 7-ல் எல்-1 சுற்றுப்பாதையில் நுழையுமென இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
- ஆதித்யா விண்கலமானது ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 2023 செப்டம்பர் 2-ல் விண்ணில் ஏவப்பட்டது.
- இஸ்ரோ தலைவர்: சோம்நாத்
சிறுதானிய உணவு திருவிழா
- இந்தோனேசியாவில் சிறுதானிய உணவு திருவிழா நடைபெறுகிறது.
- இந்தியா இந்த உணவு திருவிழாவிற்கான ஏற்பாட்டினை செய்துள்ளது.
காசி தமிழ் சங்கமம்-2
- வரும் டிசம்பரில் உத்திரபிரேசம், வாரணாசியில் காசி தமிழ் சங்கம்-2 நடைபெற உள்ளது.
- மத்திய கல்வி அமைச்சகம், உத்திரப்பிரதேச அரசுடன் இணைந்து நடத்த உள்ளது.
ஐரோப்பிய யோகாசனப் போட்டி
- இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டனின் சிறுவனான ஈஸ்வர் ஷர்மா (13வயது) ஐரோப்பிய யோகாசனப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
- மேலும் பாயின்ஸ் ஆப் லைட் விருதினையும் வென்றுள்ளார்.
இந்திய சீன மாஸ்டர் பேட் மிண்டன் போட்டி 2023
- ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ், சிராஜ் ஷெட்டி இணை இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
November 25 Current Affairs | November 26 Current Affairs