Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 27th November 2024

Daily Current Affairs

Here we have updated 27th November 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

சிறந்த கூட்டுறவு விருது

Vetri Study Center Current Affairs - Cooperative Bank Award

  • சிறந்த கூட்டுறவு வங்கி சேவைக்கான விருதானது தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறகுகள் திட்டம்

  • மூன்றாம் பாலித்தினவரான திருநங்கையர்களுக்கு கடன் உதவி வழங்க சிறகுகள் திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • தமிழ்நாடு திருநங்கை நலவாரியம் – 2008
  • பெண்கள், திருநங்கைகள் இலவச பயணம் – விடியல் பயணம்
  • திருநங்கைகள் & பிச்சையெடுப்பவர்கள் நலத்திட்டம் – ஸ்மைல் திட்டம் (Smile Plan) – 12.02.2022 (மத்திய அரசு)

நூல் வெளியீடு

  • திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினத்தின் வாழ்க்கை சரிதம் எனும் தலைப்பிலான நூலானது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் வெளியிடப்பட்டுள்ளது.

நினைவு தினம்

TNPSC Current Affairs - VP Singh statue

  • இந்திய நாட்டின் சமூக நீதி காவலரும், முன்னாள் பிரதமருமான வி.பி.சிங் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவின் 7வது பிரதமராக (2.12.1989 – 10.10.1990) பதவி வகித்தவர்.
  • காவிரி நதிநீர் தீர்பாயம் உருவாக காரணமானவர்.
  • மெரார்ஜீ தேசயால் உருவாக்கப்பட்ட பி.பி.மண்டல் கமிஷனின் பரிந்துரையான பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இட ஒதுக்கீட்டை அறிவித்தவர்.
  • ஆங்கிலோ இந்தியன், எஸ்.சி., எஸ்.டி. நாடாளுமன்றம், சட்டமன்ற இடஒதுக்கீட்டினை 62வது சட்டதிருத்தம் மூலம் 10 ஆண்டுகள் மேலும் நீடித்தவர்.

அரசியலமைப்பு தின விழா

  • நேற்று (அக்டோபர் 26) 75வதுஅரசியலமைப்பு தின விழா நம் அரசியலமைப்பு, நம் சுயமரியாதை (Our Constitution, Our Self-Respect) என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்பட்டது.
  • 2014 வரை சட்ட தினமாக கொண்டாடப்பட்டு வந்தது.
  • 2015லிருந்து அரசியலமைப்பு தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • நம்முடைய அரசியலமைப்பினை எழுதியவர் அம்பேத்கர் ஆவார்.
  • அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் இடம் பெறுவதற்காக யோகேந்திர நாத் மண்டல் அரசியல் நிர்ணய சபையில் இருந்து விலகினார்.
  • 1942-ல் அம்பேத்கர் உருவாக்கிய பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு (Scheduled Castes Federation) என்னும் கட்சியைச் சேர்ந்தவர்.

மொழிபெயர்ப்பு

  • அண்மையில் இந்திய அரசியலமைப்பு சமஸ்கிருதம், மைதிலி என்ற இரு மொழிகளில் மொழிபெயர்கப்பட்டுள்ளது.

சிறந்த குறும்பட விருது

  • IFFI 2024-ல் சிறந்த குறும்பட விருதினை குள்ளு (Gullu) என்ற திரைப்படம் வென்றுள்ளது.
  • இந்திய சர்வதேச திரைப்பட விழாவானது (IFFI) கோவாவில் நடைபெறுகிறது.

ஒரு தேசம், ஒரே சந்தா திட்டம்

  • ஆராய்ச்சி, அறிவுசார்ந்த ஆய்வுத்திரைகள் மற்றும் செய்திதாள்களுக்கு நாடு தழுவிய அணுகலை வழங்க ஒரு தேசம், ஒரே சந்தா திட்டம் என்ற போர்டலை உருவாக்கியுள்ளது
  • இப்போர்டலை கல்வித்துறை உருவாக்கியுள்ளது.

SAREX-24 பயிற்சி

  • இந்திய கடற்படையானது SAREX-24 பயிற்சியை கொச்சியில் நடத்தியுள்ளது.
  • இந்திய கடற்படை தலைவர் – எஸ்.பரமேஸ்
  • இந்திய கடற்படை தினம் – பிப்ரவரி 1

அடல் புதுமை இயக்கம்

  • அடல் புதுமை இயக்கமானது 31.03.2028 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • அடல் புதுமை இயக்கத்தால் உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் (Global Innovation Index) இந்தியா 39வது இடம் பிடித்துள்ளது.
  • அடல் புதுமை இயக்கமானது 2016-ல் நிதி ஆயோக் அமைப்பால் உருவாக்கப்பட்டது.

அப் கோயி பஹானா நஹி

  • பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தவிர்க்க பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைப்பானது அப் கோய் பஹானா நஹி (Ab koi pahana nahi) என்னும் பிரச்சாரத்தை துவக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள

  • நயி சேத்னாபஹல் பத்லாவ்ஹி (Nai Chetna – Pahal Biologi)  என்னும் பிரச்சாரத்தை ஊரக வளர்ச்சித்துறை பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தவிர்க்க துவங்கியுள்ளது.

பெயர் சூட்டல்

Vetri Study Center Current Affairs - Fengal

  • வங்கக்கடலில் உருவான சூறாவளிக்கு ஃபெங்கல் (Fengal) என்ற பெயரை சவூதி அரேபியா சூட்டியுள்ளது.

Related Links

Leave a Comment