Daily Current Affairs
Here we have updated 27th October 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பசுமை சிமெண்ட்
- தமிழக அரசு சார்பில் பசுமை சிமெண்ட் (Green Cement) தயாரிக்கப்பட உள்ளது.
- 1976 முதல் தமிழகத்தின் சிமெண்டுகளை TANCEM தயாரிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
- தமிழக சிமெண்ட் தயாரிக்கப்படும் இடங்கள் – ஆலங்குளம் (விருதுநகர் மாவடடம்), அரியலூர்
- தமிழக அரசின் சிமெண்ட் – அரசு, வலிமை (16.11.2021)
இடம் பெயர்வு அறிக்கை
- OECD வெளியிட்டுள்ள இடம் பெயர்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.
- இவ்வறிக்கையின்படி பணக்கார நாடுகளில் குடியுரிமை பெறுவதில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2021-ல் 1.3 லட்சம் இந்தியர்கள் பணக்கார நாடுகளில் குடியுரிமையை பெற்றுள்ளன.
- இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கும் நாடுகளில் முதலிடம் – அமெரிக்கா, இரண்டாமிடம் – ஆஸ்திரேலியா, மூன்றாமிடம் – கனடா ஆகியன உள்ளன.
- OECD – The Organization for Economic Cooperation and Development
3வது பொருளாதார நாடு
- 2030-ல் இந்தியாவானது உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கமென அமெரிக்காவின் எஸ் அண்ட் பி குளோபல் ஆய்வு நிறுவனம் (S&P Global Research Institute) தெரிவித்துள்ளது.
ஜம்ராணி அணை பல்நோக்கு திட்டம்
- உத்திரகாண்ட், ஜம்ராணி கிராமத்தில் பாயும் கோல்கா நதியில் ஜம்ராணி அணை பல்நோக்கு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
- கோல்கா நதியானது ராம்கங்கா நதியின் துணை ஆறு ஆகும்.
புதுதில்லி
- அக்டோபர் 27-ல் 7வது இந்திய மொபைல் காங்கிரஸ் கூட்டமானது புதுதில்லியில் நடைபெற உள்ளது.
கேரளா-காசர்கோடு
- இந்தியாவில் முதல் முறையாக கேரளாவின் காசர்கோடு மாவட்டம் தனது மாவட்ட நிர்வாகத்திற்காக சொந்தமாக மரம், மலர், பறவை, மற்றும் இனங்களை அறிவித்துள்ளது.
- மரம் – கஞ்சிரம்
- மலர் – பெரிய பொலதலி
- பறவை – வெண்வயிற்று கடல் பருந்து இனம்
- விலங்கு – கேண்டரின் ராட்சத மென் ஓடு கொண்ட ஆமை
ராஜ்குமார் ராவ்
- தேர்தல் ஆணையத்தின் தேசிய சின்னமாக ராஜ்குமார் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சோம்நாத் சுயசரிதை
- இஸ்ரோ தலைவர் சோம்நாத் அவர்களின் சுயசரிதையானது நிலவு குடிச்ச சிங்கங்கள் என்னும் பெயரில் நவம்பரில் வெளியாகியாக உள்ளது.
ஷியான் 6
- சீன ஆய்வுக்கப்பலான ஷியான் 6 இலங்கையின் ஹம்மதத்தா துறைமுகத்திற்கு வந்துள்ளது.
- எற்கனவே உளவுகப்பலான யுவான்வாங் 5 கப்பல் இலங்கைக்கு வந்து சென்றுள்ளது.
ஜப்பான்-ஒசாகா
- ஜி7 வர்த்தக அமைச்சர்கள் கூட்டமானது ஜப்பானின், ஒசாகாவில் நடைபெற உள்ளது.
- ஜி7 – அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், கனடா, பிரான்ஸ், ஜெர்மெனி, இத்தாலி
பீஷ்கெக் – கிர்கிஸ்தான்
- சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் (SCO) 22வது பிரதமர்கள் கூட்டமானது கிர்கிஸ்தானின் பீஷ்கெக்கில் நடைபெறுகிறது.
- SCO – 2001ல் உருவாக்கப்பட்டது.
- இதன் தலைமையகம் பெய்ஜிங்கில் உள்ளது.
- SCO-வின் உறுப்பு நாடுகள் – சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிரிகிஸ்தான், பாகிஸ்தான், உருசியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான்
டிரைடன்ட் – சீனா
- மேற்கு பசுபிப் பெருங்கடலில் நீருக்கடியில் நியூட்ரினோ கண்டறியும் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியான டிரைடெண்டினை (TRIDENT) சீனா தயாரிக்கிறது.
தேசிய விளையாட்டு போட்டி
- கோவாவில் நடைபெறும் 37வது தேசிய விளையாட்டு போட்டியினை பிரதமர் மோடி துவங்கி வைத்துள்ளார்.
- அக்டோபர் 26 முதல் நவம்பர் 9 வரை நடைபெற உள்ளது.
- மகளிர் சப்ரே தனிநபர் வாள்வீச்சுப் போட்டியில் சி.ஏ. பவானி தேவி தங்கம் வென்றுள்ளார்.
ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டி-சீனா
- பாண்ட்மின்டன் போட்டியில் (இறகுபந்து) மனிஷா ராமதாஸ் (தமிழகம்) வெண்கலம் வென்றுள்ளார்.
- கலப்பு இரட்டையர் பாண்ட்மின்டன் போட்டியில் சிவராஜன், நித்யஸ்ரீ (தமிழகம்) வெண்கலம் வென்றுள்ளனர்.
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி
- ஜார்க்கண்ட், ராஞ்சியில் மகளிர் 7 ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியானது நடைபெற உள்ளது.
- இப்போட்டியானது இந்தியா முதன் முறையாக நடத்த உள்ளது.
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன் ஷிப் போட்டி – தென்கொரியா
- ஜீனியர் மகளிர் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் சோனம் உத்தம் மஸ்கர், கௌதமி பனோத், ஜாஸ்மின் கவுர் தங்கம் வென்றுள்ளனர்.
- ஜீனியர் மகளிர் 10மீ ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் கெளதமி பனோத் தங்கம் வென்றுள்ளார்.
- ஜீனியர் ஆடவர் 10மீ ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் அபினவ் ஷா தங்கம் வென்றுள்ளார்.
இந்திய காலாட்படை தினம் (National Infantry Day) – Oct 27
- 1947-ல் ஸ்ரீ நகர் விமான நிலையத்தில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினரை வெளியேற்றிதன் நினைவாக அனுசரிக்கப்படுகிறது
உலக ஆடியோ விஷுவல் பாரம்பரிய தினம் (World Audiovisual Heritage Day) – Oct 27
- கருப்பொருள்: “Your Window to the World”