Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 27th September 2023

Daily Current Affairs

Here we have updated 27th September  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

ஊராட்சி மணி திட்டம் (Ouratshi Mani)

Vetri Study Center Current Affairs - Ouratshi Mani

  • தமிழகத்தில் கிராமப்புறங்களில் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டமாகும்.
  • ஊராட்சி இயக்கத்தில் ஊராட்சி மணி அழைப்பு மையமானது அமைக்கப்பட்டுள்ளது.
  • பொதுமக்கள் 155340 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
  • ஊராட்சி மணி என்பது மனுநீதிச் சோழனின் கதையை முன்னோடியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்

  • கிராமப்புறங்களில் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் வகுப்பறைகளை மேம்படுத்தும் திட்டமாகும்.
  • இத்திட்டத்தின் மூலம் 1000 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

குழந்தைநேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்

  • ஊராட்சிகளின் கணக்குகளை மேம்படுத்த செயல்பட்டு வந்த 11 வகை கணக்குகளை 3வகையான கணக்குகளாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்தியன் வங்கியுடன் இணைந்து tndrdpri.indianbank.in என்ற இணையதளமானது தொடங்கப்பட்டுள்ளது.

வரி செலுத்த புதிய இணையதளம்

  • ஊராட்சி தொகுதிகளில் உள்ளவர்கள் எளிதாக தம் பல்வேறு வகையான வரியை செலுத்த http//vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளமானது துவங்கப்பட்டுள்ளது.

அரசு மரியாதை (Government respect)

Vetri Study Center Current Affairs - Best Tourist Village

  • மூளைச் சாவு அடைந்தவருக்காக அளிக்கப்படும் தமிழக அரசின் முதல் மரியாதையானது தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த வடிவேல் என்பவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • சின்னமனூர் விபத்தில் மூளைச் சாவு அடைந்த வடிவேலின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தலைமையில் அரசு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த 23.09.2023 அன்று இறப்பதற்கு முன்பாக உடல் உறுப்புகளை தானம் அளிப்பவர்களின் தியாகத்தை மதிக்கும் வகையில் உடலுக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படுமென்று தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ள அறிக்கையின் கீழ் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

சிறந்த சுற்றுலா கிராமம் (Best Tourist Village)

Vetri Study Center Current Affairs - Best Tourist Village

  • தேசிய அளவில் 2023-ஆம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலா கிராமமாக உல்லாடா கிராமம் தேர்வாகியுள்ளது.
  • நீலகிரி மாவட்டத்தின் கேத்தி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக திருச்சி மாநகராட்சி தேர்வாகியுள்ளது.
  • இந்தியாவின் முதல் அரசியலமைப்பு கல்வியை அடைந்துள்ள மாவட்டமாக கொல்லம் தேர்வாகியுள்ளது.

அர்ச்சனா பட்நாயக் (Archana Patnaik)

Vetri Study Center Current Affairs - Archana Patnaik

  • தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் துறைச் செயலராக அர்ச்சனா பட்நாயக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • தமிழகத்தின் கனிம வளத்துறை ஆணையராக பூஜா குல்கர்னி நியமனம் செய்யப்பட்டள்ளார்.
  • தமிழகத்தின் தொழில் துறை ஆணையர் மற்றும் தொழில் வணிகத்துறை இயக்குநராக எல்.நிர்மல்ராஜ் நியமனம் செய்யப்பட்டள்ளார்.
  • நுகர்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையராக ஹர்சகாய் மீனா நியமனம் செய்யப்பட்டள்ளார்.

சுற்றுலாக் கொள்கை 2023 (Tourism policy)

Vetri Study Center Current Affairs - tamilnadu Tourism policy

  • தனியார் பள்ளி முதலீடுகளை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கென தனிக்கொள்கை 2023 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
  • சென்னை அருகே 100 ஏக்கர் பரப்பளவில் பொழுது போக்கு பூங்காவானது தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட உள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.

தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது 2021 (Dadasaheb Phalke Lifetime Achievement Award)

Vetri Study Center Current Affairs - Waheeda Rehman

  • பழம்பெரும் நடிகையான வஹீதா ரெஹ்மானுக்கு 53வது தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • இந்திய சினிமா துறையில் வழங்கபடும் மிக உயரிய விருதாக கருதப்படுகிறது.

இந்தோ-பசுபிக் பிராந்திய மாநாடு

Vetri Study Center Current Affairs - Indo-Pacific Regional Conference

  • தில்லியில் இந்தோ-பசுபிக் பிராந்திய தலைமை தளபதிகள் பங்கேற்கும் 13வது மாநாடானது நடைபெற்றுள்ளது.

நாசா விண்வெளி மையம்

Vetri Study Center Current Affairs - Osiris-Rex

  • அமெரிக்காவின் நாசா (NASA) விண்வெளி மையமானது ஓசைரிஸ்-ரெக்ஸ் (Osiris-Rex) விண்கலம்  மூலமாக பென்னு சிறுகோள் (Bennu Asteroid) கல், மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்துள்ளது.
  • 2016-ல் ஓசைரிஸ்-ரெக்ஸ் விண்கலமானது பென்னு சிறுகோளுக்கு அனுப்பட்டு 2018-ல் இச்சிறுகோளை அடைந்தது.

பென்னு சிறுகோள்

  • 1999-ல் லைனியர் ஆய்வு மூலம் நாசாவால் கண்டறியப்பட்ட சிறுகோள்
  • பூமியிலிருந்து 200கோடி கி.மீ தூரமாக அமைந்துள்ளது.
  • நீரை விட 30% அடர்த்தியை கொண்டது.
  • 6 ஆண்டுக்கு ஒரு முறை பூமியை நோக்கி வருகிறது.
  • இக்கோளுக்கு முதன் முதலில் 1999RQ36 என பெயரிடப்பட்டிருந்தது.

ஐ.நா.பொதுச்சபை கூட்டம் 

Vetri Study Center Current Affairs - United states UN General Assembly

  • அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடைபெற்ற 17வது ஐ.நா.பொதுச்சபை கூட்டமானது நடைபெற்றுள்ளது.
  • இம்மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார்.

ஆசிய கோப்பை போட்டி-சீனா

Vetri Study Center Current Affairs - Asian Games

  • குதிரையேற்ற போட்டியின் டிரெஸ்ஸேஜ் அணிகள் பிரிவில் சுதீப்தி ஹலிஜா, திவ்யகீர்த்தி சிங், விபுல்  ஹிருதய் செதா, அனுஷ் அகர்வல்லா ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர்.
  • 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா முதன் முறையாக தங்கம் வென்றுள்ளது.
  • பாய்மரப்படகு போட்டியில் மகளிர் டிஞ்ஜி ஐஎல்சி 4 பிரிவில் நேஹா தாக்கூர் வெள்ளி வென்றுள்ளார்.
  • ஆடவர் விண்ட்சர்ஃபர் ஆர்.எஸ்.எக்ஸ் பிரிவில் இபாதத் அலி வெண்கலம் வென்றுள்ளார்

உலக சுற்றுலா தினம் (World Tourism Day) – Sep 27

Vetri Study Center Current Affairs - World Tourism Day

  • கருப்பொருள்: “Tourism and Green Investment”

September 25 Current Affairs | September 26 Current Affairs

Leave a Comment