Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 28th January 2023

Daily Current Affairs

Here we have updated 28th January 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழகச் செய்தி

  • காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தமிழக அரசிற்கு பாராட்டு.
    • மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மார்க் மதுபான கடைகளில் மதுபானங்களை கூடுதலாக ரூ.10-க்கு விற்றுவிட்டு, காலி மதுபானங்களை திரும்ப ஒப்படைக்கும் பட்சத்தில் ரூ.10-ஐ திரும்ப வழங்கும் திட்டமாகும்.
    • நீலகிரியில் 78% பாட்டல்களும் வேலூரில் 98% பாட்டல்களும், திண்டுக்கல்லில் 91% பாட்டல்களும், தருமபுரியில் 99% பாடடல்களும், கிருஷ்ணகிரியில் 98% பாடல்களும் திரும்ப பெறப்பட்டுள்ளன.
  • பட்டியலினத்தவர்கள், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள் புத்தொழில்களைத் தொடங்க தனிநிதித் திட்டத்தினை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
  • பொதுத் துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கவனிக்க உருவாக்கப்பட்ட www.ccfms.tn.gov.in தனி இணைய தளத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • தமிழ்நாட்டில் 66 மாநில பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

தேசிய செய்தி

  • சிந்து நதிநீர்ப் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தத்தில் மாற்றங்களை மேற்கொள்ள முன்வருமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    • சிந்து, ராவி, சட்லஜ், பியாஸ், செனாப், ஜீலம் ஆகிய நதிகள் இமயமலையில் உற்பத்தியாகி இந்தியாவை கடந்து பாகிஸ்தானுக்குள் பாய்கின்றன.
    • சுதந்திரத்தின போது ஏற்பட்ட பிரிவினைக்கு பிறகு நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண உலக வங்கி முயற்சி செய்துது.
    • 1960 ஆண்டு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின்படி கிழக்கு நதிகளான ராவி, பியாஸ் சட்லஜ் ஆகியவற்றின் நீரை எவவித கட்டுபாடின்றி பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
    • மேற்கு நதிகளான சிந்து, செனாப், ஜீலம் ஆகியவற்றின் நீர் பெரும்பாலும் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டது. இந்திய சிறிய நீர்தேக்கங்களை அமைத்து கொள்ள இந்தியாவிற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
    •  ஜீலம் நதியின் நதியின் குறுக்கே கிஷண்கங்கை நீர் மின் உற்பத்தி நிலையத்தையும், செனாப் நதியின் குறுக்கே ராட்லே மின் உறபற்தி நிலையத்தையும் இந்தியா முடிவு செய்துது. இதற்கு பாகிஸ்தான் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்துது.
    • சிந்து நதிநீர் ஆணையத்தில் விவாதிக்கவும் கடந்த 5 ஆண்டுகளாக பாகிஸ்தான் மறுத்து வந்துது.
    • நீர் மின் உற்பத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராய நடுநிலைத்தன்மை கொண்ட நிபுணர் குழுவை அமைக்க பாகிஸ்தான் உலக வங்கியிடம் 2015-ல் முறையிட்டது. பின்னர் அந்த முடிவில் பின் வாங்கி இந்த விவகாரத்தை மத்தியஸ்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என கோரியது.
  • நாட்டில் புலிகள் எண்ணிக்கை 2,967ஆக குறைந்துள்தாக உச்சநீதிமன்றத்தி்ல் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    • 2018-ன் கணக்கெடுக்கெடுப்பின்படி 53 புலிகள் காப்பகங்களில் 2,967 புலிகள் உள்ளதாகவும், இது உலகில் உள்ள மொத்த புலிகளில் 70% என மத்திய அரசு தெரிவித்துள்ளது
  • 12 சிவிங்கிப் புலிகளை இந்தியாவிற்கு கொண்டுவர தென்னாப்பிரிக்க நாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
    • அரசின் லட்சிய திட்டத்தின் கீழ், நமிபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் 2022-செப்டம்பரில் கொண்டு வரப்பட்டு மத்தியபிரதேசம் குனோ தேசிய பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
    • உலகில் தற்போது 7,000 சிவிங்கி புலிகள் வாழ்கின்றன.
    • இவற்றில் பெரும்பாலானவை தென் ஆப்பிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா ஆகிய நாடுகளில் உள்ளன.
  • வேலையில்லா இளையஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்க சத்தீஸ்கர் மாநில முடிவு செய்துள்ளது.
  • 2023-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.8%மாக இருக்கும் என ஐ.நா. கணித்துள்ளது.
  • பிரிட்டிஷ் சீக்கிய பொறியாளரான நவ்ஜோத் சாஹ்னிக்கு “பாய்ண்ட்ஸ் ஆஃப் லைட்” விருதினை மின்சாரம் இல்லாமல் துணி துவைக்கும் இயந்திரத்தினை மலிவான விலையில் உருவாக்கியதற்காக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வழங்கியுள்ளார்.

உலகச் செய்தி

  • இந்திய அமெரிக்க விஞ்ஞானியான ராஜா ஜெ.சாரிக்கு அமெர்க்க விமானப்படையின் “பிரிகேடியர் ஜெனரல்” உயர் அஸ்தஸ்து வழங்க ஜோபைடன் பரிந்துரை.

விளையாட்டுச் செய்தி

  • ஆஸ்திரேலியா ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா-போபண்ணா ஜோடி ரன்னர் கேடயத்தை பெற்றது.

முக்கிய தினம்

  • தரவு தனியுரிமை தினம் (ஜனவரி 28).
    • கருப்பொருள் : “Think Privacy First”

Jan 25 Current AffairsJan 26 Current Affairs

Leave a Comment