Daily Current Affairs
Here we have updated 28th February 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழகச் செய்தி
- டான்சீட் திட்டத்தின் கீழ் தமிழக அரசின் சார்பில் புத்தாக்க நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
- டான்சீட் திட்டம் – தமிழ்நாடு அரசின் புத்தாக்க தொழில் ஆதார முதலீட்டு நிதி
- தமிழகம் முழுவதும் ரூ.2000கோடி மதிப்பிலான நிறைவுபெற்ற மற்றும் புதிய மருத்துவ கட்டமைப்புகளை தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
- மேலும் ரூ.1,136 கோடி மதிப்பீல் 44 புதிய மருத்துவனைகளின் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
- 2023-24-ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மார்ச் 20-ம் தேதி தாக்கல் செய்யப்படுமென சட்டபேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார்.
- பிப்ரவரி 27-ல் சென்னை-புதுச்சேரி இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கியது.
- புதுச்சேரி துறைமுகத்தை ஆழப்படுத்த ரூ.50 கோடி செலவிடப்பட்டுள்ளது.
- கைப்பேசி செயலி வழியாக தொலகாப்பியத்தை அறிந்து கொள்ளும் புதிய வசதியை “செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்” தொடங்கியுள்ளது.
- இது பார்வை திறனற்ற மாற்றுத்திறளாளிகளுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
- 2021-ம் ஆண்டு தொல்காப்பியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை செம்மொழி தமிழாய்வு நிறுவனம் வெளியிட்டது.
- “இஐஇப தொல்காப்பியம் எழுத்து” (Phonology and Morphology Mobile Application) என்ற பெயரில் எழுத்து அதிகாரத்தின் செயலியை கூகுள் ஆண்ட்ராய்டு “பிளே ஸ்டோடரில் வெளியிட்டுள்ளது.
- பிப்ரவரி 27-ல் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக வி.லட்சுமிநாராயணன் பதவி ஏற்றுள்ளார்.
- இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 58 ஆக உயர்வு
- இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் – சென்னை ஐஐடி இடையே கடல்சார் கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை உத்தண்டியில் மேற்கொள்ளப்பட்டது.
தேசிய செய்தி
- பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் (PM-KISAN) கீழ் 13வது தவணையாக ரூ.16,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு்ள்ளது.
- PM-KISAN : பிரதமர் விவசாயிகள் நிதியுதவித் திட்டம் (2019)
- தலா ரூ.2000 என 3 தவணைகளில் ஆண்டுக்கு விவசாயிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தும் திட்டம்
- தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவராக ம.வெங்கடேசன் மீண்டும் நியமிக்கபட்டுள்ளார்.
- மீன்களுக்கான நோய்கள் குறித்த தகவல்களை அறிய “ரிப்போர்ட்ஃபிஷ்டிசீஸ்” என்னும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றம் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாபலா தெரிவித்துள்ளார்.
- சென்னையில் உள்ள தேசிய உவர் நீர் மீன்வளர்ப்பு நிறுவனத்தில் மரபணு மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.
- சென்னையில் நீர்வாழ் விலங்கு நோய்களுக்கான தேசிய கண்காணிப்புத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது
- காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து “இறால்களுக்கான காப்பீட்டு திட்டத்தை” மத்திய ஆய்வுக் குழுவின் “உவர் நீர் மீன் வளர்ப்புக்கான மத்திய நிறுவனம்” தொடங்கியுள்ளது.
- இந்தியாவிலிருந்து 120-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
- நாட்டின் மீன் உற்பத்தியை 70லட்சம் டன்கள் அதிகரிக்கவும், மீன் ஏற்றுமதி வருவாயை 2024-25ஆம் ஆண்டுக்குள் ரூ. 1 லட்சம் கோடியாகவும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- தமிழக மீன் வளத்துறை மேம்பாட்டிற்கு 2014-ல் மத்திய அரசு சுமார் 3,000 கோடி வழங்கியுள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு 625 கப்பல்கள் வாங்கப்பட்டுள்ளன.
- மீன்பிடி கப்பல்களுக்கு ஜிபிஎஸ்கருவிகள் பொருத்துவதற்காக 5,000 மீனவர்களுக்கு 18 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
- விழுப்புரம், நாகை, சென்னை திருவொற்றியூர், கடலூர் ஆகிய இடங்களில் மீன்பிடித்துறைமுகங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- அக்னிபத் திட்டம் திட்டத்தினை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- அக்னிபத் திட்டம் – 14 ஜூன் 2022
- உத்திரபிரதேசத்தை சேர்ந்த மருத்துவர் பிரசாந்த் லவானியா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- 2015-ல் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டு 2018-ல் தோப்பூரில் இடம் தேர்வு செய்யபட்டது.
- 2019-ல் இந்திய பிரதமர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்
- கட்ட பணிக்கு நிதி கிடைப்பதில் சிரமம் காரணமாக தற்போத ராதாபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
- முன்னாள் தலைவர் – நாகராஜன்
- நாகலாந்து 82.42%, மேகாலயம் 75% வாக்குகள் பதிவாகியுள்ளன.
- ஆதார் விரல்ரேகை பதிவை சரிபார்க்க “விரல்ரேகையின் மையப் புள்ளிகளை வைத்து சரிபார்க்கும் புதிய முறை”யை தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிமுகம் செய்யப்பட்டள்ளது.
- UIDAI – Unique Identification Authority of India
- அறிமுகம் – 2009
- செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழி கற்றல் முறை மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன தொழில் நுட்பம், பதிவாகி உள்ள கைரேகையின் நேரடி சரிபார்ப்பை மதிப்பிடும்.
- கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் புதிதாக 74 விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- இந்தியாவில் மார்ச் 1, 2 தேதிகளில் ஜி20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு-ல் ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வாங் கலந்து கொள்கிறார். மேலும் 2023-ம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் நாற்கரக் கூட்டமைப்பின் (க்வாட்) மாநாட்டில் மோடி கலந்து கொள்வது ஆர்வலமாக உள்ளது என கூறினார்.
- க்வாட் கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள் இடம் பெற்றுள்ளன.
- இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மையை நிலைநாட்டும் நோக்கில் இக்கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.
- “ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்” நடைமுறையின் கீழ் பாதுகாப்புப் படையினருக்கு ஓய்வூதியம் வழங்குவதில் காலதாமத்தை ஏற்படுத்தி வருவதற்காக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்க நேரிடும் எனப் பாதுகாப்பு அமைச்சகத்தை உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
- பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி விளிம்பு நிலை மக்களின் நலனுக்காக உழைத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- இந்திரதனுஷ் திட்டதின் கீழ் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் துரிதமடைந்துள்ளன.
- நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகளை உருவாக்கவும், சீரமைக்கவும் திட்டமிடப்பட்டள்ளது.
- ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 2019-ம் வரை கிராமப் பகுதிகளில் 3 கோடி வீடுகளுக்கு அளிக்கப்பட்டு வந்த குடிநீர் குழாய் வசதி தற்போது 11 கோடியை கடந்துள்ளது.
உலகச் செய்தி
- பிரிட்டனின் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் குறைந்தபட்ச திருமண வயது 16லிருந்து 18ஆக அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்தி
- டெல்லியில் நடைபெறும் மகளிர் உலக குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ளும் 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு.
முக்கிய தினம்
- தேசிய அறிவியல் தினம்
- Theme : “Global Science for Global Wellbeing”